தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷாருக்கான் & அவரது ‘சார் உல்லு தே பத்தே’ – ஆகியவை இணைந்து வாழ்நாள் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது
தி டங்கி:
இந்த ஆண்டின் மிகவும் இதயத்தைத் தூண்டும் படமாக அமைந்துள்ள தி டங்கியின் டிராப் -4 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சியை அளித்துள்ளது.
ராஜ்குமார் ஹிரானியால் படம் உருவாக்கப்பட்டுள்ளது. டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.
ரயிலில் ஷாருக்கான் (SRK) பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக் கானின் கேரக்டர்) தொடங்கிறது.
ஷாருக்கானின் பிறந்தநாளில் டங்கி டிராப்-1 (Dunki Drop 1) வெளியானது. இதைத் தொடர்ந்து அர்ஜித் சிங்கின் இனிமையான குரலில் லுட் புட் கயா என்ற தலைப்பில் டங்கி டிராப் 2 வெளியானது.
டிராப்-3-ல் சோனு நிகாமின் ஆன்மாவைத் தூண்டும் பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே, ஒரு கூர்மையான மெல்லிசையுடன் அமைந்த பாடல் இதயங்களைக் கவர்ந்தது.
தற்போது டங்கி டிராப் 4, நட்பு மற்றும் அன்பின் அடுக்குகளை அழகாக விரித்து, டங்கி படத்தின் பாதையில் பார்வையாளர்களை பரபரப்பான பயணத்துக்கு அழைத்துச் செல்கிறது.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் தயாரித்துள்ளனர்.
அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படம் 21 டிசம்பர் 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
https://bit.ly/DunkiDrop4-Trailer
Shahrukh starrer Dunki Drop4 song goes viral