நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு டைட்டில்

நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nithin Sathya and Jai teams up for Jarugandiநடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘ஜருகண்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இது தெலுங்கு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு குறித்து தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறுகையில், “இப்பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே ‘ஜருகண்டி’ முடிவானது.

இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது.

நாங்கள் ஷூட்டிங்கை மிகவும் எதிர் நோக்கியுள்ளோம், ஏனென்றால் இக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாகவும் அசத்தலாகவும் அமைந்துள்ளது.

அருமையான படங்கள் வரிசையாக நடித்து வரும், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் ‘ஜருகண்டி’ ஒரு முக்கிய படமாக இருக்கும்.

பலராலும் கவனிக்கப்படும், எதிர்பார்க்கப்படும் ரேபா ஜான் இப்படத்தின் கதாநாயகி. ரோபோ ஷங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

போபோ சஷி இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பில், அர்வியின் ஒளிப்பதிவில், ரேமியனின் கலை இயக்கத்தில், அஜய் ராஜின் நடன இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது.

இயக்குனர் பிச்சுமணியின் எவ்வளவு திறமையானவர் என்பதை இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள்.” என்றார்.

நிதின் சத்யாவின் ’ஷ்வேத்’ நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சற்றுமுன் இப்படத்தின் மோசன் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Nithin Sathya and Jai teams up for Jarugandi

 

ஹரிஷ் கல்யாண்-ரைஸா இணையும் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

ஹரிஷ் கல்யாண்-ரைஸா இணையும் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raiza romance with Harish Kalyan for the movie titled Pyaar Prema Kaadhal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்களில் மிக முக்கியமானவர்கள் ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண்.

இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்படத்தை இளன் என்பவர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு பியார் பிரேமா காதல் என பெயரிட்டுள்ளனர்.
ராஜராஜன் மற்றும் இர்பான் மாலிக் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Raiza romance with Harish Kalyan for the movie titled Pyaar Prema Kaadhal

ppk first look

மெர்சல் படத் தயாரிப்பாளருடன் இணையும் தனுஷ்

மெர்சல் படத் தயாரிப்பாளருடன் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush teams up with Sri Thenandal films for their 102 filmசில தயாரிப்பு நிறுவனங்கள் பத்து பதினைத்து படங்களை தயாரிப்பதற்குள் முடங்கிவிடும்.

ஆனால் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 100 படங்களை தயாரித்து இன்றும் சினிமாவில் கொடி கட்டி நிலைத்து நிற்கிறது.

ஒரு மாதத்திற்கு (அக். 18) முன்பு இந்த நிறுவனம் தயாரித்த மெர்சல் படம் வெளியானது.

இந்நிலையில் தன் அடுத்த படைப்பாக சுந்தர் சி. இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தை தயாரிக்கிறது.

இதனையடுத்து தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.

Dhanush teams up with Sri Thenandal films for their 102 film

கிரிக்கெட் கோப்பையை திட்டம் போட்டு திருடு(ற)ம் கூட்டம்

கிரிக்கெட் கோப்பையை திட்டம் போட்டு திருடு(ற)ம் கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thittam Poattu Thirudura Kootam movie stillsசுதர் இயக்கத்தில் கயல் சந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

மிகவும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இவர்களுடன் சாட்னா டைடஸ், சுமார் மூஞ்சி டேனி, சாம்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்க, கயல் சந்திரனின் அண்ணன் ரகுநாத் தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் இதுவரை வெளியான கிரிக்கெட் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆம்.. இது கிரிக்கெட் கோப்பையை திருடுவதை கதைக்கருவாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட்டை மையப்படுத்திய பாடலை வெங்கட் பிரபு, பிரேம்ஜி இணைந்து பாடியுள்ளனர்.

விஜய்25+மெர்சல் 50… ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க திட்டம்

விஜய்25+மெர்சல் 50… ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayவிஜய் தன்னுடைய சினிமா கேரியத்தில் 25வது வருடங்களை கடந்துவிட்டார்.

அவரின் 25வது வருடதில் வெளியான படம் மெர்சல்.

தற்போது இப்படம் 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.

எனவே, விஜய்யின் 25வது வருடத்தையும், மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தோடு சேர்த்து பிரம்மாண்டமாக கொண்டாட ரோஹினி சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Happy to announce #Thalapathy @actorvijay s 25 years mark along with #Mersal 50 will be celebrated grandly in ur very own @RohiniSilverScr
Expect Big ! Experience Big ! #Fansfort

— Rhevanth Charan (@rhevanth95) November 16, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களிடம் விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களிடம் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jalli kattu protestகடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி லட்சக்கணக்கானோர் மெரினாவில் திரண்டனர்.

ஆரம்பத்தில் அறவழியில் இந்த போராட்டம் தொடங்கியது.

ஆனால் ஒரு சிலரால் இறுதியில் தடியடியில் முடிந்தது.

அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தற்போது விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.

இதில் ஒரு சில நடிகர்களும் நேரிடையாக கலந்துக் கொண்டனர்.

அவர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பபடவுள்ளதாக ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரணை செய்யும் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் விஜய், RJ பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows