தயாரிப்பாளர்கள் சங்க வெற்றியை கொண்டாட Mr சந்திரமெளலி திட்டம்

தயாரிப்பாளர்கள் சங்க வெற்றியை கொண்டாட Mr சந்திரமெளலி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mr Chandramouli team plan to celebrate TFPC strike successமார்ச் 01, 2018 முதல் தமிழ் திரைப்படங்கள் சம்மந்தமான பட ரிலீஸ், சூட்டிங், பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை.

கியூப் மற்றும் யூ.எப்.ஓ போன்ற டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்களின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

தற்போது கட்டண குறைப்புக்கு கியூப் நிறுவனம் இறங்கி வந்துள்ளதாலும் மற்ற திரையுலகின் மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாலும் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா நிகழ்வுகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இதன் முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா கசண்டரா நடிப்பில் திரு இயக்க ஜி.தனஞ்செயன் தயாரித்துவரும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை வெளியீடு, ஸ்ட்ரைக்குப் பின் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாகும்.

சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ஏப்ரல் 25 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பங்குபெறுகிறார். இது அவருக்கான பாராட்டு விழாவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Mr Chandramouli team plan to celebrate TFPC strike success

நடிகர்களின் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு?; விஷால் அதிரடி

நடிகர்களின் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு?; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal going to meet Top actors to reduce their high salary48 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் திரைத்துறை அமைப்பினர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

“ஏப்ரல் 20ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் நாளை மறுநாள் தொடங்கும். திரையுலகினரின் வேலை நிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் இந்த வாரம் வெளியாகும்.

தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்க உள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதலாக எங்கும் டிக்கெட் விற்கப்படாது. முறையாக கண்காணிக்கப்படும்.

சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். நடிகர்களின் சம்பள விவகாரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

பிரச்னை தீர உதவிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெஃப்சி தொழிலாளர் சங்கத்திற்கு நன்றி” என்றார்.

Vishal going to meet Top actors to reduce their high salary

ரஜினி படத்துக்கு பரதேசி டைட்டில் வெச்சிருக்கலாம்ல; பாரதிராஜாவுக்கு ஆனந்த்ராஜ் கேள்வி

ரஜினி படத்துக்கு பரதேசி டைட்டில் வெச்சிருக்கலாம்ல; பாரதிராஜாவுக்கு ஆனந்த்ராஜ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Anandraj met Superstar Rajinikanth at his Poes Garden residenceபோயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை இன்று ஆனந்தராஜ் சந்தித்தார். பின்னர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

ரஜினி அவர்களிடம் நிறைய விஷயங்கள் பற்றி பேசினேன்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசியல்வாதிகள் போலத்தான் சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் மீது ரஜினிகாந்த் மிகுந்த அக்கறை வைத்துள்ளார். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு மக்களுக்காக குரல் கொடுக்கிறார்.

காவிரி ஐபிஎல் பிரச்சினை போராட்டங்களின் போது தாக்கப்பட்ட காவல் துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை ஆதரிக்கிறேன்.

அவர் சினிமாவில் போலீஸை தாக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு.

சினிமா பிரச்சினையில் ரஜினி தலையிட முடியாது. அதற்குதான் பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஆனால் ரஜினி ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

அவரை பாரதிராஜா விமர்சனம் சரியல்ல.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தார். உனக்கு அந்த தலைப்பு செட்டாகாது.

ஏன் அவர் பரதேசி என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

அதாவது பிற தேசத்தில் இருந்து வந்தவர் என்ற அர்த்தத்தில் வைத்திருக்கலாம்.

பாரதிராஜா உள்ளிட்டோர் ரஜினியை ஏனோ குறிவைத்து தாக்குகிறார்கள்.“

இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்.

Actor Anandraj met Superstar Rajinikanth at his Poes Garden residence

சேலத்தில் சிம்பு திடீர் சுற்றுப்பயணம்..; அரசியல் நோக்கமா..?

சேலத்தில் சிம்பு திடீர் சுற்றுப்பயணம்..; அரசியல் நோக்கமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் சிம்பு கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால் அதனையடுத்து சிம்பு செய்தியாளர்களை சந்தித்து கன்னட மக்கள் தமிழர்களுக்கு காவிரி நீர் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படி சிலர் வாட்டர் பாட்டில்களில் காவிரி நீரை தமிழர்களுக்கு கொடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை பகிரிந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சேலம் சென்றுள்ளார். அங்கு தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டார்.

அதன்பின் பேசிய சிம்பு, ‘காவிரி பிரச்சனை குறித்து நான் பேசியதற்கு சிறந்த ஆதரவு இருந்தது.

சும்மா பேசிவிட்டு இருந்து விடாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதற்காக பியூஸ் மனுஷிடம் பேசினேன். அவர் நிறைய ஐடியாக்கள் கொடுத்தார்.

இதைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்காக சேலம் வந்தேன். நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை’ என்றார்.

காவிரி நீர் கிடைக்க விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய ராகேஷ்

காவிரி நீர் கிடைக்க விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய ராகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Rakesh made awareness song for Cauvery water Issueமுன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.

காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார்.

சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார்.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன்.

காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள், வலிகள், உணர்வுகள் மத்திய அரசை எட்டவேண்டும் எனும் விதமாக என்னுடைய தனிப்பட்ட முயற்சியாக இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குநர் ராகேஷ்.

தற்போது இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தஞ்சை, திருச்சி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்த பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராகேஷ்.

Director Rakesh made awareness song for Cauvery water Issue

மிஷ்கின்-தர்புகா சிவா கூட்டணியில் தரமணி நாயகன் வசந்த் ரவி

மிஷ்கின்-தர்புகா சிவா கூட்டணியில் தரமணி நாயகன் வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin darbuka sivaதரமணி படத்தில் யதார்த்த நாயகனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் வசந்த்ரவி.

அதனையடுத்து தற்போது அறிமுக இயக்குனர் அருண் மதீஸ்வரன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

வில்லனாக டைரக்டர் மிஷ்கின் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை மனோஜ் என்பவர் ஆர். ஏ. ஸ்டூடீயோ உடன் இணைந்து தயாரிக்கிறார்.

இந்த தகவல்களை படத்தின் நாயகன் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Taramani fame Vasanth Ravi team up with MYsskin and Darbuka Siva

Vasanth Ravi‏ @iamvasanthravi 17m17 minutes ago
Finally, I am very happy to share out the news of my next project, it’s Pure Action film with Director Arun Matheswaran @lukukeku ; starring alongside with one of my fav director #Mysskin ; Music by @DarbukaSiva ; Produced by Manoj @crmk2012 and @RA_Studios_ ; PRO : @onlynikil

More Articles
Follows