நீண்டகாலமாக தாமதமாகி வரும் படத்தில் சிம்புவுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்?

நீண்டகாலமாக தாமதமாகி வரும் படத்தில் சிம்புவுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR வேல்ஸ் ஃபிலிம்ஸ்க்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்த ‘கொரோனா குமார்’ தொடங்கலாம் என்று செய்திகள் வந்தன.

இருப்பினும் நீண்டகாலமாக தாமதமாகி வந்த இந்த திட்டத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை அணுகியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய அவரது ‘லவ் டுடே’ 2022 இன் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக வரலாறு படைத்ததைத் தொடர்ந்து வர்த்தகத்தில் சூடுபிடித்துள்ளார். இருப்பினும் ‘கொரோனா குமார்’ படத்தில் அவர் ஈடுபடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

Pradeep Ranganathan to replace Simbu in long delayed project?

300 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் வாரிசு

300 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் வாரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய்யின் ‘வாரிசு ‘ திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

3 வாரங்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படம் ரூ. 300 கோடியை விரைவில் எட்ட இருக்கிறது . இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வரசுடு’ படமும் நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது வாரத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித்தின் துணிவு படத்துடன் ரிலீஸ் செய்யப்பட்ட போதிலும் வசூலில் குறைவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது வாரிசு.

Thalapathy Vijay’s ‘Varisu’ inches towards rupees 300 Crores

BREAKING சமூகம் எனக்கு கொடுத்ததை திருப்பி தர்றேன்.; – பா. ரஞ்சித் பரபரப்பு பேச்சு

BREAKING சமூகம் எனக்கு கொடுத்ததை திருப்பி தர்றேன்.; – பா. ரஞ்சித் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.

இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.

இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பா. ரஞ்சித் பேசும்போது…

“நான் தயாரிக்கும் படங்கள்.. என் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் படம் எப்போதும் சமூக பொறுப்புடன் இருக்கும்.

எனக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கு.. அது நான் எடுத்துக் கொண்டதாகவே இருந்தாலும் அந்த பொறுப்பை உணர்ந்து நான் செயல்படுகிறேன்.

இந்த சமூகம் எனக்கு கொடுத்ததை நான் திருப்பிக் கொடுக்கிறேன்.. தற்போது உருவாகிய ‘பொம்மை நாயகி’ படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை தயாரித்த நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பெருமை கொள்கிறது.

இன்று பல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் படத்தை எடுப்பதை விட ரிலீஸ் செய்ய கஷ்டப்படுகிறார்கள்.

முன்னணி நடிகரின் படத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறது. ஒரு சின்ன படங்கள் எடுத்து ரிலீஸ் செய்ய அதற்கான பிரமோஷன் பணிகளுக்கு மட்டுமே 70 லட்சம் 80 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது அப்போதுதான் அது வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

நான் ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் இது குறித்து பேசினேன்.. அவர்கள் சின்ன படங்களை கண்டு கொள்வதே இல்லை.

நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் அது பற்றி விவாதிக்க கூட அவர்கள் வரவில்லை.

ஆனால் நீலம் நிறுவனம் புது இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும். ”

இவ்வாறு பேசினார் பா. ரஞ்சித்.

Pa Ranjith speech at Bommai Nayagi press meet

JUST IN என் மூஞ்சி காமெடி தான்.: ‘பொம்மை நாயகி’ விழாவில் யோகி பாபு ஓபன் டாக்

JUST IN என் மூஞ்சி காமெடி தான்.: ‘பொம்மை நாயகி’ விழாவில் யோகி பாபு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.

இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.

இதில் கலந்து கொண்ட யோகி பாபு பேசும்போது..

“நான் எப்போதும் காமெடி நடிகர் தான். என் மூஞ்சி காமெடி மூஞ்சி தான்.. ஒரு காலத்தில் காமெடிக்காக வாய்ப்பு தேடி அலைந்து நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு இப்போதும் நினைவு இருக்கு.. அதை மறக்க மாட்டேன்.

இங்கு இருந்தவர்கள் எனக்கு திறமை இருப்பதாக சொன்னார்கள்.. அந்த திறமைக்கு வாய்ப்பு வரும்போது கதையின் நாயகனாக நடித்தாலும் காமெடி வேடங்களையும் தொடர்வேன். எந்த மொழி படம் இருந்தாலும் காமெடி கேரக்டர் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்” என ஓப்பனாக பேசினார் யோகி பாபு.

Yogi babu bold speech at bommai nayagi press meet

BREAKING கர்ணன் பண்ணும் போதே யோசித்தேன்.; விரைவில்.. – மாரி செல்வராஜ்

BREAKING கர்ணன் பண்ணும் போதே யோசித்தேன்.; விரைவில்.. – மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.

இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசும்போது…

“நல்ல இயக்குனர்கள் யாராக இருந்தாலும் யோகி பாபுவுக்காக நிச்சயம் ஒரு கதையை யோசிப்பார்கள்.

அவரின் முகம் எளிய மனிதர்களுக்கான முகம்.. நான் கர்ணன் படம் இயக்கும்போது யோகி பாபுவை கவனித்துக் கொண்டே இருப்பேன்.

அவருக்காக ஒரு கதை தயாராகிக் கொண்டிருக்கிறது.. விரைவில் அவரை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க உள்ளேன்.

எளிய மனிதர்களின் கதையை வந்து மக்களுக்கு கொடுக்கணும்னு ஆசைப்படக்கூடிய எல்லா இயக்குனர்களுக்குமே யோகிபாகி முகம் வந்து போகும். அது ஒரு பரிச்சயமான முகம்.

இந்த முகத்துக்குள்ள இருந்து கதையை அடாப் பண்ணி கொண்டு வந்து எப்படி இருக்கும் அப்படின்னு எல்லாத்துக்கும் ஆசை.. எனக்கு தெரிஞ்சு அப்படி எனக்கும் ஆசை இருக்கு” நன்றி.

இவ்வாறு இயக்குனர் மாரி செல்வராஜ் பேசினார்.

I will direct yogi babu soon says mari selvaraj

BREAKING ரஞ்சித் கிட்ட படம் செஞ்சா அடுத்து அப்படி பண்ண மாட்டாங்க – மாரி செல்வராஜ்

BREAKING ரஞ்சித் கிட்ட படம் செஞ்சா அடுத்து அப்படி பண்ண மாட்டாங்க – மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.

இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசும்போது…

நான் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தேன். அவரிடம் பணிபுரிந்தால் அடுத்து தப்பான படங்களை நிச்சயம் யாரும் எடுக்க மாட்டார்கள். அது போல தான் நீலம் ப்ரொடக்ஷன் நீலம் ப்ரொடக்ஷனில் ஒரு படம் செய்துவிட்டால் அதன் பிறகு யாரும் தப்பான படம் எடுக்க மாட்டார்கள்.

தற்போது ‘வாழை’ என்றொரு படத்தை முடித்துள்ளேன். அதற்கான வாய்ப்பு வந்த போது ரஞ்சித் இடம் சொன்னேன். போய் முடித்துவிட்டு வா என்றார். அதை முடித்துவிட்டேன். தற்போது மீண்டும் நீலம் ப்ரொடக்ஷனுக்காக ஒரு படம் செய்ய ரெடியாகி வருகிறேன்.

நானும் சரி தப்பான படங்களை என்னைக்குமே எடுக்க மாட்டேன். மாரி செல்வராஜ் வந்தா இப்படித்தான் படம் எடுப்பாருன்னு தெரிஞ்சு என்னை கூப்பிட்டா அதுவே போதுமானது.

இப்படியான படங்கள் தான் எடுப்பேன்.. இப்படியான விஷயங்கள் தான் பேசுவேன் அப்படிங்குற ஆணித்தரமா நிரூபிச்சதுனால எனக்கு அது இன்னும் பெரிய சப்போர்ட் ஆகி எனக்காக வெயிட் பண்ணக்கூடிய ஆட்கள் இருக்காங்க.

எனக்காக வெயிட் பண்ணி எல்லாருமே இந்த மாதிரி கதைக்களுக்காக வெயிட் பண்றாங்க அப்படிங்கபோது எனக்கு பெரிய சந்தோஷம். அதை ஏற்படுத்தி கொடுத்த நீலம் புரொடக்சன்க்கு நன்றி.

சில மானுடம் சம்பந்தமாக கதைகளை உருவாக்கும் போது இது ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா அப்படின்னு யோசிக்கும்போது சில கம்பெனி நியாபகம் வரும்.

ஒரு நிஜத்தை எழுதும்போது அந்த நிஜத்தை எழுதுவதற்கு நாம் யோசிக்கிறோம். இன்னைக்கு வந்து நிறைய தமிழ் சமூகத்தில் தமிழ் இயக்குனர் இயக்குனர்களாகும் போது ஒரு கதை எழுதும்போது நீலம் புரொடக்ஷன் கிட்ட அத சொல்லிப் பார்ப்போம். அப்படின்னு நினைக்கிறாங்க..

முன்னெல்லாம் அதுபோல நிஜத்தை எழுதும்போதே நிராகரிச்சிடுவாங்கன்னு பயப்படுவோம்.. இன்னைக்கு அப்படி இல்ல.

கதை கேட்பதற்கு காது கொடுத்து கேட்டு அதை சரி செய்து அதை நேர்த்தியா மாத்தி அதுக்கு சரியான தீமை உருவாக்கி அந்த இயக்குனரை பலப்படுத்தி அவனுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து உன் முதல் படம் எடுக்கக்கூடிய இயக்குநரை ஒரு சிறந்த அரசியல் அறிவு உள்ளவனாக மாற்றி அவனை இந்த தமிழ் சமூகத்திற்கு படைப்பாளி ஆவதற்கு முக்கியமான பங்கை நீலம் புரொடக்சன்ஸ் செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது யோகி பாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படமும் இணையும் என கண்டிப்பாக நம்புகிறேன்”.

இவ்வாறு மாறி செல்வராஜ் பேசினார்

Mari Selvaraj praies Pa Ranjith at Bommai Nayagi press meet

More Articles
Follows