கொரோனா நிவாரண நிதியாக ரூ. 70 லட்சம் கொடுத்த ராம்சரண்

Ram charan donates Rs 70 lakhs for Corona relief கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர்.

பிரதமர் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஜன சேனா கட்சியின் நிறுவனரும், நடிகருமான பவன் கல்யான் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ. 2 கோடி அளிப்பதாக அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், பிரதமரின் நிவாரண தொகைக்கு ஒரு கோடியும் கொடுக்கிறார்.

இந்த நிலையில் இவரின் அண்ணன் சிரஞ்சிவியின் மகனும் நடிகருமான ராம் சரண் அவர்களும் தன் பங்கு நிவாரண நிதியை அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிரதமரின் நிவாரணத்தொகைக்கு ரூ.70 லட்சம் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ராம் சரண்.

Ram charan donates Rs 70 lakhs for Corona relief

Overall Rating : Not available

Latest Post