OFFICIAL ‘நெற்றிக்கண்’ இயக்குனருடன் இணையும் ‘பாகுபலி’ வில்லன்

OFFICIAL ‘நெற்றிக்கண்’ இயக்குனருடன் இணையும் ‘பாகுபலி’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி, தசரா பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, தன் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார்.

அவரது அடுத்த திரைப்படம் தெலுங்கு & இந்தி மற்றும் தமிழ் என பன்மொழிகளில் பிரமாண்ட இந்திய திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்தினை Gruham, The House Next Door, அவள் மற்றும் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார்.

இத்திரைப்ப்டத்தின் பணிகள் 2022 துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தினை Spirit Media நிறுவனம் Viswasanti Pictures மற்றும் Veedansh Creative Works நிறுவனஙகளுடன். இணைந்து வழங்குகிறது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த இனிய செய்தி முதன்முதலில் டிவிட்டரில் @VISWASANTIPICTS பக்கத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் இதனை @RanaDaggubati தனது பக்கத்தில் டிவிட் செய்தார். Viswasanti Pictures தெலுங்கு திரையுலகில் 30 வருடங்களாக, கொடிகட்டிப்பறக்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் ஜம்பலக்கடி பம்பா மற்றும் அஞ்சலி சிபிஐ போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட்களை தந்துள்ளது

இந்த இனிய அறிவிப்பை அடுத்து, தயாரிப்பாளர் அச்சந்தா கோபிநாத் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து தகவல்களும், எங்கள் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கமான @VISWASANTIPICTS வழியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Rana Daggubati to star in Milind Rau story/direction in new movie

சந்தானம் & CWC புகழ் இணையும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.; படத்தை பார்க்க லோகேஷ் ஆர்வம்

சந்தானம் & CWC புகழ் இணையும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.; படத்தை பார்க்க லோகேஷ் ஆர்வம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோஜ் பீடா இயக்கத்தில் சந்தானம் ஒரு பெயரிடப்படாத படத்தில் நாயகனாக நடித்து வந்தார்.

இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, விஜய் டிவி புகழ், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணிபுரிந்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மனோஜ் பீதாவின் வஞ்சகர் உலகம் படத்தை நான் மிகவும் ரசித்தேன். தற்போது இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ்.

ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’.

அந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Santhanam’s detective film title revealed

கடன் கட்டாமல் கதறிய ரஜினி உறவினர் மதுவந்தி.; கண்டுக்காமல் கடமையை செய்த அதிகாரிகள்

கடன் கட்டாமல் கதறிய ரஜினி உறவினர் மதுவந்தி.; கண்டுக்காமல் கடமையை செய்த அதிகாரிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் உறவினர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்.

இவரின் மகளும் நடிகையுமான மதுவந்திக்கு சென்னை தேனாம்பேட்டை அடுத்து ஆழ்வார் பேட்டையில் ஒரு வீடு உள்ளது.

இந்த நிலையில், அந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் மதுவந்தி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீனஸ் காலனியில் வாங்கப்பட்ட அந்த வீட்டிற்காக வாங்கிய கடனில் 1.26 கோடி ரூபாயை மதுவந்தி திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற அந்த நிதி நிறுவனத்தினர் மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகளுடன் வந்து சீல் வைத்தனர்.

தேனாம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினகுமார், தேவராஜ் பாதுகாப்பில் அட்வகேட் கமிஷனர் வினோத் குமார் சீல் வைத்து வீட்டின் சாவியை பைனான்ஸ் கம்பெனியின் அதிகாரி உமாசங்கரிடம் ஒப்படைத்தார்.

WHY THE AUTHORITIES HAD SEALED MADHU VANTHI HOUSE IN CHENNAI?

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வரும் நந்திதா-வின் ‘ஜெட்டி’

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வரும் நந்திதா-வின் ‘ஜெட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவீனமான இந்த நூற்றாண்டிலும் , கலாச்சாரம் , கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன . அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ஜெட்டி.

கடல்சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல் , அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் ஜெட்டி !

இதில் நந்திதா சுவேதா , புதுமுகம் மான்யம் கிருஷ்ணா , கிஷோர் , மைம் கோபி , சுமன்ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் .

‘ஜில் ஜில் ஜில் ” என்ற இளமை துள்ளலான பாடலுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் தேஜாஸ்வினி.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிகமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளர் கே . வேணு மாதவ்.

ஒரே ஒருமுறை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி கொரோணா காலத்திலே படம் எடுக்க வைத்து , திரைக்கதை எழுதி , யதார்த்தமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பி . சுப்பிரமணியம்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் இணை ஒளிப்பதிவாளர் வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார் .

இயக்குனர் பி. வாசுவின் உதவியாளர் தி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுதி இருக்கிறார் .

கார்த்திக் கொடக்கன்ட்லாவின் இசையில் அத்தனை பாடல்களையும் கவிஞர் டாக்டர் கிருதியா எழுதியுள்ளார்.

விஜய் பிரகாஷ் ,விஜய்யேசுதாஸ் பாலக்காடு ஸ்ரீராம் , ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , வைக்கோம் விஜயலக்ஷ்மி பத்மஜா , ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .

சமீபத்தில் இயக்குனர் பொன்ராம் அவர்கள் தன்னுடைய அடுத்த படமான எம்ஜிஆர் மகன் வெளியீடு வேலைகளில் இருந்த போதிலும் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி தன்னுடைய பொற்கரங்களால் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார்.

Jetty – A Film about the life of People who is dependent on sea

‘அண்ணாத்த’ டீசருக்கு வழிவிட்டு அடுத்த நாளே களத்தில் குதித்த ‘ஜெய் பீம்’ டீசர்

‘அண்ணாத்த’ டீசருக்கு வழிவிட்டு அடுத்த நாளே களத்தில் குதித்த ‘ஜெய் பீம்’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று அக்டோபர் 14 ஆயுதபூஜையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ”அண்ணாத்த டீசர் வெளியானது.

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இருந்து வெளியான அண்ணாத்த மற்றும் சாரைக் காற்றே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அண்ணாத்த படம் அமையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அதன்படி நேற்று வெளியான ‘அண்ணாத்த’ டீசர் இணையத்தை பற்ற வைத்து வரும் நிலையில் சூர்யா நடித்து வரும் ‘ஜெய் பீம்’ பட டீசரை இன்று அக்டோபர் 15 மதியம் 2 மணிக்கு வெளியிட்டனர்.

‘ஜெய் பீம்’ படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார்.

இதில் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ல் அமேசான் ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுகிறார் இப்பட தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா.

Actor Suriya’s JaiBhim Teaser will be revealed today at 2:00 PM

சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து மழையில் ரியோ & பவித்ராவின் ‘கண்ணம்மா என்னம்மா’

சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து மழையில் ரியோ & பவித்ராவின் ‘கண்ணம்மா என்னம்மா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது.

அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.

நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

*நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…*

ரியோ என் மச்சான். இவங்களோட திறமைய நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கொஞ்ச வாரம் முன்னாடி, என்னோட சாங் ரிலீஸானப்ப ரியோவை கால் பண்ணி, மச்சான் உன்ன கூப்பிடனுமானு கேட்டேன், ஆனா உன் போட்டோ இருந்தாவே, நான் வந்துருவேனு சொன்னான். அந்தளவு நாங்க க்ளோஸ். பவித்ரா பத்தி இங்க சொல்லனும் அவங்க ஒரு நல்ல குக். இவங்க ரெண்டு பேருமே எங்க செல்லம். இவங்க நடிச்ச பாடல் கண்டிப்பா பெரிய ஹிட்டாகும் நன்றி.

