விஷாலின் அரசியல் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் சங்க துணைத்தலைர் பொன்வண்ணன் ராஜினாமா

விஷாலின் அரசியல் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் சங்க துணைத்தலைர் பொன்வண்ணன் ராஜினாமா

Ponvannan resigns as Vice President of Nadigar Sangamநடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர்.

மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 23-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷால் தேர்தலில் நிற்கும்படியும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைர் பதவியில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல்.

நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது என பொன்வண்ணன் கடிதத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பதவிக் காலத்தை முடிக்காமல் விலகுவதில் வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், பதவியில் தொடர அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பொன்வண்ணன் பதவி விலகும் பட்சத்தில் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

பொன்வண்ணனின் இந்த முடிவுக்கு சேரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Ponvannan resigns as Vice President of Nadigar Sangam

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 2017ல் சிறந்த 12 படங்கள்

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 2017ல் சிறந்த 12 படங்கள்

Aramm and Taramani postersநடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா.

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது.

15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. 8 தோட்டாக்கள்

2. அறம்

3. கடுகு

4. குரங்கு பொம்மை

5. மாநகரம்

6. மகளிர் மட்டும்

7. மனுசங்கடா

8. ஒரு கிடாயின் கருணை மனு

9. ஒரு குப்பை கதை

10. தரமணி

11. துப்பறிவாளன்

12. விக்ரம் வேதா

மேலும் இந்த ஆண்டு திரையிடப்படும் இந்தியன் பனோரமா 12 படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு திரையிடல் தமிழ்ப் படமாக “என் மகன் மகிழ்வன்” (My Son is Gay) படம் திரையிடப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் ஒரு நாள் கூத்து கூட்டணி

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் ஒரு நாள் கூத்து கூட்டணி

Actor SJ Suryahமெர்சல் மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக கலக்கியிருந்தாலும், அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.

எஸ்ஜே. சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படம் சில பிரச்சினைகளால் இன்னும் வெளியாகவில்லை

இதனையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இறவாக்காலம் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து ஒரு நாள் கூத்து புகழ் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளாராம் இந்த மெர்சல் வில்லன்.

இப்படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் ஒருநாள் கூத்து படத்தில் நடித்த சில முக்கிய நட்சத்திரங்கள் இதில் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்-சமந்தா இணைந்துள்ள படத்தின் தலைப்பு இதுவா?

சிவகார்த்திகேயன்-சமந்தா இணைந்துள்ள படத்தின் தலைப்பு இதுவா?

sivakarthikeyan and samanthaவருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது எனலாம்.

எனவே இதே இயக்குனர் பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் என்ற படத்தை இயக்க, அதுவும் ஹிட்டடிக்க இந்த கூட்டணி ராசியானது.

எனவே 3வது ஹாட்ரிக் வெற்றி அடிக்க இணைந்துள்ள படம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார்.

மேலும் சமந்தா மற்றும் சூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு சீம ராஜா என்ற பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சினிமா பிஆர்ஓ.க்கள் நடத்தும் முப்பெரும் விழாவில் ரஜினி-கமல்

சினிமா பிஆர்ஓ.க்கள் நடத்தும் முப்பெரும் விழாவில் ரஜினி-கமல்

Rajinikanth and kamal haasanதமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ என்றால் அது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள்தான்.

அதுநாள் வரை அப்படி ஒரு நபரே இல்லாத திரையுலகில் எம்ஜிஆர்.தான் அவரை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது கலைமாமணி விருது கொடுத்ததும், திரைப்படம் குறித்தான பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆவணப்பணிகளுக்கு ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிதியுதவி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த துறை 60 வருடங்களை கடந்துவிட்டது.

ஆனால் இதுமுறையாக அமைக்கப்பட்டு, அதற்கான சங்கம் உருவாகி 25 வருடங்களை கடந்துள்ளது.

தற்போது பிஆர்ஓ. யுனியன் (மக்கள் தொடர்பாளர்) சங்கத்தில் 60 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிஆர்ஓ என்ற துறையை ஏற்படுத்திய எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது நூற்றாண்டு விழாவையும் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் விழாவையும் இதனை முறையாகப் பதிவு செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து வரும் ஜனவரி 3, 2018 அன்று முப்பெரும் விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த விழாவை, அரசியல் கலப்பில்லாமல் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சார்ந்த விழாவாகக் கொண்டாட முடிவு செய்து பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதலமைச்சர், கவர்னர் , எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோர் கலந்துக் கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திரைப்படத்துறையின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் இதில் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியிருக்கும் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட 76 பேரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் குழுவினர் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைக்கவுள்ளார்கள். நடன அமைப்பாளர் கலா குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமாண்ட அளவில் செய்து வருகிறார்கள்.

இந்த முப்பெரும் விழா, எம்.ஜி.ஆரைக் நாயகனாக அறிமுகப்படுத்திய கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருப்பதும், கலைவாணரின் பேத்தி பாடகி ரம்யா, கடவுள் வாழ்த்து பாடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷால்-சேரன் கடும் மோதல்; பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்

விஷால்-சேரன் கடும் மோதல்; பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்

vishal and cheranதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், ஊழல் நடந்திருப்பதாகவும் சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு புகார் தெரிவித்தது.

இதன் காரணமாக விஷால் சங்கத்தின் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இதனையடுத்து விஷால் மற்றும் சேரன் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த பிரச்சினையால் விஷால் வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows