தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண்.
இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி.
கடந்த 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை இவரது அண்ணன் சிரஞ்சீவி தொடங்கியபோது அதன் இளைஞரணியான யுவ ராஜ்யத்தின் தலைவராக இருந்தார்.
இதன் பின்னர், சிரஞ்சீவி தனது கட்சியைக் காங்கிரஸ் கட்சியோடு இணைத்து கொண்டதால், இதில் உடன்பாடு இல்லாமல் கட்சியிலிருந்து வெளியேறினார் பவன் கல்யாண்.
கடந்த 2014-ல் ஜன சேனா எனும் கட்சியைத் தொடங்கினார்.
2017-ல் முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.
எனவே படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.
ஆனால், அரசியல் களம் மற்றும் தேர்தல் முடிவுகள் பவனுக்கு சாதகமாக அமையவில்லை.
எனவே அரசியல் ஆர்வத்தை குறைத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் .
இன்று பவன் கல்யாண் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு பவன் கல்யாணை சந்திக்க காரில் 5 ரசிகர்கள் முழுகு என்ற இடத்தை நோக்கி சென்றனர்.
அப்போது பசர்கொண்டா அஅருகே எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மேகலா ராஜேஷ், சபீர், மெடிச்சாந்து, ரோஹித், பவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் மற்றொரு விபத்தும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.
நேற்று இரவு சித்தூர் மாவட்டத்தில் பவன் கல்யாணை வாழ்த்தி பேனர் வைத்த போது, மின்சாரம் தாக்கி சேகர், அருணாச்சலம் & ராஜேந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளார் பவன் கல்யாண். மேலும் தெலுங்கு நடிகர் ராம் சரண் ரூ.2.5 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் 2 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஆக பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.