ராம்சரண் – ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் புதிய படம்.; இயக்குனர் இவரா.?

ராம்சரண் – ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் புதிய படம்.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC 15 என்று அழைக்கப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ராம்சரண்.

இந்த படத்திற்கு சமீபத்தில் கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த நிலையில் ராம் சரணின் 16 வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

RC 16 என்று அழைக்கப்படும் இந்த படத்தை புஜ்ஜி பாபு சனா என்பவர் இயக்குகிறார்.

இவர் வைஷ்ண தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி நடித்த ‘உப்பெண்ணா’ என்ற படத்தை இயக்கியவர். இந்த படம் 2021 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது ராம்சரண் மற்றும் புஜ்ஜிபாபு இணையும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு 2023 செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

Ram Charan – AR Rahman joins for a new film

குரு ஷங்கர் வழியில் சிஷ்யர் நீலேஷ்.; நயன்தாரா 75 சூட்டிங் & ஆர்ட்டிஸ்ட் அப்டேட்

குரு ஷங்கர் வழியில் சிஷ்யர் நீலேஷ்.; நயன்தாரா 75 சூட்டிங் & ஆர்ட்டிஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்.

மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர்.

மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

(இயக்குனது ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டம் தான்.. அவரின் உதவியாளர் இயக்கும் படம் என்றால் அதுவும் பிரமாண்ட படமாக தானே இருக்கும்..)

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன் ISC,
இசை: தமன் எஸ்,
கலை: ஜி. துரைராஜ், படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி,
வசனம்: அருள் சக்தி முருகன்,
கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜய் ராகவன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: லிண்டா அலெக்சாண்டர், பப்ளிசிட்டி டிசைன்: வெங்கி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

Nayanthara 75 shooting and artist update

சினிமாவில் தன் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் வெங்கட் பிரபு

சினிமாவில் தன் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் வெங்கட் பிரபு.

இவர் இயக்கிய சென்னை 28 மற்றும் அதன் இரண்டாம் பாகம் இரண்டு மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் அஜித் நடித்த ‘மங்காத்தா’ மற்றும் சூர்யா நடித்த ‘மாஸ் என்ற மாசிலாமணி’ & சிம்பு நடித்த ‘மாநாடு’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘கஸ்டடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நாயகனாக நாக சைதன்யா நடிக்க நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார்.

காவல் துறையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இருவரும் இசை அமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் தன் மகள் ஸ்ரீ ஷிவானியை பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்துகிறார் வெங்கட் பிரபு.

இந்த பாடல் ஏப்ரல் 10 வெளியாக உள்ளது.

Venkat Prabhu’s daughter make her film debut

எனக்கு போட்டி நானே தான்.; ஒரே நாளில் மோதும் விமலின் இரண்டு படங்கள்

எனக்கு போட்டி நானே தான்.; ஒரே நாளில் மோதும் விமலின் இரண்டு படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சப்தமில்லாமல் சின்ன பட்ஜெட்டில் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விமல்.

இவரது நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ‘விலங்கு’ வெப் சீரீஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நீண்ட காலமாக இவரது நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆகாமல் இருந்த இரண்டு படங்கள் தற்போது வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குலசாமி’ மற்றும் ‘தெய்வ மச்சான்’ ஆகிய 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

விமல் நடிப்பில் நடிகர் சரவண சக்தி, இயக்கத்தில் உருவான படம் ‘குலசாமி’. தான்யா ஹோப் நாயகியாக நடிக்க, நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.

இத்துடன்…

விமலின் தெய்வ மச்சான் என்ற படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிக் பாஸ் அனிதா சம்பத், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், பாண்டிய ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்ணன் தங்கையின் பாசத்தை மையப்படுத்தி சென்டிமெண்ட்டாக உருவாகியுள்ளது.

தெய்வ மச்சான் & குலசாமி ஆகிய இரண்டு படங்களுமே வரும் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vimal’s 2 films to release on same day

Motion Poster of the upcoming Tamil Film #KULASAMI 🔥🔥
All the Best team..💐
https://t.co/R2Z1e0C91Y

@ActorVemal @TanyaHope_offl @Gopikri_edit @SanjitSivStudio
@SanjitShiva @Mrtmusicoff
#MIK_Productions #SharavanaShakthi #Mahalingam @PROThiyagu

The Trailer of @ActorVemal’s #DeivaMachan hits 1 million + views on Youtube, Watch the film in theatres from April 21st 🤩

#DeivaMachanTrailer :

https://t.co/xO9Gc6ocLH

#DeivaMachanFromApril21

@uday_Product @Magic_Touch_Pic @Bala_actor @martyn_NK17 @EditorElayaraja

ஐசரி கணேஷின் 100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி.; டைரக்டர் & ஹீரோயின் அப்டேட்.!

ஐசரி கணேஷின் 100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி.; டைரக்டர் & ஹீரோயின் அப்டேட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ‘தீ வாரியர்’ என்ற படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் பரிட்சயமானார்.

இதன் பின்னர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘வணங்கான்’ படத்தில் நாயகியாக கீர்த்தி நடித்து வந்தார்.

ஆனால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதால் கீர்த்தியும் விலகினார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி ஷெட்டி.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க மிஷ்கினின் உதவியாளர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க உள்ளார்.

இந்த படம் மிக பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.

Heorine and Director update for Jayam Ravis mega budget film

டவுளத்தான அறிவிப்பு.; ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட அப்டேட்

டவுளத்தான அறிவிப்பு.; ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக கிராமத்து மண் மனம் மாறாமல் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முத்தையா.

குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் என மண்ணின் பெருமைகளை மற்றும் பெண்ணின் பெருமைகளை தவறாமல் இவரது படங்கள் பேசி வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

பெரும்பாலும் சிட்டி பையனாக.. ரொமான்டிக் பாயாக நாம் பார்த்து ரசித்த ஆர்யா-வை இந்தப் படத்தில் முழுக்க முழுக்க கிராமத்துக் காளையாக காட்டியிருக்கிறார் முத்தையா.

ஆர்யாவின் 34வது படமாக இது உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் தான் ஆர்யா நடித்த இந்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வெளியானது.

இதில் நாயகியாக ‘வெந்து தணிந்தது காடு’ பட புகழ் சித்தி இத்னானி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது.

இந்த நிலையில் நாளை ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் தொடர்பாக டவுளத்தான அறிவிப்புக்காக காத்திருங்கள் என தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Await for our Dowlathana Announcement from tomorrow

#KatharBashaEndraMuthuramalingam
#KEMTheMovie

@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @jungleemusicSTH @ActionAnlarasu @Kirubakaran_AKR @ertviji @venkatraj11989 @veeramani_art @iamSandy_Off @shobimaster @AlwaysJani #BabaBaskar #Sheriff @dancersatz @teamaimpr

Kathar Basha Endra Muthuramalingam announcement tomorrow

More Articles
Follows