விஜய்சேதுபதி பட விழாவில் பேச மறுத்த இளையராஜா

ilayaraja vijay sethupathiநடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கியுள்ள படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஆண்டனி மற்றும் ஜோக்கர் புகழ் காயத்ரி கிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ளனர்.

இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் விஜய்சேதுபதி பேசியதாவது…

’இந்த இயக்குனர் லெனின், 2013-ல் இந்தக் கதையை எங்கிட்ட சொன்னார்.

இப்போ என்கிட்ட பணம் இல்லை. அப்புறம் தயாரிக்கலாம் என்றேன்.

அவர் என் வார்த்தைகளுக்காக காத்திருந்தார். சினிமா பற்றிய நிறைய தெரிஞ்சி வச்சிருக்கார்.

சூட்டிங் சமயத்துல ஸ்பாட்டுக்கு நான் போகவில்லை. படம் போட்டு பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தோட பாட்டு, பின்னணி இசைக்கு நான் அடிமை. அதுக்கு இளையராஜா சார்தான் காரணம்.

ஒரு தமிழனா, நான் பெருமையா உலகத்தை நோக்கி சொல்ற விஷயம், எங்களுக்கு இளையராஜா இருக்காரு என்பதுதான்” என்றார்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் பேசினார். ஆனால் இளையராஜா பேச மறுத்துவிட்டதையடுத்து விழாவை நிறைவு செய்தனர்.

Merku Thodarchi Malai movie audio launch updates

Overall Rating : Not available

Related News

பிரபல நடிகரான விஜய்சேதுபதி, தன் ‘விஜய்…
...Read More

Latest Post