நீட் தேர்வுக்கு எதிராக போராடி அடுத்த தலைமுறையைக் காப்போம்..; தனுஷ் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல்

நீட் தேர்வுக்கு எதிராக போராடி அடுத்த தலைமுறையைக் காப்போம்..; தனுஷ் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் போனில் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் 12.9.2021 அன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

“… இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த ஒரு தாய்க்கும் இந்த சோகம் வரக்கூடாது.

எல்லோரும் சேர்ந்து இந்தத் தேர்வுக்கு ஒரு முடிவுகட்டுங்கள்” என்று தனுஷின் தாய் கதறியழுதபோது “…ஈடுசெய்ய முடியாத இழப்பிது.

இழந்த நம் பிள்ளைக்கான ஒப்பாரியில் நானும் பங்கெடுக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக இன்னும் வலுவாகப் போராடி அடுத்த தலைமுறைப் பிள்ளைகளைக் காப்போம்” . என்று ஆறுதல் தெரிவித்தார்.

மாணவர் தனுஷ் அவர்களின் உடலுக்கு மாநில செயலாளர் சரத்பாபு ஏழுமலை அவர்களும், மாவட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களும் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் செல்வி அனுசுயா, திருமதி. அனிதா சசிகுமார், நகர செயலாளர் திரு. கண்ணன், சதீஸ்,ஜெகன், குமரேசன், முரளி, முருகன், ஈஸ்வரன், லக்‌ஷயா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.

MNM leader kamal haasan has condolences over the phone to the parents of a student who committed suicide

Neet Student Dhanush
Neet Student Dhanush
அஜித் அற்புதமான மனிதர்.. அதான் ‘தல’..; வியப்பில் நடிகர் நவ்தீப்

அஜித் அற்புதமான மனிதர்.. அதான் ‘தல’..; வியப்பில் நடிகர் நவ்தீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இது என்ன மாயம்’ படத்தில் 2வது ஹீரோவாக நடித்தவர் நவ்தீப். மேலும் ஆர்யாவுடன் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்திலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த ஏகன் படத்தில் அவரது தம்பியாக நடித்தவர் தான் இந்த நவ்தீப்.

இந்த நிலையில் அஜித்துடன் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில்..“இன்ஸ்பிரேஷன் இப்படித்தான் இருக்கும், திரையிலும் திரைக்குப் பின்னாலும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், “இந்த மனிதர் தூய்மையானவர்.

‘ஹாய்’ என அவர் அழைக்கும் குரல் உங்களை வியக்க வைக்கும்.

அவருடைய எளிமையான குணம், எளிமை அதற்காக தான் அவர் ‘தல’,” எனப் பாராட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் எடுத்துக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Navdeep has a fan boy moment with Thala #Ajith

என் லைஃப் 20/20 வனிதா என போய்விடுமோ-ன்னு பயந்தேன் – லிப்ரா ரவீந்திரன் ஓபன் டாக்

என் லைஃப் 20/20 வனிதா என போய்விடுமோ-ன்னு பயந்தேன் – லிப்ரா ரவீந்திரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது.

அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய….

*நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது…*

நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும் ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம்.

ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. என்னிடமும் அவரிடமும் படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார். படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம்.

இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன்.

இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

இந்தப்படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வரவேண்டும். சமந்தா எனக்கு நண்பர் அவரிடம் அழகாக இருக்கீங்க, தமிழ் பேசறீங்க நான் சொல்லியிருக்கிறேன்.

அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

*நடிகர் யோகிபாபு கூறியதாவது…*

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ரவீந்தர் சார், இயக்குநர் அனைவருக்கும் நன்றி. சாந்தனு ஒரு போன் செய்ததும் வந்து நடித்துதந்தேன் என்று சொன்னார். 15 வருடத்துக்கு முன்னாடி பாக்யராஜ் சார் ஆபீஸ் முன் வாய்ப்புக்காக நின்றிருப்பேன், அப்போது என்னை கவனித்து, பாக்யராஜ் சார் சித்து பிளஸ் 2 படத்தில் ஒரு காட்சியில் வாய்ப்பு தந்தார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது.

