என்னை நம்பி தயாரிப்பாளர்கள் கோடிகளில் முதலீடு செய்ய ரசிகர்கள்தான் காரணம்.. ரஜினி நெகிழ்ச்சி

என்னை நம்பி தயாரிப்பாளர்கள் கோடிகளில் முதலீடு செய்ய ரசிகர்கள்தான் காரணம்.. ரஜினி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்தாவது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்தார். மத்திய சென்னை மற்றும் வட சென்னை ரசிகர்களை இன்று அவர் சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

1960 களில் மதராஸ் அரசியல், கல்வி, சூழல் என அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்ததை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

” என்னை பொறுத்தவரை இது மதராஸ் தான். 1960 களில் காவல் துறை, வழக்கறிஞர், பல்கலைகழக கல்லூரிகள், போக்குவரத்து, அரசாங்கம் என்றால் மதராஸ் மாதிரி இருக்க வேண்டும் என்ற கருத்து அப்பொழுது அண்டை மாநிலங்களில் இருந்தது. எப்படி இப்பொழுது சிங்கப்பூர் அரசாங்கம் பற்றிய ஒரு பிரம்மாண்ட பார்வை உள்ளதோ, அப்போது அதே போன்றதொரு பார்வை அண்டை மாநிலங்களில் மதராஸ் மீதான பார்வையாக இருந்தது.

1973 களில் நான் மதராஸிற்கு வந்தேன். எனது அண்ணன் சத்யா நாரயணன் 14 வயதிலேயே எனக்காக வேலைக்கு சென்றார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். என்னை பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படிக்க வைக்க அவர் சம்பளத்தில் பாதியை எனக்குக் கொடுத்தார்.

அப்பொழுது அவர் கார்ப்பரேஷனில் மேஸ்திரியாக பணியாற்றினார், சம்பளம் 70 ரூபாய் தான். என் மீதிருந்த நம்பிக்கையில் நான் நடிகனாவேன் என்பதற்காக மிகவும் கஷ்டப்படிருக்கிறார். அவர் தான் என்னுடைய தெய்வம்.

அதன் பிறகு ராஜ்பகதூர், என்னுடைய நண்பன். எனக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்தவன். அதன் பிறகு மதராஸ் வந்த போது முரளி பிரசாத் மற்றும் விட்டல் வீட்டில் இருந்தேன் , என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் பார்த்துக் கொண்டார்கள்.

பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், வாசு இவர்கள் அனைவரும் என்னை ஸ்டார் ஆக்கினார்கள். சுரேஷ் கிருஷ்னா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள். இயக்குனர் சங்கர் என்னை இந்தியா முழுவதும் தெரியும் படி செய்தார். இவர்கள் அனைவரும் என்னை நம்பி இவ்வளவு பணம் போடுவதற்குக் காரணம் என் ரசிகர்களாகிய நீங்கள் தான். ” என்று கூறினார்.

மேலும், ” என் வாழ்க்கையில் 2.0 மிகவும் முக்கியமான படம். இதற்கு பிறகு சங்கரே நினைத்தாலும் இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதைக்கரு மிகவும் அற்புதமாக உள்ளது.

3டி படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளில் படம் தாமதமாகிறது. 2.0 ஏப்ரலில் வெளியாகிறது. அதற்கடுத்து நான் நடிக்கும் காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் காலா.

அந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. 2.0 வெளியான ஓரிரு மாதங்களில் காலா வெளியாகும். ” என்று அவர் கூறினார்.

“என் வாழ்க்கை பயணத்தில், போன என் உயிரை சிங்கப்பூரில் இருந்து உங்கள் மூலமாக கொண்டு வந்துள்ளேன். என் உடல் நிலை சரியில்லாத போது எனக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகள் தான் அதற்கெல்லாம் காரணம். இத்தனை அன்பிற்கும் நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.

அப்போது ரசிகர்கள் எழுதிய கடிதங்களில் ஒருவர் எழுதியிருந்தார். தலைவா நீங்கள் படம் நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டாம், அரசியலுக்கு வந்து எங்களை காக்க வேண்டாம், நலமுடன் திரும்பி வந்தால் போதும் என்று எழுதியிருந்தார். உங்கள் அன்பிற்கு எதை நான் திரும்ப கொடுக்க முடியும். ”

“கனவு நனவாக ஒரு போதும் குறுக்கு வழிகளை கையாளக் கூடாது என்றும், எந்த நிலையிலும் குடும்பம் தான் முக்கியம். பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பதை விட, நாமே நம்மை முதலில் மதிக்க வேண்டும். ” என்று அவர் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஆர்கே சுரேஷ்-நடிகை திவ்யா காதல் திருமணம் நின்றுவிட்டதா?

ஆர்கே சுரேஷ்-நடிகை திவ்யா காதல் திருமணம் நின்றுவிட்டதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why RK Suresh and Actress Dhivya marriage getting delayசலீம், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே. சுரேஷ்.

