அரசியல்வாதிகளுக்கு எக்ஸாம் வேண்டும்.; எழுத நான் ரெடி.. : கமல்

அரசியல்வாதிகளுக்கு எக்ஸாம் வேண்டும்.; எழுத நான் ரெடி.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician must have exam I am ready to write says KamalhassanGhibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார்.

ரெஜினா ஜேப்பியார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.

கமல் சார் இருக்கும் மேடையில் பேசுவது பதட்டமாக இருக்கிறது. எதை பற்றி பேச பயப்படுகிறோமோ, கூச்சப்படுகிறோமோ அதை நிச்சயம் பேச வேண்டும்.

இதற்கு முன்னோடி கமல் சார். அவர் போட்ட பாதையில் தான் நான் எழுதி வருகிறேன். பாலியல் வன்கொடுமை உலகம் முழுக்க நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் பேசுவதை தவிர, அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஜிப்ரான் சார் இந்த பாடலை எழுத சொல்லி கேட்டார்.

நிறைய வார்த்தைகளை எழுதினாலும் அது போதவில்லை. எழுத எழுத வந்து கொண்டே இருந்தது. இந்த பாடல் மூலம் ஒரு பாலியல் வன்கொடுமை என்ற வேதனை நமக்கு நடக்கும்போது, அதை நினைத்து நாம் நின்று போய் விடவோ, பயந்து ஓடவோ கூடாது.

அதை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதை தான் சொல்லி இருக்கிறேன் என்றார் பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணன்.

சமீப காலமாக நிறைய சர்ச்சைகள் இந்த சமூகத்தில் நம்மை சூழ்ந்து வருகின்றன. அந்த நேரத்தில் ஒரு நேர்மறையான சிந்தனையை விதைக்க முன்வந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

நல்ல விஷயங்கள் நிறையவே நடந்தாலும் இந்த மாதிரி விஷயங்கள் தான் அதை விட அதிகம் ஆக்கிரமிக்கின்றன.

கமல் சார் மாதிரி ஒரு நல்ல தலைவர் இந்த சமூகத்துக்கு வேண்டும். அவர் அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அப்துல கலாம் சார் உடன் கொஞ்சம் பயணித்திருக்கிறேன்.

நாட்டிற்காக அவர் எப்போதும் சிந்தித்து கொண்டே இருந்தார். அவரை போலவே கமல் சார் நாட்டையும், இளைஞர்களையும் பற்றி சிந்தித்து வருகிறார்.

எங்கு போனாலும் கமல் சாரின் அரசியலை பற்றி பேசுகிறார்கள். புது அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ரெஜினா மேடம் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிற்கும் எந்த தயக்கமும் இல்லாமல் முன் நிற்கிறார் என்றார் சமூக ஆர்வலர் அப்துல் கனி.

சமூகத்தில் எல்லோரும் கூச்சப்படுகிற, பேச பயப்படுகிற ஒரு விஷயத்தை துணிச்சலாக முயற்சித்திருக்கிறோம். கமல் சார் பள்ளியில் இருந்து நான் வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

சமூகத்துக்கு திருப்பி கொடுப்பதில் கமல் சார் என்றைக்குமே தவறியதில்லை. நானும் ஏதாவது பண்ணனும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த ஆல்பம். கமல் சார் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.

என்னை ஊக்குவித்த அப்துல் கனிக்கு நன்றி, நல்ல விஷயங்களை எப்போதும் ஊக்குவிக்கும் ரெஜினா ஜேப்பியார் அவர்களுக்கும் நன்றி. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது மாணவர்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

என்னுடைய 3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்னாலேயே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார். பெண்ணுக்கு தலைவருக்கு பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது.

பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது.

நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.

நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஜேப்பியார் இந்த இடத்தில் கல்லூரி கட்ட போகிறேன் என்று சொன்னபோது, இவ்வளவு தூரம் வந்து யார் படிப்பாங்க என்று நினைத்தேன்.

ஆனால் நானே இங்கு வந்திருக்கிறேன். இன்று விருட்சம் வளர்ந்து ஆலமரமாகி இருக்கிறது. ஜேப்பியார் ஆகச்சிறந்த முன்னோடி. அப்போதே இதை கணித்திருக்கிறார்.

வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி.

நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான். வழக்கமாக அரசியல்வாதிகள் தான் வாக்குறுதி கொடுப்பார்கள், இங்கு நீங்கள் எனக்கு வாக்குறுதி தர வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன்.

கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது. நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது.

மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Politician must have exam I am ready to write says Kamalhassan

GYFHOM kamal speech

கறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

கறி விருந்துடன் *காலா* 100வது நாளை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No power can split me and my fans says Rajinikanthடல்லாஸ் : காலா திரைப்படத்தின் 100 வது நாளை அமெரிக்க ரஜினிகாந்த் ரசிகர்கள் விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்கள்.

கிடாக்கறி, கோழிக்கறி, பாயசம் என பலவகை உணவுகளுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட “காலா கறி விருந்து” டல்லாஸ் மாநகரின் இர்விங் ஜெஃபர்சன் பார்க்கில் நடைபெற்றுள்ளது.

இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்கா “காந்தி பார்க்” என்று பரவலாக அழைக்கப்பட்ட நிலையில், பூங்காவின் ஒரு பக்கத்தில் காந்தி சிலையும் சில வருடங்களுக்கு முன்னால் நிறுவப்பட்டது.

பூங்காவின் மறு பகுதியில் உள்ள பிக்னிக் திடலை, நகர நிர்வாகத்திடம் அனுமதி பெற்று “காலா கறி விருந்து” க்காக வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ.)சார்பில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.

விழா தொடங்குவதற்கு முன்னதாக திடலுக்கு வந்த ரசிகர்கள், தமிழகத்தைப் போலவே கொடிகள், பேனர்கள் என அலங்கரித்தனர்.

ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார வசதி செய்து, ஸ்பீக்கர்கள் மூலம் ரஜினிகாந்த் படப் பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளனர். அதனால் அந்தப் பகுதியில் காலை முதலாகவே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

காலை பதினோரு மணி முதலாகவே ரசிகர்கள் கார்களில் வரத்தொடங்கினார்கள். 50க்கும் மேற்பட்ட கார்களில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை சைவ அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. கிடாக்கறி, கோழிக்கறி, இனிப்பு உட்பட 15 க்கும் மேற்பட்ட வகை உணவுகள், விருந்தில் இடம் பெற்றது. ரஜினிகாந்த் படப்பாடல்களை கரோக்கி இசையுடன் பாடினார்கள்.

காலா படத்தை நினைவு கூறும் வகையில் ரஜினி வாசு – விஜய் நடிப்பில் “காலாவும் ஹரிதாதாவும்” நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சியை அரங்கேற்றி அசத்தினார்கள்.

2 வயதுக் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் 150க்கும் மேற்பட்டோர், இந்த விழாவில் பங்கேற்று ரசிகர்களின் ஆரவாரத்தில் பிரம்மித்துப் போனார்கள். இந்த விழா பற்றி விழா ஏற்பாட்டாளர்கள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

ரஜினிவாசு, “காலா தலைவரின் வெற்றிப்படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தலைவரின் வெற்றியை கொண்டாடும் வகையில் க்றி விருந்து வைத்து விழா எடுத்தோம்.

தெய்வபக்தியும் தேசபக்கியும் கொண்ட தலைவரின் வழியில் என்றென்றும் அயராது உழைப்போம் ” என்று கூறினார்.

அன்புடன் ரவி கூறுகையில் “எனது பிள்ளைகள் காலா படத்தை பார்த்துவிட்டு இந்தியாவில் இது போன்ற நில உரிமை பிரச்சினை இருக்கிறதா?, என்று வருத்தத்துடன் கேட்டார்கள், குழந்தைகளிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது காலா,“ என்று தெரிவித்தார்.

ரஜினி ராஜா,”அமெரிக்காவில் தலைவர் ரஜினி படம் எப்போதும் மிகப்பெரிய வெற்றி பெரும். அதுபோல காலாவிற்கு, மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து மாபெரும் வெற்றியடைய செய்தனர்.

100 நாள் விழா கொண்டாடியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. காலா வெளியான முதல் நாள் கொண்டாடத்திற்கு இணையான கொண்டாட்டமாக இந்த 100 வது நாள் விழா அமைந்தது,” என்று கூறினார்.

மிஷிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரிலிருந்து விழாவில் பங்கேற்க வந்திருந்த அருள், “தமிழ்நாட்டுக்குச் சென்று தலைவர் பட விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை இந்த விழா தீர்த்து வைத்தது.

அமெரிக்காவில் ரஜினி ரசிகர்களின் விழாவில் பங்கேற்பது என்பது பெருமையாகவும் இருக்கிறது. தலைவர் ரசிகர்களை சந்தித்தது, குடும்பத்தினரை சந்தித்து விட்டு வந்து போல் மனநிறைவை தந்தது,” என்று கூறினார்.

இர.தினகர் கூறும் போது, “தலைவர் 40 வருடமாகவே குடும்பத்தை முதலில் பாருங்கள் என்று சொல்லி வருகிறார். அமெரிக்காவில் நேரம் என்பது மிகவும் அரிதாகிவிட்ட வேளையிலும், குடும்பத்தினராக குழந்தைகளுடன் விழாவில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்தது. தலைவர் ‘முதலில் குடும்பத்தை கவனியுங்கள்’ என்று சொன்னதாலோ என்னவோ, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ரஜினி ரசிகரின் குடும்பமும் தலைவரின் தீவிர விசுவாசிகள் ஆகிவிட்டனர். வரப்போகும் தேர்தலில் இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை தலைவருக்குத் தேடித் தரும்” என்று தெரிவித்தார்.

காலா விருந்து வெற்றிகரமாக நடைபெற உதவிபுரிந்த அனைவருக்கும், பங்கேற்றவர்களுக்கும் ரஜினி வாசு நன்றி தெரிவித்தார். காலா வெற்றிப்படமா தோல்விப்படமா என்ற விவாதத்திற்கு இடமின்றி, காலா ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்று ரசிகர்கள் கொண்டாட்டம் மூலம் தெள்ளத் தெளிவாக தெறிக்க விட்டுள்ளார்கள்.

விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, பிரபு, சதிஷ், நாகா, செந்தில், கார்த்திக், சங்கர், சந்தர், ஸ்ரீகாந்த், புனித், அருள், சுப்பு, பாலாஜி, மோனி, ராம்குமார், ரமேஷ், மகேஷ், ஆனந்த், கிருஷ்ணகுமார், ஸ்ரீனிவாசன், ரஜினி ராஜா, அன்புடன் ரவி, இர.தினகர் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

அமெரிக்காவிலும் ரஜினிகாந்துக்கு இப்படி தீவிர ரசிகர்கள் இருப்பதைப் பார்க்கும் போது, அவருடைய அரசியல் வெற்றி ஒன்றும் ஆச்சரியப்படக்கூடியது அல்ல என்றே தெரிகிறது.

Rajinikanth fans celebrated Kaala 100 days in America
Rajinikanth fans celebrated Kaala 100 days in America

விஜய்யின் சர்காருக்கு கடும் கெடுபிடிகள் காட்டும் தமிழக சர்கார்

விஜய்யின் சர்காருக்கு கடும் கெடுபிடிகள் காட்டும் தமிழக சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkarவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது.

கடந்த சில வருடங்களாகவே பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் தினத்தில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

எனவே சர்கார் திரைப்படத்திற்கும் அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் காலை காட்சிகள் 6 மணிக்கே ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை காட்சிகளுக்கு எந்த தியேட்டரிலும் முன்பதிவு செய்யப்படவில்லை..

சிறப்புக் காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அரசு தரப்பிலும் கடுமையான கெடுபிடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் பல தியேட்டர்களில் அதிகாலைக் காட்சிகளை ரத்தாகியுள்ளது.

2.0 ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்காக சத்யம் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு

2.0 ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்காக சத்யம் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 trailerநாளை நவம்பர் 3ஆம் தேதி ரஜினியின் 2.0 பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ரூ. 500 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி வாங்கியுள்ளதால் இந்த நிகழ்ச்சியை நாளை காலை 10 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யவுள்ளனர்.

சத்யம் தியேட்டரில் இந்த டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், லைகா சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்பிரபலங்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ரஜினி மற்றும் அக்சய் ஆகியோருடன் பிரபலங்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாம்.

இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டு உள்ளதால் எவரும் அனுமதி அட்டை (என்ட்ரி பாஸ்) இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள தியேட்டர்களில் காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டிசம்பரில் ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டிசம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaa release date posterநடிகர், பாடகர், பாடலாசிரியர் என வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கனா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

எஸ்கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இவர் தயாரித்துள்ள இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

இவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடிக்க, அவரது அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

முக்கிய கேரக்டர் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இவரது மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியுள்ளார்.

திபு நிணன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இப்படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தேதியை மட்டும் பின்னர் அறிவிக்கவுள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyans next movie Kanaa release date updates

கொல்லத்தில் உச்சத்தில் நிற்கும் 175 அடி உயர விஜய்; அச்சத்தில் நடிகர்கள்!

கொல்லத்தில் உச்சத்தில் நிற்கும் 175 அடி உயர விஜய்; அச்சத்தில் நடிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans Sarkar Celebrations at Kollam Keralaதமிழக விஜய் ரசிகர்கள் பாவம் என்றே சொல்லலாம். அவர்களை ஓவர் டேக் செய்யும் வகையில் கேரளா விஜய் ரசிகர்கள் அசத்தி வருகிறார்கள்.

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் கேரளாவில் மட்டும் 300க்கும் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகிறது.

210 தியேட்டர்களில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் விஜய்யின் 175 அடி உயர ஒரு கட் அவுட் ஒன்றை விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இன்று மாலை அதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

விஜய்யின் ஒவ்வொரு படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் இப்படி புதுமையாக எதையாவது செய்து வருவதால் மலையாள நடிகர்களே அச்சத்தில் இருக்கிறார்களாம்.

Vijay fans Sarkar Celebrations at Kollam Kerala

kollam vijay sarkar cutout

More Articles
Follows