*பாடகர் ஷாம் விஷால் பேசியதாவது..*

பிரிட்டோ போன் செய்து கண்ணம்மா என ஒரு பாடல் இருக்கு பாடுகிறாயா எனக் கேட்டார். நான் கண்ணம்மா என ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பாடலும் பாடியதில்லை. அதற்காகத் தான் காத்திருந்தேன் அதனால் உடனே ஓகே சொன்னேன். கண்ணம்மா பாடல் எனக்கு மிக முக்கியமான பாடலாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

*Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது..*

எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே பாடல்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்.

அதைத்தான் தற்போது செய்து வருகிறோம். குட்டிப்பட்டாஸ் பாடல் செய்து கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக ரியோவை சந்தித்த போது, எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த ஐடியா பற்றி சொன்னார் அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கினோம்.

*Noise & Grains சார்பில் மகாவீர் பேசியதாவது…*

Noise & Grains மூலம் இந்த முயற்சி பல வருடங்களாக நாங்கள் பேசி வந்ததுதான். இந்த நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம்.

அனிருத் வைத்து ஆரம்பித்ததில் இருந்து, நிகில் அண்ணாவை வைத்து பிரஸ் மீட் வைத்து, அறிமுகப்படுத்தியது வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

*இயக்குநர் பிரிட்டோ பேசியதாவது..*

ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்று தான் சொன்னான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது.

ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.

*நடன அமைப்பாளர் அபு & சால்ஸ் கூறியதாவது…*

எனக்கு முதன் முதலில் ஆல்பம் செய்த போது பயமாக இருந்தது. இப்போது பயம் போய் விட்டது. பிரிட்டோ மிகப்பெரிய சுதந்திரம் தந்தார். ரியோ, பவித்ரா பெரிய அளவில் ஒத்துழைப்பு தந்தனர். அவர்கள் நிறைய டேக் எடுக்கவில்லை. மிகச்சிறப்பாக செய்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எங்களையும் உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள் நன்றி.

*நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…*

ஒரு பிரமாண்ட ஆடியோ லாஞ்ச் போல் இது இருக்கிறது. இதனை உருவாக்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பிரிட்டோ என் அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள். பாடல் மிக அருமையாக இருந்தது. பெரும் பிரபலங்களை மேடையிலேயே இயக்கும் நிகில் இப்போது படம் நடித்து முடித்து விட்டார் அவருக்கு வாழ்த்துக்கள். ரியோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

*ஈரோடு மகேஷ் பேசியதாவது…*

அன்புத்தம்பி ரியோ எனக்கு மிகவும் பிடித்தவர். ரியோவுக்கும், பவித்ராவிற்கும் வாழ்த்துக்கள். சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வளர்த்து விடும் Noise & Grains க்கு வாழ்த்துக்கள் நன்றி.

*ராஜமோகன் பேசியதாவது..*

விஜய் டீவி பிரபலங்கள் இங்கு நிறைந்துள்ளார்கள். குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திய பவித்ராவிற்கு, இந்த மேடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

எங்கு சென்றாலும் மனைவியை தைரியமாக அழைத்து செல்லும் எங்கள் தம்பி ரியோவிற்கு வாழ்த்துகள். இந்தப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

*டி எஸ் கே பேசியதாவது…*

கண்ணம்மா எல்லோருக்கும் வெற்றியை தந்துள்ளது. அதே போல் ரியோ பவித்ராவிற்கு இந்த பாடல் வெற்றியை தர வாழ்த்துக்கள். பிரிட்டோ என்னுடன் காலேஜில் படித்தவர், அவருடைய மேடையில் இன்று நிற்பது மகிழ்ச்சி. கார்த்தி எதை செய்தாலும் பிரமாண்டமாக செய்கிறார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்ணம்மா பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள்.

*சூப்பர் சிங்கர் ஷோ இயக்குநர் ரௌஃபா பேசியதாவது..*

சுயாதீன கலைஞர்கள் நிறைய பேர் வரவேண்டும் என இரண்டு வருடம் முன்னரே ஏ. ஆர்.ரஹ்மான் சார் சொல்லியிருக்கிறார். அதே போல் Noise & Grains புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தப்பாடல் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

*நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசியதாவது…*

முதன் முதலா ஹாலிவுட்டில், பாலிவுட்டில் வந்துகொண்டிருந்த ஆல்பம் தமிழில் வராதா என நினைப்பேன். இப்போது சில பாடல்கள் தமிழில் வந்து ஹிட்டாக ஆரம்பித்துள்ளது. இப்போது ரியோ நடித்து பாடல் வந்திருப்பது மகிழ்ச்சி. ரியோ, பவித்ரா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

*பிக்பாஸ் புகழ் சோம்சேகர் பேசியதாவது…*

இந்த பாடல் பிரிட்டோ ஒரு சாதாரண வெர்ஷனாக போட்டு காட்டினார். பின் இதனை முழுப்பாடலாக அழகாக உருவாக்கியுள்ளனர். பிரிட்டோ சூப்பராக செய்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துகள். பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

*நடிகர் பிரஜின் பேசியதாவது….*

ரியோ எனக்கு பிறகு ஆங்கராக வந்தவர் என்றாலும் இன்று அவர் ஜெயிப்பது மிக மகிழ்ச்சி. பிரிட்டோ என்னுடன் நடித்துள்ளார் ஆனால் அப்போதே உனக்கு இயக்கம் தான் சரியாக வரும் என்று சொன்னேன். இப்போது இம்மாதிரி பாடல்கள் வந்து, ஜெயிப்பது மகிழ்ச்சி.

எல்லோருக்கும் வெற்றி மிகவும் முக்கியம் ரியோ, பவித்ரா நன்றாக செய்துள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

*நடன இயக்குநர் சாண்டி பேசியதாவது..*

பாடல் செமையா இருக்கு, சூப்பரா இருக்கு. ஒரு பாடல் பார்த்தால் ஜாலியாக இருக்கனும் அதை சூப்பராக செய்திருக்கிறார்கள். அபு, சால்ஸ் டீமாக கலக்கியிருக்கிறார்கள். ரியோ முன்னாடியே இந்த பாடலை காட்டி விட்டார். பவித்ரா சூப்பரா டான்ஸ் ஆடுவார் இப்பாடலில் அருமையாக செய்துள்ளார். பிரிட்டோ நன்றாக இயக்கியிருக்கிறார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

*நடன இயக்குநர் ஃஷெரிஃப் பேசியதாவது..*

ரியோ, பவித்ரா இருவருமே சூப்பர் டான்ஸர்ஸ் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அபு என்னிடம் வேலை பார்த்தார் அவர் தனியாக செய்த பாடலை பார்க்கத்தான் வந்தேன். இந்த மாதிரி தனி ஆல்பங்கள் வருவது மகிழ்ச்சி. இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

*நடிகர் ரியோ பேசியதாவது…*

என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார்.

Noise & Grains மிக அழகாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம் தான் இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலை பார்த்து ரசியுங்கள் நன்றி.

*பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது…*

ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains க்கு நன்றி.

இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இயக்கம் – பிரிட்டோ JB
இசை – தேவ் பிரகாஷ்
பாடல்கள் – A S தாவூத்
பாடியவர்கள் – ஷாம் விஷால்
நடனம் – அபு & சால்ஸ்
ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா
படத்தொகுப்பு – கிருஷ்ணா குமார் கிரியேட்டிவ் டைரக்டர் – கார்த்திக் ஶ்ரீனிவாஷ்
பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக் கண்டன்ட் டைரக்டர் – டோங்க்லி ஜம்போ
கலை – சசிகுமார்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
கலரிஸ்ட் – ப்ராங்ளின் V
பப்ளிசிட்டி டிசைனர் – சிவா தமிழரசன் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வைஷாலி SV

Celebrities wishes to Rio and Pavithra for Kannamma Eannamma

More Articles
Follows