தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாடகி சின்மயி குற்றம் சாட்டியிருந்தார்.
சின்மயிக்கு பல நடிகைகள் ஆதரவு கொடுத்தாலும் நடிகர்களிலேயே சித்தார்த் மட்டும் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார்.
சின்மயின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க பொய்யானது. உள்நோக்கத்துடன் சொல்லப்படுபவை.
பாலியல் குற்றம் சொல்பவர்கள், உண்மையிருந்தால் வழக்கு தொடரலாம். அப்படி தொடர்ந்தால் அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன்.
கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன்.
நான் நல்லவனா? கெட்டவனா என்பதை இப்போதும் யாரும் முடிவு செய்ய வேண்டாம். அதனை கோர்ட் முடிவு செய்யட்டும்.” இவ்வாறு அந்த வீடியோவில் வைரமுத்து பேசியுள்ளார்.
வைரமுத்து வீடியோவை பார்த்த சின்மயி கூறியுள்ளதாவது… வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Playback singer Chinmayis shocking reply to Vairamuthu Video