தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துபாய் நாள் 1 – துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது.
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘டங்கி’, இந்த வாரத்தில் வெளியாகவிருப்பதால், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதனை விளம்பரப்படுத்தும் பயணத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளார்.
பார்வையாளர்களின் உற்சாகம் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில்.. SRK தன்னுடைய ரசிகர்கள் மீதான அன்பை உலகம் முழுவதும் பரப்புவதன் மூலம் அதனை மேலும் உயர்த்தி இருக்கிறார்.
ரசிகர்களை சந்திப்பதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தவற விடவில்லை. துபாயிலிருந்து ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் பயணத்தை தொடங்கி, குளோபல் வில்லேஜில் அவர் நுழையும் போது பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘டங்கி டே 1’ என குறிப்பிடப்படும் இந்த விளம்பரப்படுத்தப்பட்ட பயணத்தில் SRKவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷாருக்கான் அண்மையில் துபாயில் உள்ள வி ஓ எக்ஸ் (VOX) சினிமாஸ்க்கு வருகை தந்தார். அவரது பிரவேசம் பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தது. வி ஓ எக்ஸ் சினிமாஸ் நிகழ்ச்சிக்காக டெய்ரா சிட்டி சென்டருக்கு அவர் சென்றபோது பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. எப்பொழுதும் போல் SRK தனது வசீகரமான முகத்துடன்.. அன்பை பரப்பிய போது.. அங்கு கூடியிருந்த மக்களின் கூச்சல்களும், ஆரவாரமும் அந்த ஆடிட்டோரியத்தை அதிர வைத்தது.
இதைத்தொடர்ந்து ஷாருக்கான் துபாய் குளோபல் வில்லேஜில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ஜெயன்ட் வீலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குளோபல் வில்லேஜில் ஷாருக்கானுக்கான மேடையும் தயாராக இருந்தது. இது பார்வையாளர்களுக்கு ‘டங்கி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Dunki promotion in full swing Shahrukh Dubai visit