கலைஞரை சந்தித்துவிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி மீட்டிங்

Rajinikanth and karunanidhiகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 165 என தலைப்பிட்டுள்ளனர்.

டார்ஜிலிங் மலைப் பகுதியில் இப்பட முதல் கட்ட சூட்டிங்கை படமாக்கினார்கள்.

பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஜினி, அரசியல் நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார்.

அதில் ரஜினிகாந்த் – சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மீண்டும் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.

சென்னை வந்தபின்னர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளார்.

அதன்பின்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சில தினங்களுக்கு பின் சென்னையில் நடக்கவுள்ள சூட்டிங்கில் ரஜினி கலந்துக் கொள்கிறார்.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது வரை 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post