அந்த நன்றியுணர்வில் தான் இந்தப்படத்தில் நடித்தேன். இன்னும் எத்தனை படங்கள் சாந்தனு கூப்பிட்டாலும் நடிப்பேன். இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

*நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது…*

இந்தப்படத்தில் மிகவும் பிடித்தது டைட்டில் தான் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார் ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை.

அவர் மிகவும் திறமையானவர் அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப்படமும் வரவில்லை என்றார் உலகத்திலேயே எந்தப்படமும் வரவில்லை அதனால் அவர் கவலைப்பட வேண்டாம்.

நாயகி நன்றாக நடித்திருக்கிறார். பாண்டியராஜ் சார் பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதை தான் ‘இன்று போய் நாளை வா’ என்றார், எனக்கு பிரமிப்பாக இருந்தது.

அதனால் தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார். எனக்கு டான்ஸில் குரு அவர் தான் அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி.

*மயில்சாமி கூறியதாவது….*

என்னுடைய குருநாதர் பாக்யராஜ் சார் தான். நான் ஒரு நடிகரை பார்த்து வர வேண்டும் என நினைத்தது சுருளிராஜன் சார். நான் ஆரம்பத்தில் பாக்யராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்டு நடித்து அவரை டார்ச்சர் செய்திருக்கிறேன். பாக்யராஜ் எம் ஜி ஆர் ஆவி வருவது போல் ஒரு படம் எடுத்தார்.

அதில் எம் ஜி ஆருக்கு நான் தான் வாய்ஸ் குடுத்தேன் அதை எனக்கு கிடைத்த கௌரவமாக நினைக்கிறேன். இந்தப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக செலவு செய்து, காட்சிக்கு என்ன வேண்டுமோ அதை செய்து எடுத்துள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி.

இந்தப்படம் மிக அற்புதமான நகைச்சுவை படமாக இருக்கும். எல்லோரும் நன்றாகவே காமெடி செய்திருக்கிறோம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

*தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது…*

முருங்கைக்காய் சிப்ஸ் பாடல்கள் நன்றாக இருந்தது. இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் ரவீந்தரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு நன்றாக நடிக்க வரும், வில்லனாக வாங்க சார் என்று சொன்னேன் இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.

எத்தனை தோல்வி அடைந்தாலும், அதை கடந்து வருகிறார் ரவீந்தர் மாதிரி தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு அவசியம். சாந்தனு YouTube சேனலில் கலக்கி வருகிறார். அவர் ஒரு படத்தை எழுதி இயக்கி நடிக்க வேண்டும். நாயகி அதுல்யா நன்றாக நடித்திருக்கிறார்.

தரணின் இசையில் மூன்று பாடல்கள் சூப்பராக இருந்தது. தியேட்டருக்கு ரசிகர்கள் திரும்ப வர ஆரம்பித்துள்ளது நிறைய மகிழ்ச்சியை தருகிறது. நிறைய படங்கள் வர வேண்டும், ஜெயிக்க வேண்டும்.

*இயக்குநர் ஶ்ரீஜர் கூறியதாவது….*

நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு திரைக்கதை எழுத முன்னுதாரணமாக இருந்தது பாக்யராஜ் சாரின் ‘திரைக்கதை பேசலாம் வாங்க’ புத்தகம் தான். அவரை வைத்து இயக்கியது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இயக்குநர் வாசு சாரின் மகன் சக்தி தான் தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் நன்றி.

தயாரிப்பாளருக்கு லைன் சொன்னவுடனே அவருக்கு பிடித்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை 2 வருடம் உழைத்து உருவாக்கியிருந்தேன். தயாரிப்பாளர் கேட்டவுடனே உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார். சாந்தனுவுக்கும் கேட்டவுடன் இந்தப்படம் பிடித்துவிட்டது. இந்த டைட்டிலை தந்தது தயாரிப்பாளர் தான். தயாரிப்பாளரின் அக்கறை தான் படம் நன்றாக வர காரணம்.

ஒளிப்பதிவாளர் ரமேஷ் அதிகம் பேச மாட்டார் இப்படம் விரைவாக முடிக்க காரணம் அவர் தான். இசையமைப்பாளர் தரண், படம் ரசிகர்களிடம் சென்று சேர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. அதுல்யா திறமையான தமிழ் பேசும் நடிகை நன்றாக நடித்திருக்கிறார். இந்தப்படம் முழுதாக உருவாக முழுக்காரணமாக இருந்தவர் சாந்தனு தான். அவரது கேரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் ஒரு காமெடி கலாட்டாவாக உங்களை திருப்தி படுத்தும் படமாக இப்படம் இருக்கும் நன்றி.

