அரசியலுக்கு வராதீங்க.. தாங்க மாட்டீங்க..; பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

அரசியலுக்கு வராதீங்க.. தாங்க மாட்டீங்க..; பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman rajinikanthநாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்ற பனைத் திருவிழாவின் போது செய்தியாளார்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது ரஜினிகாந்த் பற்றி பேசினார் சீமான்.

“ரஜினி அவருடைய கட்சியில் வேறொரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என்று சொன்னதும் அவருடன் இருந்த முரண்பாடு நீங்கிவிட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால்… அவர் அரசியலில் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர்.

நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை அவரால் தாங்க முடியாது.

இமயமலை செல்லுங்கள், புத்தகம் படியுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்” என தெரிவித்துள்ளார் சீமான்.

NTK leader Seeman advice to Super Star Rajinikanth

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இப்பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் லோகேஷ்.்

தற்போது இப்பட முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதனையடுத்து கமல் தயாரிப்பில் சிம்புவை லோகேஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் கமல் படத்தை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

kamal haasan lokesh kanagaraj

Kamal and Simbu joins for a new film ?

சுசீந்திரன் இயக்கத்தில் STR 39..; சூட்டிங் புறப்படும் சிம்பு..ரசிகர்கள் ஹாப்பி

சுசீந்திரன் இயக்கத்தில் STR 39..; சூட்டிங் புறப்படும் சிம்பு..ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR 39வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்பட சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

அதற்குள் ஒரு மாத படப்பிடிப்பில் கிராமத்து கதை ஒன்றில் நடிக்கிறாராம் சிம்பு.

இப்படத்தை சுசீந்திரன் இயக்கவுள்ளார் என்ற செய்திகளை நாம் பார்த்தோம்.

இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்புவின் 39-வது படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாகவும், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்த வாரம் திண்டுக்கலில் தொடங்க உள்ளது.

2021ல் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார் சிம்பு.

சிம்பு சூட்டிங் போனால் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் தானே…

Actor Simbu next with suseenthiran film go on floors

எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்..; விஜய்சேதுபதி ரசிகர்களின் ‘அரசியல்’ போஸ்டர்

எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்..; விஜய்சேதுபதி ரசிகர்களின் ‘அரசியல்’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசினிமா ஹீரோக்கள் கொஞ்சம் பிரபலமானால் அதுவும் கொஞ்சம் அரசியல் பேசிவிட்டால் அவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பது வாடிக்கையாகிவிட்டது.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் இது போன்ற போஸ்டர்களை அடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி ரசிகர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ‘எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்’ என்று போஸ்டர் அடித்துள்ளனர்.

மேலும், அதில் ‘மக்களில் ஒருவனே, மக்களுக்கான ஒருவனே, எங்கள் மக்கள் செல்வனே! விரைவில் வருக’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vijay Sethupathi fans stick political poster in Kallakurichi district

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று..; ஐதராபாத் மருத்துமனையில் அனுமதி

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று..; ஐதராபாத் மருத்துமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamannaah coronaகொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது.

ஏழை முதல் பணக்காரர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கோடிகளில் சிகிசலசைக்கு பணம் கொடுத்தாலும் பணக்காரர்களே இதன் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

பாடகர் எஸ்பிபி, தொழிலதிபர் வசந்தகுமார், அரசியல்வாதி ஜெ. அன்பழகன் உள்ளோட்டோர் அண்மையில் மரணமடைந்தனர்.

பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினர், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Actress Tamannaah tests positive for COVID 19

அந்த அவார்ட் கிடைச்சா தான் அதெல்லாம்..; கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டிசன் போட்டாரா நயன்தாரா.?

அந்த அவார்ட் கிடைச்சா தான் அதெல்லாம்..; கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டிசன் போட்டாரா நயன்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara vignesh shivanதென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகை நயன்தாரா.

‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து பணிபுரிந்த போது நயன்தாரா & விக்னேஷ் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

அதன் பின்னர் பல வருடங்களாக இருவரும் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.

ஆனால் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற கேள்வி அடிக்கடி எழும்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது.

தனக்கு தேசிய விருது கிடைத்த பின்னர்தான் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளாராம் நயன்.

இந்த தகவல் உண்மையா? என்பது ஒரு புறம் இருந்தாலும் அவருக்கு எப்போது தேசிய விருது கிடைப்பது? எப்போது திருமணம் நடப்பது? என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Nayanthara’s marriage condition to Vignesh Shivan

More Articles
Follows