கமலை பற்றி சிவாஜி என்ன சொன்னார்..? பிரபு நெகிழ்ச்சி

sivaji kamal prabhuகமல் கௌரவ வேடத்தில் நடிக்க, பிரபுவின் 200வது படமாக உருவாகி இருக்கிறது ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

அமுதேஷ்வர் இயக்கியுள்ள இப்படத்தை துஷ்யந்ந் தன் ஈஷான் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்திருக்கிறார்.

இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆஷ்னா சாவேரி, ஊர்வசி, எம்ஸ் பாஸ்கர், மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர்.

இதில் ‘மாலாக்கா’ என்கிற மலேசிய பெண் டானா நடிச்சிருக்கார் பூஜாகுமார்.

இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை இப்படக்குழுவினர் சந்தித்து பேசினர்.

அப்போது பிரபு பேசியதாவது…

‘ நான் 200 படங்களில் நடித்துவிட்டதை சாதனையாக பார்க்கவில்லை. என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

என் தந்தை அடிக்கடி கமலை பற்றி பேசிக் கொண்டு இருப்பார். அப்போது சொல்வார்.

டேய். கமல் நல்ல நடிகன்டா. என் கலையுலக வாரிசு அவன்.

சினிமாவுல எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கான். எங்க காலத்துல அவ்வளவு தொழில்நுட்பம் இல்லை.

என் தோள்மேல உட்கார்ந்துக்கிட்டு எல்லாத்தையும் பார்க்குறான்.”

என்று தன் தந்தை சிவாஜி சொன்னதை நெகிழ்ச்சியுடன் கூறினார் பிரபு.

Overall Rating : Not available

Latest Post