*நடிகை அதுல்யா கூறியதாவது…*

முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் செய்ய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் அவருக்கு நன்றி. இயக்குநர் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டியுள்ளார் அவருக்கு நன்றி.

நல்ல பாடல்கள் மூலம் படத்தின் வரவேற்புக்கு காரணமாக இருக்கும் இசையமைப்பாளர் தரணுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஊர்வசி மேடமும் இணைந்து நடித்தது பெருமை. சாந்தனு மிக ஸ்வீட்டானவர். இப்படத்தில் மிக ஆதரவாக இருந்தார். படத்தில் நடிக்க நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

*தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது…*

எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் வாழ்க்கை 20/20 வனிதா என போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார்.

என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள். யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி.

Producer Ravindran speech at Murungaikai chips audio launch

விஜய்சேதுபதியின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் வடிவேலு.?

விஜய்சேதுபதியின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் வடிவேலு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருவழியாக 4 வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரீ கொடுக்கிறார் நடிகர் வடிவேலு.

லைகா நிறுவனம் தயாரிக்க சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிவிட்டார்.

இந்த படத்தை அடுத்து சந்திரமுகி-2வில் நடிக்கவுள்ளதையும் ஏற்கனவே வடிவேலு உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் லைகாவின் அடுத்த படத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை நலன்குமாரசாமி இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களான ‘சூதுகவ்வும்’ & ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கியவர் நலன்குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Vadivelu’s next with Vijay sethupathi film director

‘தலைவி’க்கு தலைவர் ரஜினி பாராட்டு..; விஜய்யிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

‘தலைவி’க்கு தலைவர் ரஜினி பாராட்டு..; விஜய்யிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘தலைவி’

விஜய் இயக்கிய இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்து இருந்தனர்.

கருணாநிதியாக நாசரும் ஆர்எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும் சசிகலாவாக பூர்ணாவும் ஜானகியாக மதுபாலாவும் நடித்து இருந்தனர்.

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தியேட்டர்களில் செப் 10ல் தலைவி ரிலீசானது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று செப் 12ல் திரையிடப்பட்டதாம்.

இயக்குனர் விஜய்யை அழைத்து, படத்தின் மேக்கிங் சூப்பர் என மனதார பாராட்டினாராம்.

தலைவர் ரஜினியின் பாராட்டால் தலைவி படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

Super Star Rajinikanth praises Thalaivi film

BREAKING – சிக்கலில் நிற்கும் கவினின் ‘லிப்ட்’..; LIBRA & EKAA நிறுவனங்கள் மோதல்

BREAKING – சிக்கலில் நிற்கும் கவினின் ‘லிப்ட்’..; LIBRA & EKAA நிறுவனங்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் வினித் இயக்கியுள்ள படம் ‘லிப்ட்’. இந்த படத்தில் கவின் ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.

EKAA எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தப் படம் ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

விரைவில் ‘லிப்ட்’ படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் EKAA எண்டர்டெயின்மெண்ட் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்.. ‘லிப்ட்’ பட வெளியீட்டு உரிமையை பெற்ற லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் ஒப்பந்தத்தில் சொன்னது போல நடந்து கொள்ளவில்லை.

எனவே அவருக்கும் இந்த படத்திற்கும் இனி சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை வந்த சில நிமிடங்களில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ரவீந்திரன் சந்திரசேகர் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

லிப்ட் படத்திற்கான 50% பணத்தை கொடுத்து விட்டோம். மீதி பணத்தை ரிலீஸ் சமயத்தில் கொடுப்பதாக சொன்னோம்.

கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் லேட்டானது. அக்டோபரில் வெளியிட உள்ளோம்.

அவர் ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக வேடிக்கையான அறிக்கை வெளியாகியுள்ளது.

லிப்ட் பட வெளியீட்டு உரிமை எங்களிடம் தான் உள்ளது” என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதனால் ‘லிப்ட்’ பாதியில் நிற்கிறது..

Press statements from EkaaEntertainm1 and LIBRA regarding #Kavin’s upcoming movie #Lift

More Articles
Follows