சரியான நபர்களுக்கு உதவுகிறோமா..? மதுக்கடை திறப்பால் மனம் மாறும் லாரன்ஸ்.?

raghava lawrenceகொரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் தகள் இயல்பான வாழ்க்கையை தொலைத்து நின்றாலும் டாஸ்மாக் திறப்பால் குடிகாரர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுநாள் வரை வணிகம் பாதிப்பு, செலவுக்கு பணமில்லை என்றவர்கள் கூட தற்போது மது வாங்க வரிசையில் நிற்கின்றனர்.

இந்த நிலையில் குடி பழக்கம் உள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமா? சரியான நபர்களுக்கு உதவுகிறோமோ? என தன்னையே கேள்வி கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்…

வணக்கம் நண்பர்கள்..

டாஸ்மாக்கை நோக்கி கூட்டம் அதிகம் செல்வதைக் கண்டதும் எனது அம்மா மற்றும் சில நண்பர்கள் என்னிடம் சில கேள்விகளை கேள்வி எழுப்பினார்கள்

‘நாங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய மிகவும் கடினமாக உழைக்கிறோம். ஆனால் பொறுப்பற்ற முறையில் பலர் டாஸ்மாக் சென்று குடித்து தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றார்கள்.

இவர்களுக்கு உதவிட வேண்டுமா? என கேட்கிறார்கள்.

எனக்கு உதவி செய்பவர்கள் கூட நாம் சரியான நபர்களுக்குத்தான் உதவி செய்கிறோமா? நமது சேவையால் உண்மையில் பலன் இருக்கிறதா? என கேட்கின்றனர்.

இந்த குடிகாரர்களுக்கு நம் சேவை நிறுத்தப்பட்டால் அந்த குடிகாரர் குடும்பம் கஷ்டப்படும்.

குடிக்காத ஆண்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே தயவுசெய்து சேவையை நிறுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

அதே நேரத்தில் அனைத்து குடிகாரர்களுக்கும் எனது சிறிய கோரிக்கை என்னவெனில் குடிப்பதற்கு முன், உங்கள் குழந்தையின் கண்ணீரைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்’ என பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

Overall Rating : Not available

Latest Post