ராம் சரணின் குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்த தாத்தா சிரஞ்சீவி

ராம் சரணின் குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்த தாத்தா சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்ததையடுத்து ராம் சரண் – உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.

இந்நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.

ராம் சரணின் குழந்தைக்கு ‘க்ளின் காரா கொனிடேலா’ என பெயர் வைத்துள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவி இது தொடர்பான புகைப்படத்தையும், குழந்தையின் பெயரையும் தனது ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராம் சரண் - உபாசனா

Chiranjeevi reveals Ram Charan and Upasana’s daughter name

‘இந்தியன் 2’ ரிலீஸ் மற்றும் ‘இந்தியன் 3’ பட தகவல்கள் இதோ…

‘இந்தியன் 2’ ரிலீஸ் மற்றும் ‘இந்தியன் 3’ பட தகவல்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியன் -2’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும், உதயநிதி தன்னுடைய பேட்டியில் இந்தியன் 2 குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியில்.. ‘இந்தியன் 2’ படம் சிறப்பாக வந்துள்ளது. படத்திற்கு நிறைய காட்சிகளை எடுத்திருப்பதால் ‘இந்தியன் 3’ படத்திற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

shankar planning to make Indian 3 says Udhayanidhi

உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி; தனபால் தடாலடி

உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி; தனபால் தடாலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் நேற்று (29-06-2023) திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘மாமன்னன்’ படம் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டியளித்துள்ளார்.

அதில் தனபால் பேசியது, ‘மாமன்னன்’ திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 1972-ல் இருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். அம்மாவின் தீவிர விசுவாசி நான். என்னுடைய உழைப்பைப் பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர், அமைச்சர், சபாநாயகர் என பொறுப்புக் கொடுத்து அழகு பார்த்தார்கள்.

என்னுடைய சாயலில் “இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்து வெற்றி” என்று கூறினார்.

ex tamilnadu assembly speaker dhanapal interview regarding udhayanidhi’s mamannan movie

பாப் பாடலின் இசை ராணி மடோனா மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்கள் அதிர்ச்சி

பாப் பாடலின் இசை ராணி மடோனா மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64).

இவரது பாடல்களுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஜூன் 24, சனிக்கிழமையன்று, மடோனாவுக்கு ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டது.

மடோனா ‘செரிஷ்’ படத்தில் நடித்த போது ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அங்கு ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது.

அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது, இருப்பினும் அவர் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.

அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்..

கனடா நாட்டின் வேன்கூவர் நகரில், “செலிப்ரேஷன் டூர்” என்ற பெயரில் ஜூலை 15 2023 முதல் ஜனவரி 30 2024 வரை ஒரு உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது.

அவரது உடல்நிலை சரியில்லாததால் பாடகரின் சுற்றுப்பயணம் மற்றும் பிற வணிகப் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேலும், புதிய சுற்றுப்பயணத்தின் தேதி மற்றும் மறு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Madonna was admitted to ICU after following bacterial infection

பரபரப்பான ‘பர்ஹானா’-வை தியேட்டரில் பார்க்கலையா.? அப்போ ஓடிடி-யில பாருங்க.!

பரபரப்பான ‘பர்ஹானா’-வை தியேட்டரில் பார்க்கலையா.? அப்போ ஓடிடி-யில பாருங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் ‘ஃபர்ஹானா’.

இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி, அனுமோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு மற்றும் VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஃபர்ஹானா’ திரைப்படம் வருகிற ஜூலை 7-ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும், இதனை சோனி லைவ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

பர்ஹானா

farhana movie ott release date announcement

50 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா..!? பரபரப்பு போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

50 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா..!? பரபரப்பு போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மிரியம் மா’.

இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

மிரியம் மா

இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

மிரியம் மா

பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ‘மிரியம் மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரேகா கர்ப்பிணியாக இடம்பெற்றுள்ள தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மிரியம் மா

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பெண்ணாகப் பிறந்து ஒவ்வொருவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக்கோடான இவ்விசயத்தில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் சவால்கள் தான் படத்தின் கதை,” என்று கூறினார். வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மிரியம் மா

actress rekha’s miriam maa movie first look released

More Articles
Follows