ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் தொகுதியை மாற்றிய சீமான்.; அடித்த பல்டிக்கு அதிரடி விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தி இருந்தார்.

அதன்படி நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது.

234 வேட்பாளர்களையும் சென்னை YMCA மைதானத்தில் ஒரே மேடையில் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களும் இருந்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் 50 சதவீத பெண் வாக்காளர்களை சீமான் களமிறக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என பிரச்சாரம் செய்தார் சீமான்.

திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.

எனவே சீமானும் அங்கு தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

இந்த தொகுதி மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார் சீமான்.

“கொளத்தூரில் போட்டியிடலாம் என இருந்தேன். ஆனால் மக்கள் நலன் தான் முக்கியம்.

ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம்.” என விளக்கம் கொடுத்துள்ளார்.

Naam Tamilar leader Seeman to contest in thiruvottiyur assembly constituency

Overall Rating : Not available

Latest Post