தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.
இவருக்கு தமிழகத்திலும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டை விட கேரளாவில் இவருக்கு ரசிகர்கள் பலம் அதிகம்.
மலையாள நடிகர்களுக்கு இணையாக இவரும் அங்கு உருவெடுத்து வருகிறார்.
தற்போது வம்சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’.
தமிழில் இப்படத்திற்கு ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
இப்படத்தில் ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார்.
இதில் அனு இம்மானுவேல், சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
விஷால் – சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Naa Peru Surya also release in Tamil with new title