தந்தையான அண்ணனை இழந்த நண்பர் கமலுக்கு ரஜினி இரங்கல்

தந்தையான அண்ணனை இழந்த நண்பர் கமலுக்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal condolence message to his brother Chandrahasan deathஇந்திய சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் நட்பு பாராட்டுவது அரிதான ஒன்று.

ஆனால் அதை முறியடித்து 45 ஆண்டுகாலமாய் கமல்ஹாசன்-ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை தாண்டியும் நெருக்கமான நட்போடு திகழ்கின்றனர்.

இந்நிலையில் இன்று கமலின் அண்ணன் சந்திரஹாசன் மரணமடைந்தார்.

தன் நண்பரின் அண்ணன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தன் ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது…

தன் தந்தை போன்ற அண்ணனை இழந்து வாடும் என் நெருங்கிய நண்பன் கமல்ஹாசனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth‏Verified account @superstarrajini
My heartfelt condolences to my dear friend @ikamalhaasan & his family for the loss of his fatherly brother ChandraHassan. May his soul RIP

Rajini condolence to Kamalhassans brother Chandrahasan death

எனக்காக சந்திரஹாசன் கண்ட கனவை நிறைவேற்றவில்லை… கமல் உருக்கம்

எனக்காக சந்திரஹாசன் கண்ட கனவை நிறைவேற்றவில்லை… கமல் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal condolence message to his brother Chandrahasan deathநடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்த துயர சம்பவத்தால் கமல்ஹாசன் உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தனது அண்ணனின் மரணம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியுள்ளதாவது…

நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு.

எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை

Kamal condolence message to his brother Chandrahasan death

‘என் பாட்டை பாடக்கூடாது..’ எஸ்பிபி.க்கு இளையராஜா நோட்டீஸ்

‘என் பாட்டை பாடக்கூடாது..’ எஸ்பிபி.க்கு இளையராஜா நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja sends a legal notice to Singer SP Balasubramaniyamகடந்த சில நாட்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார் இந்தியாவின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இந்நிலையில் இவர் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அப்போது இளையராஜா சார்பில் இவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் நான் இசையமைத்த பாடல்கள் பாடக்கூடாது என இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த எஸ்.பி.பி. விளக்கம் அளித்துள்ளார். அதில்…

ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி.

சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.

என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். ‘எஸ்.பி.பி.50’ என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம்.

அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை.

ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை.

முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம்.

ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்.

இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Ilayaraja sends a legal notice to Singer SP Balasubramaniyam

spb ilayaraja

கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ChandraHaasan Brother of Kamalhassan passed awayகமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன்(82) உடல்நலக் குறைவால் காலமானார்.

உடல் நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்த நிலையில்,  இன்று காலை லண்டனில் இவரது உயிர் பிரிந்தது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.

லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் மாரடைப்பால் காலமானார்.

இவரின் மகள் அனுஹாசன் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமலுக்கும் சந்திரஹாசன்  குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

ChandraHaasan Brother of Actor Kamalhassan passed away

 

kamal anu

அண்ணல் அம்பேத்கருடன் கனெக்ட் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்

அண்ணல் அம்பேத்கருடன் கனெக்ட் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush ranjith2.0 படத்தை முடித்துவிட்டு ரஜினி, தன் 161வது படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ரஞ்சித் இயக்க, தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.

இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வருகிற சித்திரை முதல் நாளில் அதாவது ஏப்ரல் 14ஆம் வெளியிடவிருக்கிறார்களாம்.

அன்றைய தினம்தான் தேசிய தலைவர் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள்.

அம்பேத்கர் மீது இயக்குனர் ரஞ்சித் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பதும் இங்கே கவனித்தக்கது.

Rajini Ranjiths new movie announcement will be on Dr Ambedkars birth day

‘ஆர்யா ஹாப்பியா.? என் குழந்தைக்கு உன் பேர்தான்..’ – விஷ்ணு விஷால்

‘ஆர்யா ஹாப்பியா.? என் குழந்தைக்கு உன் பேர்தான்..’ – விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu son aryanநடிகர்கள் ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படங்களை தாண்டி நல்ல நட்பு பாராட்டி வருகின்றனர்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன், விஷ் ணு விஷாலின் மனைவி ரஜினி ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றார்.

தற்போது அக்குழந்தைக்கு ஆர்யன் என பெயரிட்டு குழந்தையின் படத்துடன் இத்தகவலை பகிர்ந்துள்ளார் விஷ்ணு.

ஆர்யா நீ ஹாப்பிதானே… உன் பெயர வச்சுட்டேன் என தன் நண்பருக்கு ட்வீட் செய்துள்ளார் விஷ்ணு.

Vishnu Vishal named Aryan to his new born boy baby

Vishnu Vishal – VV‏Verified account @iamvishnuvishal
Introducing u all to my ROCKSTAR…v hav named him ARYAN @arya_offl r u happy? i fullfilled ur wish ..u askd me to name him aftr u

More Articles
Follows