ரியலாவே ரஜினி கெத்து தான்.; விலைமதிப்பற்ற போட்டோவை பகிர்ந்த ஐஸ்வர்யா

ரியலாவே ரஜினி கெத்து தான்.; விலைமதிப்பற்ற போட்டோவை பகிர்ந்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை தாண்டியும் நிஜ வாழ்க்கையிலும் ரஜினியை உயிருக்கு நிகராக நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

இவர்களில் பலர் ரஜினியை ஒரு தெய்வமாகவே நினைத்து வழிபடுபவர்களும் உண்டு.

அந்த அளவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்களை தன் காந்த சக்தியால் ஈர்த்து வைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையல்ல.

எனவே தான் ரஜினியின் ரீல் புகைப்படங்களும் ரியல் புகைப்படங்களும் எப்போதுமே வைரலாகும்.

இந்த நிலையில் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஒரு ரஜினி படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்.. ‛‛இந்த போட்டோவிற்கு பில்டர் எடிட் தேவையில்லை. விலைமதிப்பற்ற நேர்மறையான ஒரு போட்டோ. அப்பாவின் அன்பு. உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்த நடிகர்

குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது. இதனையடுத்து பல படங்களை பிரம்மாண்டமாக தயாரித்தார் குஞ்சுமோன்.

கிட்டத்தட்ட 15 – 18 வருடங்களாக தயாரிப்பை வீட்டு விலகியிருந்த குஞ்சுமோன் தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் முப்பது வருடங்களுக்குப் பிறகு ‘ஜென்டில்மேன் 2’ படத்தை எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்

ஆனால் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இப்படத்தை இயக்கவில்லை. அவருக்கு பதில் ஏ.கோகுல் கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்த மரகதமணி என்கிற கீரவாணி தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இதில் நாயகியாக ஜூனியர் நயன்தாரா என்றழைக்கப்படும் நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க உள்ளதாக அறிவித்தனர்.

மேலும் முக்கிய வேடத்தில் ‘ஜீனியஸ்’ பட நாயகி ப்ரியாலால் நடிக்கிறார்.

ஆனால் நாயகன் யார்? என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக சேத்தன் சீனு எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா சேர்ந்து வாழ முடிவு.; ரஜினி சமரச பேச்சுவார்த்தை.!

தனுஷ் – ஐஸ்வர்யா சேர்ந்து வாழ முடிவு.; ரஜினி சமரச பேச்சுவார்த்தை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ்.

அவர்களுக்கு யாத்ரா & லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ போவதாக தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் சட்டப்படி
விவகாரத்து செய்யவில்லை.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் தனுஷ் ரசிகர்களும் மத்தியிலும் பெரிய சலசலப்பை உண்டாக்கியது.

மேலும் திரையுலகினரும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்ப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இசையமைப்பாளர் ஜஸ்டின் திருமணம்.; விஜய்சேதுபதி – சமுத்திரகனி உள்ளிட்டோர் வாழ்த்து

இசையமைப்பாளர் ஜஸ்டின் திருமணம்.; விஜய்சேதுபதி – சமுத்திரகனி உள்ளிட்டோர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம் மதுரையில் உள்ள CSI – Holy Immanuel சர்ச்சில் இன்று (5th October, 2022) காலை 9.30 மணிக்கு சொந்தங்களும் நண்பர்களும் சூழ நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள MRC மஹாலில் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில்…

நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர்

இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி,

தயாரிப்பாளர் S.R.பிரபு,
பின்னனி பாடகர் கிருஷ், அந்தோணிதாசன்
பாடலாசிரியர் மதன் கார்க்கி,

உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உங்க எக்ஸ் லவ்வருக்கு செம படம் வந்துட்டே இருக்கு.; இதோ ‘லவ் டுடே’ ட்ரைலர்

உங்க எக்ஸ் லவ்வருக்கு செம படம் வந்துட்டே இருக்கு.; இதோ ‘லவ் டுடே’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம்ரவி காஜல் அகர்வால் யோகி பாபு நடிப்பில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்த திரைப்படம் ‘கோமாளி’.

இந்தப் படத்தை இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே அடுத்து ஒரு பெரிய முன்னடி நடிகரை இயக்குவார் பிரதீப் என எல்லாரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அவரே ஹீரோவாக மாறி இயக்கியுள்ள படம் தான் ‘லவ் டுடே’.

இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘சாச்சிட்டாளே….’ பாடல் மற்றும் 2வது பாடலான ‘என்னை விட்டு…..” பாடல் ஆகியவை ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

இந்தப் படம் அடுத்த நவம்பர் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 5ம் தேதி மாலை ‘லவ் டுடே’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரைலரில் இவனாவின் தந்தையாக சத்யராஜ் வருகிறார். அவர் பிரதீப் மற்றும் இவானாவின் காதலை சம்மதிக்க ஒரு நிபந்தனை போடுகிறார்.

இருவரும் ஒரே ஒரு நாள் உங்கள் செல்போனை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் உங்கள் போனை நான் வாங்கிக் கொள்கிறேன்.

ஒருவேளை உங்களுக்குள் பிரச்சனை வராமல் இருந்தால் நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் என்கிறார்.

இதனை அடுத்து ட்ரெய்லர் பரபரப்பாக இருக்கிறது.

முக்கியமாக உங்களின் முன்னாள் காதலர் காதலிக்காக இந்த படம் என டைட்டில் கார்டு வருகிறது.

இதோ முழுமையான ட்ரைலரை நீங்களே பாருங்கள்…

எம்ஆர். ராதாவின் பேரனும் இயக்குனரும் நடிகருமான லோகேஷ் தற்கொலை

எம்ஆர். ராதாவின் பேரனும் இயக்குனரும் நடிகருமான லோகேஷ் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் டிவியில் ஒளிப்பரப்பான பிரபல தொடர்கள் மர்ம தேசம் & ஜீ பூம்பா. இதில் குட்டி ராசுவாக நடித்து இருந்தார்.

இவை இரண்டிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லோகேஷ். மர்ம தேசம் தொடரை விடவும் ‘ஜீ பூம்பா’ சீரியல் மாஸ்டர் லோகேஷூக்கு புகழை கொடுத்தது.

பல ஆண்டுகளுக்கு பின்னர் தனியார் சேனல்களான சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் இந்த் தொடர்கள் ஒளிபரப்பானது.

‘மர்மதேசம்’ இயக்குனர் நாகா சொன்ன ஆலோசனையால் டைரக்‌ஷன், எடிட்டிங் என பலவற்றை கற்றுத் தேர்ந்து சினிமாவுக்குள் நுழைய ரெடியாகி வந்தார் லோகேஷ்.

இவர் இயக்கிய சில குறும்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றன.

இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை கொண்டார். இது டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் மறைந்த பிரபல நடிகர் எம் ஆர் ராதாவுக்கு ஒருவகையில் பேரன் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows