கமலுக்கு நவம்பர்-11; ரஜினிக்கு நவம்பர்-20… காத்திருக்கும் ரசிகர்கள்!

கமலுக்கு நவம்பர்-11; ரஜினிக்கு நவம்பர்-20… காத்திருக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajinikanthநவம்பர் 7ஆம் தேதி தானே கமல் பிறந்தநாள்.. இது என்ன தலைப்பில் நவம்பர் 11 தேதி.. ஒருவேளை டைப்பிங் மிஸ்டேக்கா இருக்குமோ? நினைக்கிறீர்களா…?

இல்ல பாஸ். எல்லாம் சரிதான்.

கமல் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள மீன் குழம்பும் மண் பானையும் படம் நவம்பர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் பிரபு, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், ஆஷ்னா சாவேரி உள்ளிட்டோர் நடிக்க, சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரித்துள்ளார்.

இதனையடுத்து ரஜினி நடித்து வரும் ஷங்கரின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 20இல் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதற்கான விழா மும்மையில் நடைபெறும் எனத் தெரிகிறது.

மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன், ஏஆர்.ரஹ்மான், ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்தினரும் கலந்து கொள்ளவிருக்கிறார்களாம்.

முதன்முறையாக ரஜினி படத்துடன் கனெக்ட் ஆகும் த்ரிஷா

முதன்முறையாக ரஜினி படத்துடன் கனெக்ட் ஆகும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini trishaபத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய ரசிகர்களை தன் அழகாலும் நடிப்பாலும் கவர்ந்து வைத்திருப்பவர் த்ரிஷா.

ரஜினி தவிர அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.

ரஜினியுடன் நடிக்க காத்திருப்பதாக பலமுறை தெரிவித்தும் விட்டார்.

இந்நிலையில் ரஜினி படத்துடன் தொடர்புடைய ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

கர்ஜனை என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார்.

இதே பெயரில் 1981ஆம் ஆண்டில் ரஜினி, மாதவி நடித்த படம் வெளியானது.

தற்போது த்ரிஷா நடிக்கவுள்ள படமானது அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான NH10 என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.

நவதீப் சிங் இயக்கிய இப்படம், நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒரு காதல் ஜோடிக்கு நேரும் அசம்பாவிதத்தை மையப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் மோதும் பிரபல இந்தி நடிகர்

அஜித்துடன் மோதும் பிரபல இந்தி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith actionசிவா இயக்கும் அஜித் படத்திற்கு எப்போது பெயர் வைப்பார்கள் எனத் தெரியவில்லை.

அனிருத் இசையமைப்பில் உருவாக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், கமல் மகள் அக்‌ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்தான் படத்தின் மெயின் வில்லன் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் அந்த வில்லனுடன் அஜித் மோதும் சண்டை காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளன.

சிவகார்த்திகேயன் வரிசையில் பூர்ணா; மேடையில் ஏன் அழுதார்.?

சிவகார்த்திகேயன் வரிசையில் பூர்ணா; மேடையில் ஏன் அழுதார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Poorna Cryசில தினங்களுக்கு முன், ரெமோ படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் அழுதது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சற்றுமுன் சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், நடிகை பூர்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை பூர்ணா பேசும்போது… “நான் முதலில் டான்ஸராக தான் இருந்தேன்.

பின்னர் பரத்துடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்தேன்.

அதன்பின்னர் சில படங்களில் நடித்தாலும் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

எனவே மீண்டும் டான்ஸராக இருக்கலாம் என முடிவெடுத்தேன்.

ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அருமையாக கேரக்டரை இப்படத்தில் கொடுத்த, மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோருக்கு நன்றி.

ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் என்னை பெரிய திரையில் பார்க்கும் போது என் அம்மா அழுதே விட்டார்”

இவ்வாறு பூர்ணா பேசும்போது அவரும் அழுது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

காக்க வைத்த தனுஷ்; கார்த்திக் சுப்புராஜீக்கு கைகொடுத்த பிரபலம்

காக்க வைத்த தனுஷ்; கார்த்திக் சுப்புராஜீக்கு கைகொடுத்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush karthik subburajஎஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த இறைவி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்த போதிலும், தயாரிப்பாளர்களை அவமதிக்கும் படியான காட்சிகள் இருந்ததால், இயக்குனருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே கார்த்திக் சுப்புராஜுடன் தனுஷ் இணையும் படம் தாமதம் ஆவதாக கூறப்பட்டது.

அதற்குள் வடசென்னை, பவர் பாண்டி, சௌந்தர்யா ரஜினியின் படம் ஆகிய படங்களில் தனுஷ் பிஸியாகி விட்டார்.

இந்நிலையில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாம்.

எனவே, இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கு ‘கபாலி’ தரிசனம்

தீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கு ‘கபாலி’ தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajinikanthநூறாண்டு கண்ட இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திற்கு விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளும் உருவானது.

படமும் வெளியாகி உலகளவில் பெரும் வசூலை அள்ளியது.

இப்படம் வெளியாகி 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், மீண்டும் இப்படத்தை ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு வந்துள்ளது.

இப்படத்தை தீபாவளி அன்று கேரளாவை சேர்ந்த ஆசியாநெட் டிவியில் ஒளிப்பரப்பாக்க இருக்கிறார்களாம்.

ஆனால், இது தமிழ் பதிப்பு. மலையாள பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows