சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

நயன்தாராவுடன் இணைந்து அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியானது.

இதில் நாயகியாக நடித்துள்ளதாலும் தன் சொந்த படம் என்பதாலும் இப்படம் தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நயன்தாரா.

அடுத்த தயாரிப்பாளர்கள் படம் தயாரித்தால் அந்த புரோமோ நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத நயன்தாரா அவரின் பட நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக் கொள்கிறாரே என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இவர் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சி நேற்று விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பானது.

அப்போது..” தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது” என்றார்.

எனவே திருமணம் எப்போது? என தொகுப்பாளர் கேட்டார்

“விரைவில் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன்.

ஆனால், எல்லோருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன்.” எனக் தெரிவித்துள்ளார்.

இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Actress Nayanthara talks about her marriage

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *