விஸ்வாசம் சிவாவுக்கு பாராட்டு; இதான்யா தலைவர் என ரசிகர்கள் கருத்து

Rajini Wishes Director Siva For Viswasam Thalaivar fans happyபொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும் படங்களும் பரபரப்பாக பேசப்படும். அதுவும் இந்தாண்டு 2019 பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் மோதியதால் பெரும் சர்ச்சையானது.

இரண்டு படங்களும் வெற்றிப் பெற்ற போதிலும் ரசிகர்கள் மாறி மாறி மோதிக் கொண்டனர்.

இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் என்ற போதிலும் அஜித் ரசிகர்கள் (சிலர்) தரக்குறைவான மீம்ஸ்களை போட்டு தாக்கினர்.

இதுபற்றி அஜித் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஓரிரு தினம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் விஸ்வாசம் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். அவர் இயக்குனர் சிவாவை தன் வீட்டிற்கே அழைத்து பாரட்டியிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.

இதான்யா எங்க தலைவர். அவரின் நல்ல உள்ளம் என ரஜினி ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Rajini Wishes Director Siva For Viswasam Thalaivar fans happy

Overall Rating : Not available

Latest Post