நான் சொல்றேன்யா.. நடிகர் சங்க தேர்தல் இப்போ நடக்காது.. ராதாரவி

New Project (4)வருகிற ஜீன் 23-ந்தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி இதுகுறித்து கூறியதாவது…

‘கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். தற்போது விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எங்களுக்கு எதிராக நின்றவர்கள் தற்போது விஷாலுக்கு எதிராக நிற்கிறார்கள்.

கடந்த முறை மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார் ரஜினிகாந்த்.

எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி பேசினார்கள். இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜீன் 23-ந் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை.

நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. வரும் 13-ந்தேதி நீதிமன்றம் மூலம் தேர்தல் நிறுத்தப்படும்’.

இவ்வாறு ராதாரவி பேசியுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post