மதுரை ஒத்தக்கடை பகுதியில் தன் கட்சி சார்பான தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார் சீமான்.
அப்போது அவர் பேசியதாவது…
நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி.
உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும். நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும்.
நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது.
வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன்” எனப் பேசினார் சீமான்.
சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் கிரீஸ் டப்பாவை கவுண்டமணி மீது எட்டி உதைப்பார் செந்தில் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
சீமானின் இந்த காமெடியைப் மையப்படுத்தி நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகிறது.
Netizen criticise seemans today speech