துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ பட ரிலீஸ் & சிங்கிள் புரோமோ அப்டேட்

துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ பட ரிலீஸ் & சிங்கிள் புரோமோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்கார’ பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘கலாட்டாக்கார’ பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த புரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிங் ஆஃப் கோதா

Dulquer’s ‘King Of Kotha’ movie ‘Kalapakkaara’ Song Promo released

தியேட்டர்களை தெறிக்க விட்ட ‘போர் தொழில்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தியேட்டர்களை தெறிக்க விட்ட ‘போர் தொழில்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ‘போர் தொழில்’.

இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

‘போர் தொழில்’ படம் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.

சில தினங்களுக்கு முன்பு ‘போர் தொழில்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர்.

‘போர் தொழில்’ திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘போர் தொழில்’ படம் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ‘போர் தொழில்’ படம் கடந்த ஜூலை 7-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ashok Selvan and Sarathkumar’s ‘Por Thozhil’ to premiere on OTT

நடிக்க ஆசை இருக்கா.? திறமை இருந்தும் வாய்ப்பில்லையா.? இதோ சூப்பர் சான்ஸ்

நடிக்க ஆசை இருக்கா.? திறமை இருந்தும் வாய்ப்பில்லையா.? இதோ சூப்பர் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது விஜய் டிவி.

இதில் பங்கு பெரும் திறமையான கலைஞர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்து அவர்களும் சினிமாவில் ஜெயித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னத்திரைக்கு ‘கதாநாயகி’யை தேடும் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறது விஜய் டிவி

இந்த ரியாலிட்டி ஷோ ஜூலை 29 முதல் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை கலக்கப்போவது யாரு பாலா மற்றும் குரேஷி தொகுத்து வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி நடுவர்களாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகை ராதிகா சரத்குமார் இணைந்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Vijay TV new reality show titled Kadhanayagi

தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கே வாய்ப்பு.: பத்த வச்ச பவர்ஸ்டார்.. நாசர் திடீர் அறிக்கை

தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கே வாய்ப்பு.: பத்த வச்ச பவர்ஸ்டார்.. நாசர் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு FEFSI பெஃப்சி அமைப்பு, ‘தமிழ்த் திரையுலகில் தமிழ் நடிகர்களையும் தொழிலாளர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்பதை திரையுலகில் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு கோரிக்கையாக முன் வைத்தது.

எனவே தெலுங்கு நடிகரான பவர்ஸ்டார் பவன் கல்யாண், ‘தமிழ்த் திரையுலகம் குறுகிய மனப்பான்மையோடு இருக்கக் கூடாது.

திரையுலகில் மொழி பேதம் பார்க்காமல் அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை கொடுக்க முடியும்” எனப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஓர் அறிக்கையை வீடியோ வடிவிலும் வெளியிட்டுள்ளார்

சில மீடியாக்களில் வெளியாகியுள்ள ஆதாரமற்ற, வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ;

“மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேவை இருக்கிறது.

அதனால் இந்த சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்

தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல.

எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணி ஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது.

அன்பான சகோதரர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. உலக அளவில் அதை கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும் நாம். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்..

என நாசர் தெரிவித்துள்ளார்.

NO entry for other state actors in Tamil Film Industry – #Nasser explains 😱🎥 #pawankalyan #fefsi l filmistreet 🤔🧐📮

Nasser statement about No entry for Other state actors in kollywood

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு எப்போது.?

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.

மேலும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்பு பஞ்சு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர் நடிகர் சந்தானம்.

ஆர்யா நயன்தாரா காதல் மற்றும் ஆர்யா சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போ தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் இரண்டாம் பாக எடுக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வருகிற செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என சமீபத்திய பேட்டில் ஒன்று சந்தானம் தெரிவித்து இருந்தார்.

Boss Engira Baskaran part 2 shoot updates

ரஜினி கஷ்டத்தை புரிஞ்சிப்பார்.; வீட்டை அடமானம் வைத்த ‘ஜெயிலர்’ பட இயக்குனர்

ரஜினி கஷ்டத்தை புரிஞ்சிப்பார்.; வீட்டை அடமானம் வைத்த ‘ஜெயிலர்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி..: ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதே நாளில் இதே ஜெயிலர் என்ற பெயரில் ஒரு மலையாள படமும் ரிலீஸ் ஆகிறது.

அதுமட்டுமில்லாமல் நாளை ஜூலை 28ஆம் தேதி இரண்டு ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஜெயிலர் பட கதை:

ரஜினி ஜெயிலராக பணிபுரியும் சிறைச்சாலையில் மிகப்பெரிய குற்றவாளியை திருட்டுத்தனமாக வெளியே எடுக்க ஒரு கும்பல் அலைகிறது.. ரஜினிக்கும் அந்த கும்பலுக்கும் நடக்கும் மோதல் தான் ‘ஜெயிலர்’ படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.

மலையாள ‘ஜெயிலர்’ படத்தின் கதை :

1957ல் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு ‘ஜெயிலர்’ உருவாக்கப்பட்டுள்ளது. 5-6 கிரிமினல்கள் ஒரு ஜெயிலரை கொல்ல திட்டம் போடுகிறார்கள். இதில் தியான் சீனிவாசன் ஜெயிலராக நடிக்க சக்கிர் மடத்தில் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சக்கிர் மடத்தில் என்பவர் இந்த இரு ‘ஜெயிலர்’ பட தலைப்பு குறித்து பேசி இருக்கிறார்.

“நாங்கள் 2021 ஆம் ஆண்டிலேயே ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை கேரளாவில் பதிவு செய்து விட்டோம். ஆனால் 2022 ஆம் ஆண்டுதான் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்பு வெளியானது.

அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

சன் பிக்சர்ஸுக்கும் ரஜினி அண்ணாவுக்கும் தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்திற்கும் சேர்த்து கடிதம் எழுதினேன்.

நாங்கள் ‘ஜெயிலர்’ பட டைட்டிலை மாற்ற சொல்லவில்லை. ஆனால் கேரளாவில் மட்டுமாவது மாற்ற வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு ரூ. 5 கோடி செலவானது. எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். வட்டிக் கட்டவே சிரமமாக உள்ளது.

எனது எதிர்காலமே ‘ஜெயிலர்’ படத்தில்தான் அடங்கியிருக்கிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது.

ரஜினி அண்ணாவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்கள் படம் கேரளாவில் மட்டும்தான் வெளியாகிறது..

ரஜினி அண்ணாவுடன் மோகன்லால் சேட்டனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எனவே மலையாள ரசிகர்கள் முதலில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு தான் முன்னுரிமை கொடுத்துப் பார்ப்பார்கள்.

ரஜினி அண்ணா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்பவர். எனவே என் கஷ்டத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.” என்ன தெரிவித்திருக்கிறார் ஜெயிலர் இயக்குனர் சக்கிர் மடத்தில்.

இது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்கிர் மடத்தில்

Malayalam Jailer in trouble will Rajini take action

More Articles
Follows