கேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி சொந்த பணத்தை தூக்கி கொடுத்தார்.

கேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி சொந்த பணத்தை தூக்கி கொடுத்தார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director perarasuகேரளா வெள்ளத்திற்கு இளைய தளபதி விஜய் 70 லட்சம் கொடுத்தார், எந்த அரசியல்வாதி சொந்த பணத்தை தூக்கி கொடுத்தார்.

இயக்குனர் பேரரசு கோப பேச்சு…

“பேய் எல்லாம் பாவம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பேரரசு பேசியதாவது…

மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள்.

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள். நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும் என பேசினார்.

இயக்குனர் A.வெங்கடேஷ் பேசியதாவது…

“பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் பையர்ஸ் சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என பேசினார்.

விழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிப்பு.

கதாநாயகன் அரசு, கதாநாயகி டோனா சங்கர் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல், ஒளிப்பதிவாளர் பிரசாந்த், இசையமைப்பாளர் நவீன் சங்கர், எடிட்டர் அருண்தாமஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய தவமணி பாலகிருஷ்ணன், இயக்குனர் தீபக் நாராயணன்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinஇயக்குன மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் மேஸ்ட்ரோ இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி இருக்கிறது.

இயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வியந்து பேசும்போது, “வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும்? தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

அசாதாரணமான, அதே நேரம் கவனத்தை ஈர்க்கும் நடிகர்கள் பட்டாளத்தை பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, “பெரும்பாலான நேரங்களில் நட்சத்திரங்கள் தேர்வு என்பது இயக்குநரின் மனநிலையை பொறுத்து எடுக்கப்படும் முடிவு. ஆனால் மிஷ்கின் சார் விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் ராம் ஆகியோர் அவருடைய தேர்வுகள், எங்களுக்கு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உண்மையில், மிஷ்கின் சார் எங்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தால் கூட, நாங்களும் அதே பெயர்களை சொல்லியிருப்போம்” என்றார்.

டபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இந்த படம், வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம்

திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor rocket ramanathanதமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) நேற்று சென்னையில் காலமானார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் உள்பட ஏராளமான விருதுகள் பெற்றவர்.

“ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ராக்கட் ராமநாதன். பல குரல் கலையை அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்த அயராது உழைத்தவர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரத குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்”.

கேரளாவுக்கு ஒரு கோடி நிதியுதவி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

கேரளாவுக்கு ஒரு கோடி நிதியுதவி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DmGwOpuVsAU3nupசமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையில் அஜித்தை இயக்கும் வினோத் !

சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகளை “கேரளா… கேரளா…டோண்ட் வொர்ரி கேரளா… என்று மாற்றிப் பாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

இப்போது இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 1 கோடி கேரளாவுக்கு வழங்கியுள்ளார்.

அடுத்த படத்தை இயக்க திருநெல்வேலியில் முகாமிட்டுள்ள தனுஷ்

அடுத்த படத்தை இயக்க திருநெல்வேலியில் முகாமிட்டுள்ள தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushதிரையுலகில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ்.

இவர் ராஜ்கிரணை நாயகனாக வைத்து இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ்.

வடசென்னை ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்; விஷாலுடன் மோதலா.?

தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காகத் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளார்.

எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்!

ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VJ suresh“நமது உணர்வுகள் தான் நம் வாழ்வை வழிநடத்தும் சக்திகளாக இருக்கின்றன” என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன.

‘மோ’ என்ற திகில் திரைப்படம் மற்றும் ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் ஆர்டிஎம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதன் இடையே உள்ள உணர்ச்சி பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.

இயக்குனரின் முந்தைய படங்களான ‘மோ’ மற்றும் ‘அதிமேதாவிகள்’ படங்களின் நாயகனான சுரேஷ் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மைம் கோபி மற்றும் கல்லூரி வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆதித்யா-சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல்-விமல் ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஒயிட் மூன் டாக்கிஸுடன் இணைந்து BRS டாக்கீஸ் கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

More Articles
Follows