ஆன்மீக அரசியல் மாநாடு; ரஜினியை அழைக்கும் அர்ஜூன் சம்பத்

ஆன்மீக அரசியல் மாநாடு; ரஜினியை அழைக்கும் அர்ஜூன் சம்பத்

Politician Arjun Sampath talks about Rajini and his Aanmeega Arasiyalஇந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது…

ராயப்பேட்டையில் நடக்கும் இந்து மக்கள் கட்சி அரசியல் மாநாட்டையொட்டி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து டிசம்பர் 1-ந்தேதி காலை 11 மணிக்கு காவி கொடி பேரணி தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் ஆன்மீக அரசியலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.

ஆன்மீக அரசியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தோம். அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ரஜினிகாந்த் தனித்தே போட்டியிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவார். அவரது அரசியல் மக்கள் நலன் காக்கும் அரசியலாக இருக்கும். வருகிற தேர்தலில் ரஜினி நிச்சயம் மாற்றத்தை தருவார்.” எனக் கூறினார்.

Politician Arjun Sampath talks about Rajini and his Aanmeega Arasiyal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *