அரசுப் பள்ளியை புதுப்பித்த லாரன்ஸ்; ஓவியா திறந்து வைத்தார்

அரசுப் பள்ளியை புதுப்பித்த லாரன்ஸ்; ஓவியா திறந்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya raghava lawrenceவிழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது.

இதை புதுப்பித்து தரும்படி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்ற செயலாளர் சங்கர் மற்றும் பொதுமக்கள், நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்சிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன் பேரில் ரூ.5 லட்சம் செலவில் அந்த கட்டிடத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த கட்டிட வேலைகள் நடந்து முடிந்தது.

அதன் திறப்பு விழாவில் நடிகர் லாரன்ஸ் கலந்துக் கொள்ளவில்லை.

அவரின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளர்.

அவருக்கு பதிலாக நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்வார் என தெரிவித்தார்.

இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இரண்டு பள்ளிகளோடு நின்று விடப்போவதில்லை… என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

என்னால் தான் படிக்க முடியவில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டும் என்றார்.

புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் ஓவியா பேசியதாவது,

உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவள் தான்.

அரசு பள்ளிகளில் படிக்க அனைவரும் முன்வரவேண்டும். பெரிய பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளாக வரமுடியும் என்பது கிடையாது.

விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். அரசு பள்ளியை நடிகர் – நடிகைகள் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்.

இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள். அன்று இந்த திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

குப்பை படங்களை கூட பார்க்கும் பத்திரிகையாளர்கள் பாவம்… : ஆர்.வி. உதயகுமார்

குப்பை படங்களை கூட பார்க்கும் பத்திரிகையாளர்கள் பாவம்… : ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RV Udhayakumarஎஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான “எவனும் புத்தனில்லை” படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்த விழாவில் பேசிய சிலர் மீ டூ பற்றி குறிப்பிட்டார்கள். இது என்ன மீ டூ.?

ஏ டூ பி டூ? இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.

ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம்.

ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும்.

அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லிங்கே விடுபட்டு போகும்.

இது போல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்புக் ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும் அடித்தும் விடுவேன்.

அதற்கு பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள்.

என் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த் கமல், விஜய்காந்த் கார்த்திக் எல்லோருமே கட்சி ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு அப்படி ஒரு ராசியோ என்னவோ?

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

தரமான படங்களாக எடுங்கள்..மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள். தியேட்டர் தருவார்கள்.

நான் வரி விலக்குக்காக பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை..

அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான். அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்.

இந்த பத்திரிகைகாரங்க பாவம்.எவ்வளவு குப்பை படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து தண்டணையை அனுபவித்தே வருகிறார்கள்.

படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே வந்து விடுகிறார்.

பத்திரிக்கையாளர்களும் இந்த சீனுக்கு அடுத்த சீனும் நல்லா இருக்கும் .பாராட்டி எழுதுவோமே என்று கடைசி வரை பார்த்து விடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது…

இவ்வாறு ஆர்.வி உதயகுமார் பேசினார்.

விழாவில் இயக்குனர் தளபதி நடிகர்கள் நபி நந்தி, சரத் சுவாசிகா எலிசபெத் சுப்புராஜ் இயக்குனர் எஸ்.விஜயசேகரன் இசையமைப்பாளர் மரியா மனோகர் ஆகியோர் பேசினார்கள்.

விஜய்யை போல் அவரது ரசிகர்கள் இல்லையே..; பாக்யராஜ் வேதனை

விஜய்யை போல் அவரது ரசிகர்கள் இல்லையே..; பாக்யராஜ் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bhagyarajமுருகதாஸ் இயக்கியுள்ள விஜய்யின் சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ல் வெளியாகிறது.

இப்படத்தின் கதை என்னுடையது என செங்கோல் பட கதை உரிமையாளர் வருண் என்கிற ராஜேந்திரன் கோர்ட்டில் வழக்கு போட இது பிரச்சினையானது.

தற்போது கோர்ட்டில் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. மேலும் வருண் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க முருகதாஸ் சம்மதம் சொல்லியிருக்கிறார் என கூறப்படுகிறது-

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே உதவி இயக்குனர் வருணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடியவர் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ்.

இன்று கோர்ட்டில் வழக்கு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசியதாவது :

சர்கார் கதை விவகாரத்தில் முடிந்தவரை வெளியே பிரச்னை தெரியாமல் சுமூகமாக பேசி தீர்க்க முயற்சித்தேன்.

சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை மறுத்த முருகதாஸ் இப்போது கோர்ட்டில் சம்மதம் சொல்லியிருக்கிறார். பிரச்னை சுமூகமாக முடிந்தது மகிழ்ச்சி.

