தமிழ் ஹீரோஸ் சம்பளம் ஓவர்; தெலுங்கு பக்கம் பக்கா : ஞானவேல் ராஜா

தமிழ் ஹீரோஸ் சம்பளம் ஓவர்; தெலுங்கு பக்கம் பக்கா : ஞானவேல் ராஜா

Tamil heros must reduce their Salary to support producers says Gnanavel Rajaஅல்லு அர்ஜுன் நடிப்பில் மே 9ம் வெளிவரவுள்ள தெலுங்கு படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’.

அது தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

எனவே இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசினார். அவர் பேசியதாவது…

50 நாட்கள் நடைபெற்ற ஸ்டிரைக்கால் சின்னச் சின்ன விஷயங்களைச் சரி செஞ்சாச்சு.

ஆனால், நடிகர்கள் சம்பளம் என்ற பெரிய விஷயங்களை சீக்கிரம் சரி செய்யனும்.

தமிழ்ல 100 கோடி வியாபாரம் ஆச்சுன்னா நம்ம ஹீரோக்கள் ரூ. 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க.

ஆனா, தெலுங்குல அப்படியில்லை. 12 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம்தான் கேட்குறாங்க. மேலும் 50 லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்தா போதும்.

தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அருமையான புரிதல் இருக்கு. அதனாலேயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்‌ஷமா இருக்கு.

மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் ஆகுது.

சீக்கிரமா இந்தச் சூழல் இங்கு மாறணும். நான் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிடலாம் என்று கூட நினைக்கிறேன்.” என்று விரக்தியாக பேசினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Tamil heros must reduce their Salary to support producers says Gnanavel Raja

சாந்தினி நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ஐல

சாந்தினி நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ஐல

aila stillsசினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.

மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..

அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..!

ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.

திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.

தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள்.

ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.

பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ் I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

துக்க வீட்டுக்கு செல்லும் வழியில் டீக்கடைக்காரரை அசத்திய அஜித்

துக்க வீட்டுக்கு செல்லும் வழியில் டீக்கடைக்காரரை அசத்திய அஜித்

thala ajithநடிகர் அஜீத்துக்கு சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல பெயர் உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அவரது நல்ல எண்ணங்கள்தான்.

ஒருநாள் இரவு அஜீத் தனது மேனேஜருக்கு ஒரு அவசர வேலையாக போன் செய்தாராம்.

அப்போது அவரது போனை வேறு ஒருவர் எடுத்து மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என கூறினாராம்.

உடனே போனில் பேசியவரிடம் விலாசத்தை கேட்டுக் கொண்டு அந்த ஏரியா சென்றாராம்.

ஆனால் சரியான வழி தெரியவில்லை என்பதால் அங்கிருந்த டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டுள்ளார்.

அதன்பின்னர் துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய அஜித் வழி சொன்ன டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் பணத்தை கொடுத்து துக்கவீட்டில் இருக்கும் எல்லோருக்கு டீ கொடுங்கள் என்றாராம்.

இந்த சம்பவம் டீக்கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.

விவாகரத்தான 52 வயது மிலிந்த் சோமன் 26 வயது பெண்ணை மணந்தார்

விவாகரத்தான 52 வயது மிலிந்த் சோமன் 26 வயது பெண்ணை மணந்தார்

milind soman and ankita konwarசரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்த `பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்.

மேலும் தொடர்ந்து கார்த்திக்குன் `அலெக்ஸ் பாண்டியன்’, `பையா’ படங்களிலும் நடித்தார்.

தற்போது இவருக்கு 52 வயதாகிறது.

இந்நிலையில் இவர் அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை மணந்தார்.

கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் இவர்களது திருமணம் நடந்தது.

முன்னதாக மிலிந்த் பிரஞ்சு நடிகை மைலன் ஜம்பனோயை திருமணம் செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் நடிகர் கூறியதாவது… “மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணமா என்கிறார்கள்.

எனக்கு மற்றவர்கள் பேசுவது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் எங்கள் காதலைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது” என்றார்

அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

rajinikanth and gurumoorthyநான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் கட்சியை அறிவிப்பேன் என ஒரு சில வரிகள்தான் பேசினார் ரஜினிகாந்த்.

அதற்குள்ளேயே ரஜினியை விமர்சித்து பலரும் பல விதமாக பேசி வருகிறார்கள்.

ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களை கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ரஜினியை நோக்கி கேட்கின்றனர்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் ரஜினியை டார்கெட் செய்தே தங்களது அரசியலை முன்னெடுத்து செல்ல நினைக்கின்றனர்.

இதை எல்லாம் கண்டுக் கொள்ளாத ரஜினி தன் மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து தொண்டர்கள் சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு 10 நாட்கள் தங்கிருந்து மருத்துவ பரிசோதனை செய்யவுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியை இன்று காலை போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

அவர்கள் என்ன விவகாரம் குறித்து ஆலோசித்தார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்காவில் கட்சி சம்பந்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஆப்’ தொழில் நுட்பம் சார்ந்த பணிகளையும் ரஜினி பார்வையிட உள்ளாராம்.
மேலும் பல கட்ட நிபுணர்களையும் அரசியல் ஆலோசகர்களை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் பாராட்டில் மெய் சிலிர்த்த மெர்க்குரி படக்குழுவினர்

ரஜினியின் பாராட்டில் மெய் சிலிர்த்த மெர்க்குரி படக்குழுவினர்

Rajinikanth praises Karthik Subbarajs Mercury movie and his teamகடந்த 50 நாட்களாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடந்து வந்ததால் தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஆனால் வசனங்களே இல்லாத மெர்க்குரி படத்தை தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் ரிலீஸ் செய்தார் இதன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ்.

அதன்பின்னர் ஸ்டிரைக் முடிவுக்கு வரவே, ஏப்ரல் 20ஆம் தேதி அப்படம் தமிழகத்திலும் வெளியானது.

வசனங்களே இல்லாமல், சைலண்ட் த்ரில்லராக உருவான இப்படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையிலேயே பயணித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜனிகாந்த் படக்குழுவினரை தன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார்.

படம் குறித்து ரஜினி கூறும் போது, பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமரா, இசை, ஸ்டன்ட் என எல்லாமே அருமை. மொத்தத்தில் சிறந்த படம் என்று பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதை கார்த்திக் சுப்புராஜ்தான் இயக்கவுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையைமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajinikanth praises Karthik Subbarajs Mercury movie and his team

rajini with mercury team

More Articles
Follows