தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 6 அத்தியாயம்.
ஷாம் இசையமைத்துள்ள இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டிரைலர் இன்று வெளியானது.
இப்படத்தின் கதையை ஆறு அத்தியாயங்களாக வகைப்படுத்தியுள்ளனர். எனவே 6 இயக்குனர்களை கொண்ட 6 குழுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன், சேரன், சசி, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, அறிவழகன், மீராகதிரவன், வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது பார்த்திபன் பேசியதாவது…
நடிகர் இயக்குநர் பார்த்திபன்
மழை வணக்கம். மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள்.
2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன்.
இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை.
இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன்.
தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்.” என்றார்.
Parthiban refuse to attend 2pointO movie audio launch at Dubai