அதேசமயம் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். நான் ஏதோ விஜய் படத்திற்கு தடை ஏற்படுத்துவது போன்று என்னையும், எனது மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் மிகவும் விமர்சித்தார்கள்.

என் மகனும் விஜய்யின் ரசிகன் தான், விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். அதேப்போல் வருணை விட முருகதாஸை எனக்கு நன்றாக தெரியும்.

அப்படி இருக்கையில் எதற்காக வருண் பக்கம் நிற்க வேண்டும். நான் ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் படத்தின் கதையை வெளியில் சொன்னேன்.

இதுதொடர்பாக விஜய்யிடம் பேசினேன். அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். எனது படம் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லவில்லை, உங்கள் மனதிற்கு எது நியாயமோ அதை செய்யுங்கள் என்றார்.

விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்று பாக்யராஜ் உருக்கமாக பேசினார்.

மீண்டும் அஜித்துடன் இணையும் ஏஆர். ரஹ்மான்; வினோத் இயக்குகிறார்

மீண்டும் அஜித்துடன் இணையும் ஏஆர். ரஹ்மான்; வினோத் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith ar rahmanகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தற்போது மீண்டும் அஜித் படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அஜித்.

இப்படம் 2019 பொங்கலுக்கு வருகிறது. இதனையடுத்து 2019 பிப்ரவரியில் தன் அடுத்த படத்தை தொடங்குகிறார் அஜித்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் எனவும் இதில் திருமணமான நடிகை நஸ்ரியா ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

புத்தகங்கள் மட்டுமே நம்மை கேள்விகள் கேட்கும்… : ரஞ்சித் பேச்சு

புத்தகங்கள் மட்டுமே நம்மை கேள்விகள் கேட்கும்… : ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjith“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு “சமத்துவம் அறிதல்” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

”உளவியலை கட்டமைக்கும் உட்கூறுகள்”, “தமிழகத்தில் கலையும் இலக்கியமும்”, “கலை இலக்கியத்தில் சாதி”, “பொதுப்புத்தியை உதிர்த்தல்”, “சாதி மறுப்பு சாதி ஒழிப்பின் தேவையும் சாத்தியங்களும்” , “சாதி ஒழிப்பு சமத்துவக்கருத்தியலை கலை இலக்கிய வடிவங்களாக்குதல்” ஆகிய தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ், அழகிய பெரியவன், AB.ராஜசேகரன், யாழன் ஆதி, பிரளயன், சுகிர்தா ராணி, வ.கீதா, பாமா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்வில் உரையாற்றிய இயக்குனர் பா.இரஞ்சித்,

”எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். வாசித்தலும், எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாக இருக்கிறது. புத்தகங்கள் மட்டுமே நம்மை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

இந்த சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகள், அரசியல், வாழ்வியல் வரலாறுகளை புத்தகங்களே நம்மை கேள்வியெழுப்ப வைக்கும். இந்த மூன்று நாள் நிகழ்வு இளம் எழுத்தாளர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது, நான் இந்த நிகழ்வுக்கு ஒரு மாணவனாகத்தான் கலந்துகொண்டேன். பெரும் பயனுள்ளதாக இருந்தது, கலை இலக்கிய களத்தில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவோம்” என்றார்.

மூன்று நாள் நிகழ்விலும் கலந்து கொண்ட இளம் எழுத்தாளர்கள், “இதுபோன்ற முன்னெடுப்புகள் மிக அவசியமானவை.

எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்களுக்கு பல கதவுகளை இந்த நிகழ்வு திறந்து விட்டிருக்கிறது. இதன் மூலம் எங்களுடைய புரிதலும், சமூகத்தின் மீதான அக்கறையும் கூடியிருக்கிறது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த “நீலம் பண்பாட்டு மையம்” தோழர்களுக்கு நன்றி” எனக் கூறினார்கள்.

மேலும் நிகழ்வின் சிறப்பம்சமாக, மூன்று நாட்கள் இரவிலும் “பேராவூர் ரூபகம் தெருக்கூத்து சபாவின் மதுரை வீரன் நாடகம்”, “சென்னை கலைக்குழுவின் வீதி நாடகங்கள்” போன்ற தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

சர்கார் ரிலீஸ் அப்டேட்ஸ்..: 80 நாடுகள்; 200 கோடி; 1200 தியேட்டர்கள்

சர்கார் ரிலீஸ் அப்டேட்ஸ்..: 80 நாடுகள்; 200 கோடி; 1200 தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சு இப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இதன் வியாபாரம் மட்டும் ரூ. 200 கோடி வரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் சர்கார் வெளியாகிறது.

சுமார் 80 நாடுகளில் 1200 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் வெளிநாட்டு உரிமையை ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows