பிறந்த குட்டி தேவதையின் பெயர் என்ன.? ராம்சரண் – உபாசனா அறிவிப்பு

பிறந்த குட்டி தேவதையின் பெயர் என்ன.? ராம்சரண் – உபாசனா அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர்.

ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்சரண் பேசுகையில்…

“உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்களுடைய குழந்தை கடந்த இருபதாம் தேதியன்று பிறந்தார். தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள்.

டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹா, டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி, தேஜஸ்வினி உள்ளிட்ட சிறந்த சிகிச்சையை வழங்கிய மருத்துவ குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆதரவினை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.

மகள் பிறந்த செய்தியை கேட்டவுடன் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நிலையான ஆதரவையும், நிபந்தனையற்ற அன்பையும் செலுத்தி வரும் ரசிகர்கள்.. அதனை என்னுடைய மகளுக்கும் தருவார்கள் என நம்புகிறேன்.

என் மகளுக்கு அவள் பிறந்த தேதியிலிருந்து 21 ஆம் தேதியன்று பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம். அவளுக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம்.

அது என்ன பெயர் என்பதனை விரைவில் உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்.

எங்களுடைய குட்டி தேவதை வீட்டிற்கு வருகை தந்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.

இந்த தருணத்தில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால்… என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனது மகளைப் பற்றி மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மனமுவந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ராம்சரண் - உபாசனா

Ramcharans Upasanas new born baby name update

‘புட்ட பொம்மா..’ பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடி வாழ்த்திய பிரபல நாயகி

‘புட்ட பொம்மா..’ பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடி வாழ்த்திய பிரபல நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் விஜய் தற்போது நடித்துவரும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நா ரெடி என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியானது.

இந்த நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே விஜய்க்கு ஒரு வீடியோ பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே

அந்த வீடியோ ‘பீஸ்ட்’ பட சூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘புட்ட பொம்மா…’ என்ற பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா இருவரும் இரு குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் வீடியோவாக உள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்

Beast heroine wishes Vijay with Butta Bomma dance video

நடிகர் கவின் பிறந்தநாளை கொண்டாடிய டான்ஸ் மாஸ்டர் சதீஷ் & டீம்

நடிகர் கவின் பிறந்தநாளை கொண்டாடிய டான்ஸ் மாஸ்டர் சதீஷ் & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாடா’ படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கவின் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் ‘அயோத்தி’ பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவின் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை நேற்று ஜூன் 22-ம் தேதி கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கவின்

actor kavin celebrate his birthday in shooting spot

‘மாமன்னன்’ உதயநிதிக்கு ‘ஏஞ்சல்’ மூலம் வந்த தடை.; கடைசி படம் ரிலீசாகுமா?

‘மாமன்னன்’ உதயநிதிக்கு ‘ஏஞ்சல்’ மூலம் வந்த தடை.; கடைசி படம் ரிலீசாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் ‘மாமன்னன்’.

‘மாமன்னன்’ படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்து, 20 சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.

உதயநிதி ‘மாமன்னன்’ படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்துவருவதால் ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும்.

மேலும், ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்ட தகவல்களை நமது FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து.

இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Udhayanidhi’s maamannan movie issue highcourt new order

‘லியோ’-வில் விஜய் பாடிய ‘நா ரெடி…’ படைக்கும் சாதனை

‘லியோ’-வில் விஜய் பாடிய ‘நா ரெடி…’ படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

‘லியோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான நேற்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் நேற்று மாலை 6.30 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

இந்நிலையில், இப்பாடல் வெளியாகி இதுவரை பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனை படக்குழு கொண்டாடும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

விஜய்

‘leo’ Naa Ready songs It crossed ten million views

இந்துஜாவுடன் இணைந்து ‘பார்க்கிங்’ போடும் ஹரீஷ் கல்யாண்

இந்துஜாவுடன் இணைந்து ‘பார்க்கிங்’ போடும் ஹரீஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஹரிஷ் கல்யாண், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரில்லர் ட்ராமாவான ’பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.

மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ்.சினிஷ் (’பலூன்’ பட இயக்குநர் மற்றும் தெலுங்கில் ’டிக்கிலூனா’ மற்றும் ’விவாஹா போஜனம்பு’ ஆகியவற்றின் தயாரிப்பாளர்) பேஷன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கிங்

எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்கே ராகுல் (கலை), டி முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு (சண்டைப் பயிற்சி), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), DTM (VFX), ராஜகிருஷ்ணன் M.R. (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), Yellowtooths (வடிவமைப்பு), ராஜேந்திரன் (படங்கள்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

பார்க்கிங்

Harish Kalyan and Indhuja starring Parking

More Articles
Follows