ஷாருக்கான் – தீபிகாவின் ‘பதான்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

ஷாருக்கான் – தீபிகாவின் ‘பதான்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த கடந்த ஜனவரி 25-ல் வெளியான படம், ‘பதான்’.

ஹிந்தியில் வெளியான இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் இடம்பெற்ற காவி கவர்ச்சி உடை சர்ச்சையை கிளப்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் பல சாதனைகளைப் படைத்து வசூல் வேட்டையாடி வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான முதல் நாளிலேயே ரூ.105 கோடி வசூலை அள்ளியது.

இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில், உலகளவில் ரூ.1100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவில் மட்டும் ரூ.545 கோடியை வசூலித்து இந்தியில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் ‘பதான்’ பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று மார்ச் 22-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தளத்தில் ‘பதான்’ படத்தை நீங்கள் பார்க்கலாம்.

பதான்

Pathaan movie OTT release date update

காதல் கணவரை விவாகரத்து செய்யும் ராம்சரண் சகோதரி நடிகை நிஹாரிகா.?

காதல் கணவரை விவாகரத்து செய்யும் ராம்சரண் சகோதரி நடிகை நிஹாரிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2016ல் வெளியான ‘ஒக்க மனசு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா.

இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். மேலும் நடிகர் ராம்சரணுக்கு சகோதரி முறை ஆவார்.

இவர் தமிழில் விஜய்சேதுபதி உடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நிஹாரிகா நடித்திருந்தார்.

ஆந்திர போலீஸ் பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2020-ல் திருமணம் செய்துக் கொண்டார் நிஹாரிகா.

இவர்களின் திருமணம் உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு காரணமாக…

இன்ஸ்டாவில் கணவரை பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் நிஹாரிகா.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஹாரிகாவுடன் இருக்கும் போட்டோ வீடியோக்களை சைதன்யா நீக்கிவிட்டார்.

இதனால் இருவரும் விவாகரத்துப் பெற உள்ளதாகத் தெலுங்கு சினிமா உலகில் பரவலாக பேசப்படுகிறது.

Ram Charans cousin Niharika & Chaitanya heading for divorce?

44 வயதில் முதல் திருமணம் செய்த ரஜினி – கமல் – விஜய் பட நடிகை லாவண்யா

44 வயதில் முதல் திருமணம் செய்த ரஜினி – கமல் – விஜய் பட நடிகை லாவண்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் லாவண்யா தேவி.

44 வயதான லாவண்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமலே இருந்து வந்துள்ளார்.

இவர் ரஜினியுடன் ‘படையப்பா’ படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நாசரின் மனைவியாக இவர் நடித்திருப்பார்.

மேலும் கமலுடன் ‘தெனாலி’, விஜய் உடன் ‘பத்ரி’, சரத்குமார் உடன் ‘சூரிய வம்சம்’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தொழிலதிபர் பிரசன்னா என்பவரை சில நாட்களுக்கு முன் திருப்பதியில் திருமணம் செய்துக் கொண்டார்.

இவர் திருமணத்தில், ‘அருவி’ சீரியல் குழுவினர் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லாவண்யா தேவி

Cinema & Serial Actress Lavanya Gets Married At 44

தெலுங்கில் வாய்ப்புகளை குவிக்கும் ‘தமிழ்’ பட நாயகி ஐஸ்வர்யா

தெலுங்கில் வாய்ப்புகளை குவிக்கும் ‘தமிழ்’ பட நாயகி ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் ‘கார்த்திகேயா 2’ .

இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் ‘ஸ்பை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்.

பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும்.

இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இந்த இரண்டு திரைப்படங்களை தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனனை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் இவர் தற்போது முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், ஓய்வின்றி ஹைதராபாத் -சென்னை என பரபரப்பாகியிருக்கிறார்.

தமிழ் திரையுலகிலிருந்து பான் இந்திய நட்சத்திர நடிகையாக ஐஸ்வர்யா மேனன் உயர்ந்து, புதிய உச்சத்தை தொடுவார் என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

Iswarya Menon acting in telugu industry film

பெயர் வைப்பதற்கு முன்பே ரிலீஸ் தேதியை முடிவு செய்த சூர்யா – ஜோதிகா

பெயர் வைப்பதற்கு முன்பே ரிலீஸ் தேதியை முடிவு செய்த சூர்யா – ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’.

தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் ‘புரொடக்சன் 27’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த இந்தி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 தேதியன்று ‌உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பால் அக்சய் குமாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே இந்தி திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதியர், தமிழில் பெற்ற வெற்றியை விட கூடுதலான வெற்றியை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புரொடக்சன் 27

production no 27 movie release in september 1

தமிழ் புத்தாண்டு பிறப்பதற்குள்.. ரஜினிக்காக நெல்சன் போட்ட திட்டம்

தமிழ் புத்தாண்டு பிறப்பதற்குள்.. ரஜினிக்காக நெல்சன் போட்ட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படப்பிடிப்பை ஏப்ரல் 15, 2023க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ரஜினிகாந்த் படக்குழுவுடன் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth’s ‘Jailer’ shooting to be wrapped up soon

More Articles
Follows