அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் லிஸ்ட்..: டிடி ஷிவானி பவித்ரா ஆல்யாவை முந்தி முதலிடத்தில் ரம்யா

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் லிஸ்ட்..: டிடி ஷிவானி பவித்ரா ஆல்யாவை முந்தி முதலிடத்தில் ரம்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RamyaPandian2020ம் ஆண்டில் தமேல் சேனல் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ரம்யா பாண்டியன் இடம் பெற்றுள்ளார்.

ராஜூ முருகன் இயக்கி தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் 4-வது சீசன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உள்ளார்.

2. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்னி ஹரிபிரியன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

3. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பவித்ரா லட்சுமி.

4. டிவி தொகுப்பாளினி & நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

5. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் அசத்தும் ஆயிஷா.

6. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி நாராயணன்.. பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானார்.

7. சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

8. விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

9. கிகி விஜய்… மானாட மயிலாட, நம்ம ஊரு கலரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.

10. தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன்.

11. அஞ்சனா ரங்கன், சைத்ரா ரெட்டி , பிரியங்கா குமார், வித்யா பிரதீப், ஆஷா கெளடா, ஷபனா ஷாஜகான், டெல்னா டேவிஸ், ஸ்ரேயா அஞ்சன், சம்யுக்தா மற்றும் ஹேமா பிந்து உள்ளிட்ட 20 நடிகைகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

Ramya Pandian wins most desirable tv artist in 2020

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya pandirajபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை தற்காலிகமாக ‘சூர்யா 40’ என்றே அழைக்கின்றனர்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இமான் இப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சூர்யாவின் தம்பி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்போதும் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40’ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர்.

படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.
படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க.. ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.

Director Pandiraj reply to Suriya fans

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க..; பிரபல ஊடகத்திற்கு கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட் அட்வைஸ்

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க..; பிரபல ஊடகத்திற்கு கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யுடன் தெறி, தனுஷுடன் மாரி, கொடி, சிம்புவுடன் ஈஸ்வரன், சூர்யாவுடன் சூரரைப்போற்று, ஜெயம்ரவியுடன் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் காளி வெங்கட்.

45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்…

“இது ஒரு விழிப்புணர்வு வீடியோ தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.

இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தன. ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.

சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை.

டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன்.

கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க”

என வீடியோ பதிவிட்டுள்ளார் காளி வெங்கட்.

இதை ஒரு ஊடகம் பகீர் பரபரப்பு தகவல் என செய்தியாக வெளியிட்டது.

அதை பார்த்த நடிகர் காளி வெங்கட் தன் ட்விட்டரில் இதை கண்டித்துள்ளார்.

இதோ அந்த பதிவு..

1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான் https://t.co/JtVUcPQYfg

Actor Kaali Venkat shared experience of battling covid 19

IMG_20210526_142122

PSBB பாலியல் : 27 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு பதட்டம்..; குற்றம் இழைத்தவர்கள் எச்சாதியினராயினும் தண்டிக்கப்படனும்.. – கமல்

PSBB பாலியல் : 27 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு பதட்டம்..; குற்றம் இழைத்தவர்கள் எச்சாதியினராயினும் தண்டிக்கப்படனும்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal (2)பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்..

“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை.

கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.

பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன்.

குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

MNM leader Kamal Haasan on PSBB school issue

5 வருசமாச்சு.. நிறைய பேர் பண்றாங்க..; பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்

5 வருசமாச்சு.. நிறைய பேர் பண்றாங்க..; பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால் அதிலுள்ள வாட்ஸ் அப் மேசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்துள்ளார்.

ஆனாலும் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை போலீசார் திரும்ப மீட்டனர்.

இந்த விசாரணையில்… கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

இரவில் வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

மேலும் மாணவிகளின் அந்தரங்க போட்டோக்களை அனுப்ப சொல்வாராம்.

இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அசோக்நகர் மகளிர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் ஐயா.. ராதாகிருஷ்ணன் வேண்டாம்.. இதெல்லாம் செய்யுங்க.. இல்லேனா என்னை தூக்குல கூட போடுங்க.. – மன்சூரலிகான்

ஸ்டாலின் ஐயா.. ராதாகிருஷ்ணன் வேண்டாம்.. இதெல்லாம் செய்யுங்க.. இல்லேனா என்னை தூக்குல கூட போடுங்க.. – மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khan actorஅய்யா மாண்புகு தமிழக முதலமைச்சர்
முத்தமிழறிஞரின் வித்தக புத்திரன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு நடிகர் மன்சூரலிகானின் மிகத்தாழ்மையான வேண்டுகோள்..

அய்யா எனை நீங்கள் பணயக்கைதியாக வைத்துக் கொண்டு இன்னும் பல்லாயிரக்கணக்கில் வருவார்கள் ஒரே ஒரு உத்தரவு இடுங்கள் இன்று முதல் கொரானா இல்லாத் தமிழகம்.

யாரும் முகக் கவசம் அணிய வேண்டாம்..

எல்லா மருந்துகள் ஊசிகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி எந்த நாட்டுக்காவது அனுப்பி விடுங்கள். மக்கள் விருப்பப்படி முன்புபோல் வாழலாம்.

வெளிநாடுகளிலிருந்து யாரும் வரலாம். எந்த ஈபாஸ் எறும்பு பாஸ் தேவையில்லை என்று உத்தரவு போடுங்கள்.

T.V.பத்திரிக்கை எல்லா ஊடகங்களிலும் எந்த கொரானா செய்தியும் போடாதீர்கள்.

முக்கியமாக இந்த செல்போனில் எடுத்தவுடன் ஒரு அறு அறுக்கறாங்களே அதை முதலில் தயவுசெய்து நிறுத்தச் சொல்லுங்கள்.

அந்த வசனத்தை கேட்டே பல பேர் செத்துட்டான் அய்யா.

அய்யா சென்றமுறை கொரானா வில் எந்த மருந்து ஊசியில்லாது கோடிக்கணக்காணோர் குணமானார்களா?

இல்லையா வெறும் கபசுரக்குடிநீர் சிற்றரத்தை அதிமதுரம் திப்பிலி இஞ்சி சுக்கு பனங்கற்கண்டுடன் காய்ச்சி குடித்து மக்கள் மகிழ்ச்சியாக வென்றார்கள்.

தமிழ்நாடு அரசின் கலைஞர் கொண்டுவந்த சித்த மருத்துவத் துறையை பயன்படுத்துங்கள்.

நாம் வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யலாம்.

அய்யா உண்மையில் உலகமே உங்களை திரும்பி பார்க்கும் உச்சிமுகர்ந்து பாராட்டும்.

ஒரு மரணம் கூட சம்பவிக்காது. அப்படி நிகழ்ந்தால் என்னை தூக்கிலிடுங்கள்.

தாங்கள் மிசா காலத்தில் சிறையில் கடுமையாக கொடுமை செய்யப்பட்டு உயிர் பிழைத்து எதையும் தாங்கும் மாமனிதராய் இன்று துளிர்க்கிறீர்கள்.

மாமன்னன் அக்பர் 9 வயதில் அரியணை ஏறியவர் பலபேரிடம் ஆலோசனை கேட்பாராம். ஆனால் சரியாக சுயமுடிவெடுப்பாராம்.

அதுபோன்று தாங்கள் நிச்சியம் தமிழ்நாட்டை ஏன் உலகத்தையே காக்க இந்த உத்தரவு போடுங்கள்.

மக்கள் வெந்து மடிகிறர்கள்.. மருந்து மாபியாக்களும் பல நாட்டு முக்கியஸ்தர்களும் சேர்ந்து திட்டமிட்ட சதியில் இந்தியா பிணக்காடாகிக் கொண்டிருக்கிறது.

தடுங்கள் ப்ளீஸ். இந்த மருந்துகள் உட்கொண்டபிறகுதான் கரும் பூஞ்சை நோய் மக்களை பீடித்திருக்கிறது.

தமிழகத்தில் பல நாடுகளிலிருந்து வந்து முதலீடு செய்ய பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

கொரானா இல்லாத் தமிழகம்.. கொத்துக் கொத்தாய் மக்கள் கையில் பணம்.

இதில் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள்.

மக்கள் இதை ஆதரித்தால் iSupport MAN Sooralikhan என hastake செய்யுங்கள்.

அய்யா கடைசியாக ஒரு முக்கியமான வேண்டுகோள்.

இந்த ராதாகிருஸ்ணனை (சுகாதாரத் துறை செயலாளர்) மட்டும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

உரிமையுடன்…

உவகையுடன் தமிழக மக்கள். இந்திய மக்கள் மீண்டெழ முதலமைச்சரின் உத்தரவை மக்கள் எதிர்பார்க்கிறர்கள்.

மேலும் ஆலயங்களை
இறைவனின் இல்லங்களை பூட்டி வைக்காதீர்கள்.

கோயில் மணியோசை கேட்கட்டும்..

பெரியாரின் பெயரன் ஸ்டாலின் நீண்ட நல்லாட்சி தரட்டும்.

உண்மையுடன்…

நடிகர் இயக்குனர் மன்சூரலிகான்

கூடுதல் தகவல்…

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து, அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டார். அந்த மனு தள்ளுபடி ஆனது.

இதன் பின்னர் இது தொடர்பான கோர்ட் விசாரணையில்… “நிபந்தனை அடிப்படையில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்குகிறேன்.

அவர் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் ரூ.2 லட்சம் காசோலை எடுத்து வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Mansoor Ali Khan requests TN cm Stalin

More Articles
Follows