பின்னர் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படம் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

தற்போது வேட்டை நாய், பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை திவ்யாவை மணக்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. இதனால் திருமணம் நின்றுவிட்டதாக வதந்திகள் உருவானது.

இதுகுறித்து அவரது தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது…

ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். மற்றப்படி வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why RK Suresh and Actress Dhivya marriage getting delay

ரஜினி புகழ் பெற பாலசந்தர் வைத்த ஒரே கோரிக்கை இதுதான்

ரஜினி புகழ் பெற பாலசந்தர் வைத்த ஒரே கோரிக்கை இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Balachanderரஜினிகாந்த் இன்று தன் ரசிகர்கள் 5வது நாளாக சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது அவர் பாலசந்தர் பற்றி பேசியதாவது…

பல மேடைகளில் பால சந்தர் சார் பத்தி பேசியிருக்கிறேன். நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்ற போது தமிழ்,ஆங்கிலம் இரண்டுமே தெரியாது.

ஆனாலும், என்னை நடிக்க சொன்னார்.

அப்போது அவர் சொன்னது ஒன்றுதான். நீ தமிழ் கத்துக்கடா. உன்னை எப்படி உயரத்திற்கு கொண்டு போறேன் பார் என்றார்.

பிறகு ஏதோ யோசித்துவிட்டு என்னை அவரது அடுத்த மூன்று படங்களில் புக் செய்தார்.

அபூர்வ ராகங்களில் ஒரு சின்ன வேடம், பிறகு மூன்று முடிச்சு படத்தில் ஒரு நல்ல ஆண்டி ஹூரோ ரோல்.

பாலசந்தர் சார் என்னை தத்து எடுக்கவில்லை அவ்வளவு தான் கைலாஷ், பிரசன்னாவிற்கு பிறகு ரஜினிகாந்த். என்னை அவர் மகனாக பார்த்துக் கொண்டார்.

ரஜினிக்காக லாரன்ஸ் வெளியிட்ட பாடல்.. வா தலைவா போருக்கு வா

ரஜினிக்காக லாரன்ஸ் வெளியிட்ட பாடல்.. வா தலைவா போருக்கு வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and raghava lawrenceகடந்த 20 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதற்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் நாளை டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் முடிவை அறிவிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் வகையில் பாடல் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வா தலைவா போருக்கு வா என்று அந்த பாடல் வரிகள் இருக்கிறது.

இப்பாடல் வெளியான சில நிமிங்களிலேயே இந்தியளவில் டிரெண்ட் ஆகிவிட்டது.

நாளை என்ன சொல்லப்போகிறாரோ தலைவர்..? காத்திருப்போம்

சிவகார்த்திகேயனை அடுத்து சிம்புவை இயக்கும் மோகன்ராஜா..?

சிவகார்த்திகேயனை அடுத்து சிம்புவை இயக்கும் மோகன்ராஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and mohan Rajaதனி ஒருவன் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை இயக்கினார் மோகன்ராஜா.

கடந்த வாரம் வெளியான இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மோகன்ராஜாவின் அடுத்த பட தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த படத்தில் இசையை மையப்படுத்தி கதையை உருவாக்கவுள்ளாராம்.

இப்படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிம்பு தான் இயக்கும் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு, மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை முடித்துவிட்டு மோகன்ராஜாவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா-அரசியல் எதுவானாலும் காலம் மாறும்…: ரஜினிகாந்த் பேச்சு

சினிமா-அரசியல் எதுவானாலும் காலம் மாறும்…: ரஜினிகாந்த் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth at Day 4 fans meetகடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று 4வது நாள். நாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதியோடு இந்த நிகழ்வு நிறைவு பெற உள்ளது.

அப்ப்போது தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த்..

“அண்ணாமலை படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சமயம் அது. அப்போது ஒரு முறை நான் கோவை சென்றேன். என்னுடன் சிவாஜி சார் இருந்தார். மன்னிக்கவும். சிவாஜி சாருடன் நானும் ஒரு விமானத்தில் பயணித்து கோவை சென்றோம்.

அப்போது என் ரசிகர்கள் சொல்லவா வேண்டும். ரஜினி வாழ்க. தலைவா வாழ்க என்று கோஷம் போட்டனர்.

அப்போது சிவாஜி சார் இருக்கும்போது எனக்கு ஒருமாதிரியாக இருந்தது.

அப்போது சிவாஜி என் தயக்கத்தை புரிந்துக் கொண்டு, டேய் இங்க வாடா… நல்லா உழைக்கனும். நல்ல சினிமா கொடு.

நாங்க அப்போ அப்படி இருந்தோம். இது உன் காலம் டா. ரசிகர்கள் பார்த்து கை அசை. அவர்களுக்கு வணக்கம் சொல் என்றார்.

சில வருடங்களுக்கு பிறகு அண்மையில் கோவை சென்றேன். அப்போது என்னிடம் வந்த சிலர், சார் நீங்க இப்போ போக வேண்டாம்.

ஒரு நடிகர் வந்திருக்கிறார். அவரது ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள். என்றார்.

இது அவரது காலம். இது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

More Articles
Follows