நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படம் கொரியன் பட ரீமேக்..?

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படம் கொரியன் பட ரீமேக்..?

New Project (2)‘நெற்றிக்கண்’ என்ற படத்தின் மூலம் தன் காதலன் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார் நயன்தாரா.

இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பட சூட்டிங்கை உடனடியாக ஆரம்பித்துள்னர்.

அவள் படத்தை இயக்கிய மிலண்ட் ராவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு வெளிவந்த கொரியன் படமான ‘பிளைண்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் நெற்றிக்கண் என்ற தகவல்கள் வந்துள்ளன.

பார்வை திறனற்ற ஒரு பெண், ஒரு கொலை வழக்கை புத்திசாலித்தனமாக விசாரணை செய்வதுதான் படத்தின் கதையாம்.

ஆன் சாங் ஹுன் இயக்கியிருந்த இப்படத்தில் கிம் ஹாநீல் நாயகியாக நடித்திருந்தார். மேலும் அவர் அந்த படத்திற்காக இரண்டு விருதுகளைப் பெற்றிருந்தார்.

ரஜினி-தனுஷ் வழியில் ஆங்கில படத்தில் சம்பத் ராம்.

ரஜினி-தனுஷ் வழியில் ஆங்கில படத்தில் சம்பத் ராம்.

New Project (1)ரஜினியுடன் கபாலி, கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் விஜய், அஜித் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளவர் சம்பத் ராம்.

கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம் இவர்.

இந்த நிலையில் முதன் முறையாக ‛பியர்ல் இன் தி பிளட்’ என்ற ஆங்கில படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

செவன் ஹில்ஸ் பிக்சர்ஸ் சார்பில் கனடா வாழ் தமிழரான கென் கெண்டையா தயாரித்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

எம்.எஸ்.சதீஷ் / ஜெயந்தி சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய சேன்சூ லட்சுமி இசையமைத்துள்ளார்.

கனடாவிலும், தமிழ்நாட்டிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தமிழ் சினிமாவில் ரஜினி, தனுஷ் உள்ளிட்டோர் ஆங்கில படத்தில் நடித்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் இணைந்துள்ள சம்பத் ராம் அவர்களையும் வாழ்த்துவோம்.

‘CM-கேப்மாரி’; விஜய் தந்தை எஸ்ஏசி-க்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

‘CM-கேப்மாரி’; விஜய் தந்தை எஸ்ஏசி-க்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

New Projectசென்னைக்கு மிக அருகிலுள்ள பையனூரில் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் கட்டப்படுகிறது.

அதாவது ஒரு சினிமா உருவாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நகரத்தில் இருக்கும்.

இதே நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு அரங்கம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இதன்படி ஒரு கோடி ரூபாயை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெப்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…

தமிழக அரசும், முதல்வரும் திரைப்படத்துறைக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‛சி.எம்.கேப்மாரி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார்.

இதற்கு எங்கள் கண்டத்தை தெரிவிக்கிறோம். அவர் பட டைட்டிலை மாற்ற வேண்டும்.

அதுபோல் தமிழர்களுக்கு எதிராக பேசி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் அதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் பேரரசு

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் பேரரசு

Perarasu to Direct Vijays Thalapathy 65விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படம் திருப்பாச்சி. இப்படத்தை இயக்கியவர் பேரரசு. 2005ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது.

இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் ஆனது.

இதனையடுத்து சில தமிழ் படங்களை இயக்கிய இவர் மலையாளத்திலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளார்.

பிகில் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம், ஆகிய படங்களை முடித்துவிட்டு தளபதி 65 படத்தில் விஜய் அவருடன் இணையவுள்ளார்.

காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பேரரசுக்கு, என்னுடைய வாழ்த்துகள்” என்று ஜாக்குவார் தங்கம் பேசியதால் இந்த தகவல் உறுதியாகியுள்ளது எனலாம்.

Perarasu to Direct Vijays Thalapathy 65

மம்மூட்டி – நயன்தாராவுடன் இணையும் விஜய் ஆண்டனி..?

மம்மூட்டி – நயன்தாராவுடன் இணையும் விஜய் ஆண்டனி..?

Vijay Antony also part of Mammootty Nayantharas Malayalam movieபாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் உள்ளிட்ட பல படங்களில் மம்மூட்டி அண்ட் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை விபின் என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது அவருக்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் விஜய்ஆண்டனி மலையாள சினிமாவில் அறிமுகமாவார் எனத் தெரிகிறது.

Vijay Antony also part of Mammootty Nayantharas Malayalam movie

மனித கம்ப்யூட்டராக மாறினார் அஜித்தின் லேட்டஸ்ட் நாயகி

மனித கம்ப்யூட்டராக மாறினார் அஜித்தின் லேட்டஸ்ட் நாயகி

Vidya Balans First Look from Human Computer Shakuntala Deviநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

இவர் தற்போது கணிதவியலாளர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

சகுந்தலாதேவி என்ற தலைப்பு அருகே மனித கம்யூட்டர் என்ற வார்த்தையும் உள்ளது.

இப்படத்தை அடுத்தாண்டு 2020ல் கோடையில் வெளியிட உள்ளனர்.

Vidya Balans First Look from Human Computer Shakuntala Devi

More Articles
Follows