மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையாக நடிக்கும் பிரசன்னா

மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையாக நடிக்கும் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பெட்ரோல் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது.

எவ்வளவு விலை உயர்ந்தாலும் வேறு வழியில்லாமல் அதை உபயோகித்து வருகிறோம்.

இந்த பெட்ரோலுக்கு நிகராக குறைந்த விலையில் மூலிகைப் பெட்ரோல் என்ற திரவத்தை தயாரித்துள்ளதாக தமிழகத்தை சேர்ந்த ராமர் பிள்ளை பல ஆண்டுகளாக கூறி வருகிறார்.

இவரின் சில சோதனைகள் தோல்வியில் முடியவே இவரை அனைவரும அவமானப்படுத்தினர்.

ஆனால் அவர் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.

தற்போது, அவரது கதையை ஜி 5 என்ற நிறுவனம், வெப் சீரியலாக தயாரிக்கிறது. இந்த சீரியலுக்கு திரவம் என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த சீரியலில், ராமர் பிள்ளையாக நடிகர் பிரசன்னா நடிக்கிறார்.

கதையின் கேரக்டரில் இவருக்கு ரவி பிரகாசம் என பெயர் வைத்துள்ளனர்.

கோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்?

கோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)பெரும் எதிர்பார்ப்பில் உருவான விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று (மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரூ. 4 கோடி நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது.

இந்த நிலையில் தன் சம்பளத்தில் இருந்து 1 கோடியைக் குறைத்துக் கொண்டு வெளியிட சொன்னாராம்.

மேலும் ‘அயோக்யா’ பட மற்ற மொழி டப்பிங்க்கு முதலில் மறுத்த விஷால் இப்போது டப்பிங் செய்யலாம் என்றும் சொல்லிவிட்டாராம்.

அத்துடன் டப்பிங் படம் மூலம் வரும் 2 கோடி ரூபாயையும் தயாரிப்பாளரே எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி இருக்கிறாராம்.

ஆக படம் வெளி வந்தே ஆக வேண்டும் என விரும்புகிறாராம் விஷால்.

எனவே இன்று மாலை படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அயோக்யா அப்டேட்ஸ்….

1. 20 கோடி செலவில் உருவான அயோக்யா படம் 40 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்திருக்கிறது. தமிழ்நாடு உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.

2. கேரளா, கர்நாடகா, வெளிநாடு உரிமைகள் மூலமாகவும் 5 கோடி கிடைத்துள்ளதாம்.

3. ‘அயோக்யா’ தயாரிப்பாளரின் ‘ஸ்பைடர்’ பட நஷ்டமும் இப்போது பிரச்சினை ஆகியுள்ளது.

‘தர்பார்’ ரஜினியை மிரட்ட மலையாள வில்லன் நடிகர்.?

‘தர்பார்’ ரஜினியை மிரட்ட மலையாள வில்லன் நடிகர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chemban Vinod Jose denies his villain role in Rajinis Darbarலைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார்.

இப்படத்தின் மூலம் ரஜினியை முருகதாஸ் முதன்முறையாக இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மும்பையில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது. கிட்டதட்ட 3 மாதங்கள் அங்கு சூட்டிங்கை நடத்த உள்ளனர்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோருடன் பாலிவுட் நடிகர்கள் பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், மலையாள வில்லன் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் அவர்களும் தர்பாரில் இணைவதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அவர் கூறுகையில்… தர்பார் படத்தில் நான் நடிப்பதாக செய்திகளில் உண்மையில்லை. ஆனால் தர்பார் டீம் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனினும் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.

Chemban Vinod Jose denies his villain role in Rajinis Darbar

நல்லா இல்லேன்னா ரஜினிக்கும் அதான் நிலைமை.. – ‘அயோக்யா’ விஷால்

நல்லா இல்லேன்னா ரஜினிக்கும் அதான் நிலைமை.. – ‘அயோக்யா’ விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal clarifies Ayogya issue and his Marriage dateவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா இன்று ரிலீசாகவில்லை.

ரூ. 4 கோடி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட சில பைனான்ஸ் சிக்கல்களால் இப்படம் ரிலீஸ் அறிவிக்கப்பட்டும் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் விஷால் அளித்துள்ள பேட்டியில்…

முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன்.

ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து.

அக்டோபர் 9-ந் தேதி அனிஷாவுடன் திருமணம் நடக்கவுள்ளது. திருமண இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிக்கும் துப்பறிவாளன் 2 பட சூட்டிங் ஆகஸ்டு 15-ந் தேதி தொடங்கவுள்ளது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். என்றார்.

அத்துடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு…

கே:- உங்கள் அணியில் இருந்து விலகிய ஆர்கே.சுரேஷ், உதயா இருவரும் நீங்கள் சிறு படங்கள் ரிலீஸ் செய்ய உதவவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

ப:- அவர்களுடைய படங்கள் நன்றாக இல்லை. அதனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுதான் உண்மையான காரணம். ஒரு படத்தை 4 பேர் தான் பார்க்க வருகிறார்கள் என்னும்போது அந்த படத்தை 2 வாரங்கள் ஓட்டியே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை நான் கட்டாயப்படுத்த முடியாது. அது ரஜினி படமோ புதுமுகத்தின் படமோ இதுதான் நிலைமை.

கே:- தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்கு கமிட்டி ஏன் தோல்வி அடைந்தது?

ப:- என் படத்தை நிறுத்துவதற்கு நீ யார் என்ற கேள்வி வரும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு படத்தை உருவாக்க போதிய நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ரிலீஸ் செய்ய மட்டும் அவசரப்படுகிறார்கள்.

மற்றவர்கள் வருமானத்தை சாப்பிட ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை இந்த பிரச்சினை தீராது.

கே:- தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் மீண்டும் போட்டியிடுவீர்களா?

ப:- மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்.

இவ்வாறு விஷால் கூறினார்.

Vishal clarifies Ayogya issue and his Marriage date

அயோக்யா-கீ-100 ரிலீஸ் இல்லை; தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்

அயோக்யா-கீ-100 ரிலீஸ் இல்லை; தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Film producer sold offer rate tickets at theater entranceஇன்று மே 10ஆம் தேதி விஷால் நடித்த அயோக்யா மற்றும் ஜீவா நடித்த கீ ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதுபோல் நேற்று வெளியாகவிருந்த அதர்வாவின் 100 படமும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று மதியம் வரை எந்த படங்களும் வெளியாகவில்லை. பின்னர் ஒருவழியாக கீ படம் மட்டும் வெளியானது.

இந்த படத்துடன் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியானது.

பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் நிறைய பேர் வந்தனர்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த படங்கள் வெளியாகவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனை கண்ட எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை கூவி கூவி அழைத்துள்ளார்.

ஆனால் ரசிகர்கள் யாரும் டிக்கெட் வாங்க வரவில்லை. எனவே அவரே ஒரு சலுகை அறிவித்தார்.

டிக்கெட்டை பாதி விலைக்கு விற்றார். மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் தொகை + 100 ரூபாய் தருவதாக கூறினார்.

தயவுசெய்து சின்ன படங்களை பாருங்கள் என அவர் பேசினார்.

அதன் பின்னர் ஒரு சிலர் மட்டும் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றுள்ளனர்.

Film producer sold offer rate tickets at theater entrance

ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்..!

ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)உலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களும் வழிபாட்டு முறைகளுமே இதற்கு சாட்சி.

இப்படிப்பட்ட புகழுடைய நமது மண்ணில், இதுவரை எழுதப்பட்ட சாஸ்திரங்களில் தொடாத, சொல்லப்படாத, பார்க்கப்படாத விஷயங்களையும், விளக்கங்களையும் மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் வகையில் எழுதப்பட்ட ஒரு அற்புத ஆன்மிக நூல்தான் ‘ப்ரஹ்ம வித்தை’.

இந்த நூலை இயற்றிய ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அவர்கள் , கடந்த 40 ஆண்டுகளாக சாலியமங்கலம் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருளுடன் , அன்னையின் வாக்காக வந்த விஷயங்களை எழுதியும், பக்தர்களிடையே உபதேசித்தும் வந்த ஆன்மிக சாதனா மார்க்கங்களை நூலாக எழுதியுள்ளார்.

இன்றைய சூழலில், ஆன்மிகம் என்பது ஆழமான தேடல் இன்றி, மேம்போக்காகப் பார்க்கும் நிலையில் உள்ளது. அதனை நீக்கி, உண்மையான ஆன்மிகத்தை உலகுக்கு உணர்த்த வந்திருக்கும் ஒரு புதிய வேதம் தான் ‘ப்ரம்ஹ வித்தை’.

‘ப்ரம்ஹ வித்தை’ நூலை மின் பதிப்பாக ஆக்கி, அமேஸான் இணையதளத்தில் மின் நூலாக வெளியிடும் நிகழ்வு, மே 9-ம் தேதி, சென்னை தியாகராய நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ், திரைக்கலைஞர் ஈரோடு மகேஷ், இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

ஆன்மிகம் என்பது நம்பிக்கையைப்பொறுத்து மிகவும் ஆழமாகச் செயல்படும் என்று கேபிள் சங்கர் பேசினார்.

டெல்லி கணேஷ் பேசும்போது, வயதானால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தமிழில் மிகவும் ஆழமான, தெய்வத்தைப் போற்றும் பாடல்களும், இலக்கியங்களும் ஏராளமாக உள்ளன என்று அவற்றை மேற்கோள் காட்டி மிகவும் நகைச்சுவையாகப் பேசினார்.

ஈரோடு மகேஷ் பேசும்போது, ஆன்மிகம் என்பது முதலில் தன்னை அறிவது, தனக்குள்ளே பேசிக்கொள்வது. இதைத்தான் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். காஞ்சி பெரியவர் குரு இல்லாமல் நம்மால் இறையை உணர முடியாது என்று சொல்லியிருக்கிறார். தமிழ் படித்ததால், என்னால் ஆன்மிகத்தை ஆழமாக உணர முடியும். தமிழில் இப்படி ஒரு நூல் வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று பேசினார்.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர் சுரேகா சுந்தர் பேசும்போது, உலகின் சொகுசுத் தலைநகரம் அமெரிக்கா, கௌரவத் தலைநகரம் பிரிட்டன், விஞ்ஞானத் தலைநகரம் ஜப்பான், பொறியியல் தலைநகரம் ஜெர்மெனி என்ற வரிசையில் உலகின் ஆன்மிகத் தலைநகரம் இந்தியாதான்! மற்றும் , தமிழ் ஒரு மொழி அல்ல, அறிவு என்று பேசினார்.

பிரபல இசைக்கலைஞர் விஜயலட்சுமி அவர்களின் கீபோர்டு இன்னிசையுடன் நிகழ்வு துவங்கியது. மின் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், அதன் பென் டிரைவ் பதிப்பு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேச்சாளர் சுரேகா சுந்தர், ஆன்மிக ஜோதிடர். மங்கையர்க்கரசி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர். நூலின் தொகுப்பாசிரியர் ரங்கநாதன், பதிப்பாசிரியர் மருத்துவர் இளங்கோ, பதிப்பகத்தார் ராமதாஸ், முனைவர். மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பலதரப்பு ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

More Articles
Follows