தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து பேசியுள்ளார் தமன்னா.
அவரின் சமீபத்திய பேட்டியில்…
“ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு நனவானது.
‘ஜெயிலர்’ பட சூட்டிங் தருணங்கள் என்றும் நீடித்திருக்கும்.
அவரே தன் கையொப்பம் ஆன்மிக புத்தகம் ஒன்றை எனக்கு பரிசளித்தார் ரஜினி. மிகவும் அர்த்தமுள்ள பரிசு அது” என தெரிவித்துள்ளார் தமன்னா.
Rajinikanth gift to Tamannah at Jailer spot