மனிதமே பெரியது; 3 மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் லாரன்ஸ்!

மனிதமே பெரியது; 3 மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் லாரன்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceமூன்று மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்திய விசயத்தை கையில் எடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் சமூக சேவைகளையும் மேலும் அவர் தனது அறக்கட்டளையின் மூலமாக எத்தனையோ உதவிகளையும் செய்து வருகிறார்.

இப்போது அவர் மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து கிறிஸ்டின், முஸ்லீம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் படி ஓர் ஆலயம் அமைக்க இருக்கிறார். மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சி.

நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அண்ணதான கூடம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்க இருக்கிறார்.

இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்தித்திராத முயற்சி. ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை அறிவித்துள்ளார்.

இந்தப்பணிகளை மிகச்சிறப்பாக விரைவில் துவங்க இருக்கிறார்.

ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை வெளியீடு..? அரசியல் காரணமா.?

ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை வெளியீடு..? அரசியல் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master Audio launch and Political issue updates சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இதில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார்.
அந்த படத்தை வெளியிட்டு மாஸ்டர் சூட்டிங் முடிவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒரு குட்டி கதை பாடல் வெளியான நிலையில் இரண்டாவது பாடலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் 15-ம் தேதி இசை வெளியீட்டு விழாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

மெர்சல், பிகில், சர்கார் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் அரசியல் பற்றி பேசினார்.

அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை வேற நடைபெற்றது.

எனவே சர்ச்சைகளை தவிர்க்க விஜய் விரும்புகிறார் எனவும் எனவே தான் ரசிகர்கள் இல்லாமல் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் இசைவெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Master Audio launch and Political issue updates

இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 accident issue Police to summon Actor Kamalகடந்த பிப். 19- ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கமல்ஹாசன், காஜல் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இப்போது, கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்மனை ஏற்று, கமல் நாளை மார்ச் 3 – ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

Indian 2 accident issue Police to summon Actor Kamal

திருநங்கைகளுக்கு வீடு கட்டும் லாரன்ஸ்; அக்‌ஷய்குமார் 1.5 கோடி நிதியுதவி

திருநங்கைகளுக்கு வீடு கட்டும் லாரன்ஸ்; அக்‌ஷய்குமார் 1.5 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshay Kumar donates One and half crores for Lawrance Trust நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக கொண்டர் ராகவா லாரன்ஸ்.

இவையில்லாமல் எண்ணற்ற ஆதரவற்றவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்தி தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

அந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த நிலையில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியிருக்கிறாராம்.

இதற்காக நடிகர் அக்‌ஷய்குமாரிடம் தனது முயற்சியை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா.

இதன் இந்தி ரீமேக் லக்‌ஷ்மி பாம் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தையும் லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

Akshay Kumar donates One and half crores for Lawrance Trust

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Birthday wishes to MK Stalin with twist tweetஇன்று மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

திமுக தொண்டர்கள் பலரும் இதனை பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்தில்…

அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் கூறிவருகிறார். ஒருவேளை அவர் சொல்வது போல வந்துவிட்டால் தன் ஆட்சியிலேயே அநீதி இருக்கிறது என அவர் சொல்ல போவதில்லை.

இப்போது கமல் சொல்வதை பார்த்தால்… அப்படியானால் ஆட்சியில் வேறு ஒருவர் இருப்பார். நீங்கள் அப்போதும் அநீதிக்கு எதிராக மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருங்கள் என்கிறாரா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் கமலும் தானே ஆட்சி அமைக்க போராடி வருகிறார். ஒரு வேளை இவர் ஆட்சி அமைத்தால் அதில் அநீதி நடக்குமா? அல்லது இவர் ஆட்சிக்கு வரமாட்டார் என்பதை முன்பே கணித்துவிட்டாரா? எனவும் குழம்பியுள்ளனர்.

ஆக… கமல் வழக்கம்போல அனைவரையும் குழப்பியுள்ளார் என்றே தெரிகிறது. உலகநாயகனுக்கே உண்மை தெரியும். ஆகட்டும் ஆண்டவரே…

Kamal Birthday wishes to MK Stalin with twist tweet

BREAKING என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயார்.. – ரஜினி

BREAKING என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயார்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis reaction Meeting with Muslim Clerics about CAA இன்று காலை இஸ்லாமிய மதகுருமார்களை நடிகர் ரஜினிகாந்த சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ரஜினி தன் ட்விட்டரில் இன்று இரவு 10.47 மணிக்கு பதிவிட்டுள்ளதாவ…

இன்று மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனை கேட்டு அறிந்தேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் – ரஜினிகாந்த்

எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.

என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

 

Rajinis reaction Meeting with Muslim Clerics about CAA

Rajinis reaction Meeting with Muslim Clerics about CAA

 

More Articles
Follows