கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி-கமலின் ரீல் மகள்..; இப்போ நலமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி-கமலின் ரீல் மகள்..; இப்போ நலமா?

Nivetha Thomas‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நிவேதா தாமஸ்.

இவர் ‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாகவும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்திருந்தார்.

தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது பவன் கல்யாண் & அஞ்சலியுடன் ‘வக்கீல் சாப்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.

இவர் சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

வீட்டில் தன்னைத் தானே தனிமை படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

“தன் பெட்டில் சிரித்தபடி படுத்திருக்கும் நிவேதா ஒவ்வொரு நாளும் வந்து போகிறது, நான் நலமாக இருக்கிறன் என கூறியுள்ளார்.

விரைவில் நிவேதா தாமஸ் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Nivetha Thomas opens up about her health

ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘குக் வித் கோமாளி’ பவித்ராவுடன் ஜோடி போடும் சதீஷ்

ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘குக் வித் கோமாளி’ பவித்ராவுடன் ஜோடி போடும் சதீஷ்

Sathish Pavithra (2)ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து முத்திரை பதித்து வரும் கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ், வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படமொன்றை தயாரிக்கின்றனர்.

பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி விருதுகளை வென்றுள்ளவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21-வது படைப்பான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அர்ச்சனா கல்பாதி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்,

திரைப்படத்தை பற்றி கூறும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்…

“மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான ஃபேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.

நடிகர்கள்: சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கிஷோர் ராஜ்குமார்

தயாரிப்பு நிறுவனம்: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள்: கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாதி

ஒளிப்பதிவு: பிரவீன் பாலு

இசை: அஜீஷ் அஷோக்

படத்தொகுப்பு: ராம் பாண்டியன்

கலை: எம் ஜி முருகன்

சண்டை பயிற்சி: மைக்கேல்

நிர்வாக தயாரிப்பு: எஸ் எம் வெங்கட் மாணிக்கம்

தயாரிப்பு நிர்வாகம்: டி சரவணகுமார்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Sathish Pavithra Lakshmi to make debut as lead actors

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் உடன் இணையும் விஜய்சேதுபதி பட நாயகி

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் உடன் இணையும் விஜய்சேதுபதி பட நாயகி

tanya ravichandran karuppanஇளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய டிஜிட்டல் தளமொன்றை Dr ஐசரி K கணேஷ் நிறுவியுள்ளார்.

திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அறிமுகப்படுத்துகிறது.

இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் முதல் ஆல்பம் பாடலாக Criminal Crush வெளியாகிறது.

இப்பாடலை Vels Film International நிறுவனம் தயாரித்து வெளியாகி வெற்றி பெற்ற “கோமாளி” படத்தின் இணை இயக்குநர் ருத்ரா மணிகண்டன் மற்றும் “பப்பி” பட இணை இயக்குநர் க.ச. ஆனந்த் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

Dream Big Entertainments நிறுவனத்தின் சார்பில் நீரஜ் M இந்த ஆல்பத்தினை தயாரித்துள்ளார்.

இப்பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்களும், சூப்பர் சிங்கர் புகழ் ஶ்ரீனிசா ஜெயசீலன் அவர்களும் இணைந்து பாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் அனிருத் அவர்கள் இளம் திறமையாளர்களின் திறமையை மதித்து மிக எளிமையுடன் அவர்களுக்கு ஆதரவு தந்து இப்பாடலை பாடித் தந்துள்ளார்.

இப்பாடலில் நாயக பாத்திரத்தை ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் நடிக்க, நாயகி பாத்திரத்தை விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ பட நாயகி தன்யா ரவிசந்திரன் நடித்துள்ளார்.

சுயாதீன இசையமைப்பாளர் Godson இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார்.

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, கோகுல் வெங்கட் படத்தொகுப்பு செய்துள்ளார். MGM பாடல் வரிகள் தந்துள்ளார்.

இளம் திறமைகளான அஷ்வின், தன்யா நடிப்பில் வித்தியாசமான வடிவில் அழகான ரொமான்ஸ் பாடலாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது Criminal Crush பாடல்.

Vijay Sethupathi film heroine to romance Cooku with Comali fame Ashwin

‘தர்பார்’ & ‘கர்ணன்’ பட ஸ்டைலில் சூர்யாவின் 40வது பட ஸ்டில் வெளியானது

‘தர்பார்’ & ‘கர்ணன்’ பட ஸ்டைலில் சூர்யாவின் 40வது பட ஸ்டில் வெளியானது

Suriya 40 (1)‘சூரரைப் போற்று’ படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க தனது 40-வது படத்தில் ஒப்பந்தமானார் சூர்யா.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சுபு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இப்பட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கிய போது சூர்யா கொரோனா தொற்றினால் வீட்டில் தனிமையில் இருந்தார்.

விரைவில் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 9 முதல் சூட்டிங்கில் நடித்து வருகிறார்.

அந்த பட ஸ்டில்லை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கையில் ஒரு வாளோடு நிற்கிறார் சூர்யா.

கடந்த வருடம் ரிலீசான ‘தர்பார்’ படத்தில் ரஜினியும் இன்று ரிலீசாகியுள்ள ‘கர்ணன்’ படத்தில் தனுஷும் இதே போன்று மிகப்பெரிய வாளோடு நிற்கும் காட்சிகள் ஸ்டில்கள் வெளியானது.

தற்போது சூர்யாவும் அதே போல் நிற்கும் பட ஸ்டில் வைரலாகி வருகிறது.

Sun pictures shares shooting spot pic of Suriya 40

ஜார்ஜியாவில் ‘தளபதி 65’..; வைரலாகும் விஐய் & நெல்சன் ஸ்டில்ஸ்

ஜார்ஜியாவில் ‘தளபதி 65’..; வைரலாகும் விஐய் & நெல்சன் ஸ்டில்ஸ்

Thalapathy 65 (2)நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர் படக்குழுவினர்.

விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ் முக்கியக் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்பட பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு படக்குழுவினர் ஜார்ஜியாவுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு 3 வாரங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஜார்ஜியா செல்வதற்கு முன் சென்னை ஏர்போர்டில் விஜய் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

தற்போது ஜார்ஜியாவில் தளபதி விஜய்யுடன் நெல்சன் நிற்கும் புகைப்படத்தை படக்குழுவினர் பகிர அதை இணையத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Thalapathy 65 shooting spot pic goes viral

ஹைதராபாத் பறந்தார் ‘அண்ணாத்த’.; டென்ஷனில் ரஜினி ரசிகர்கள்.!

ஹைதராபாத் பறந்தார் ‘அண்ணாத்த’.; டென்ஷனில் ரஜினி ரசிகர்கள்.!

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் உள்ளனர்..

‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.

2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என் அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா 2வது அலை காலத்தில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் அவரது ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Superstar Rajinikanth leaves to Hyderabad for the shooting of his next film Annaatthe

More Articles
Follows