தருண்கோபி இயக்கத்தில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகன் நடிக்கும் ‘யானை’

தருண்கோபி இயக்கத்தில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகன் நடிக்கும் ‘யானை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Tarun Gopiவிஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , ” மாயாண்டி குடும்பத்தார் ” படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் ” வெறி ( திமிரு – 2 ) ” அருவா இயக்கி முடித்த கையோடு சூட்டோடு சூடாக தற்போது ஒரு ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த ” யானை ” என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

நடிப்பில் யானை பலம் பொருந்திய முன்னனி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகை, நடிகர்கள், நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன்

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கவுளார்.

எடிட்டிங் – வி.டி.விஜயன்

கலை – மணி கார்த்திக்

ஸ்டண்ட் – கனல்கண்ணன்

நடனம் – தினேஷ், பிருந்தா

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – மன்னன்காடு M.குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா

படம் பற்றி இயக்குனர் தருண்கோபி கூறியதாவது..

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாக போக வேண்டும், அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். என்ற மையக்கருத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக, ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதை, மக்கள் அன்றாட சந்திக்கும் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ளேன்.

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது என்கிறார் இயக்குனர் தருண்கோபி.

Director Tarun Gopi’s next film is titled Yaanai

அக்டோபர் 5 முதல் வாரத்தில் 6 நாட்கள்.; அரை நாள் வகுப்புகள்..; புதுச்சேரி & காரைக்காலில் 9-12-ம் வகுப்புகள் அட்டவணை

அக்டோபர் 5 முதல் வாரத்தில் 6 நாட்கள்.; அரை நாள் வகுப்புகள்..; புதுச்சேரி & காரைக்காலில் 9-12-ம் வகுப்புகள் அட்டவணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pondicherry school reopenபுதுச்சேரி மாநிலம் புதுச்சேரி & காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக, புதுவை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது…

”புதுச்சேரி, காரைக்காலில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

ஆனால் வகுப்புகள் 8-ம் தேதி தான் தொடங்கப்படுகிறது.

5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பள்ளி, வகுப்பறைகள் மாணவ, மாணவிகள் வருகைக்காக தூய்மைப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்படும்.

தனிமனித இடைவெளியுடன் இருக்கை அமைத்தல், கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களுக்குக் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

9, 10, 11,12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பள்ளிக்கு வரலாம்.

மாணவர்கள் கட்டாயம் வகுப்பறைக்கு வரவேண்டும் என அவசியமில்லை. அவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது.

மாணவர் பேருந்துகளை இயக்குவது குறித்து வருவாய்த் துறை முடிவு செய்ய வேண்டும்.

தற்போது 6 நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.

திங்கள், புதன், வெள்ளி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை அரை நாள் மட்டுமே வகுப்புகள் இருக்கும்.

மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

இதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிற்கு அருகில் பள்ளிகள் இருக்காது. மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குச் சென்றுகூட அங்குள்ள ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்கலாம்.

மதிய உணவு வழங்குவது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்.

மாணவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு, அறிகுறி இருந்தால் அவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரக்கூடாது. ஆசிரியர்களும் கரோனா பாதிப்பு, அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வரக்கூடாது.

தனியார் பள்ளிகள் முழுநேரம் பள்ளி நடத்த அனுமதி கிடையாது.

இதுகுறித்துக் கல்வித்துறைக் குழு கண்காணிக்கும். விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்.

மாணவர்களுக்கு முகக் கவசம் வழங்குவது பற்றி அரசிடம் தெரிவித்து உள்ளோம்.

முழுமையாகப் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும். மாஹே, ஏனாமில் அந்தந்த மண்டல நிர்வாகிகள் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வார்கள். தற்போது அங்கு பள்ளி திறப்பு இல்லை”.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.

Schools in Puducherry to reopen from October 5

அரசியலுக்கு வராதீங்க.. தாங்க மாட்டீங்க..; பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

அரசியலுக்கு வராதீங்க.. தாங்க மாட்டீங்க..; பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman rajinikanthநாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்ற பனைத் திருவிழாவின் போது செய்தியாளார்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது ரஜினிகாந்த் பற்றி பேசினார் சீமான்.

“ரஜினி அவருடைய கட்சியில் வேறொரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என்று சொன்னதும் அவருடன் இருந்த முரண்பாடு நீங்கிவிட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால்… அவர் அரசியலில் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர்.

நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை அவரால் தாங்க முடியாது.

இமயமலை செல்லுங்கள், புத்தகம் படியுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்” என தெரிவித்துள்ளார் சீமான்.

NTK leader Seeman advice to Super Star Rajinikanth

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இப்பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் லோகேஷ்.்

தற்போது இப்பட முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதனையடுத்து கமல் தயாரிப்பில் சிம்புவை லோகேஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் கமல் படத்தை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

kamal haasan lokesh kanagaraj

Kamal and Simbu joins for a new film ?

சுசீந்திரன் இயக்கத்தில் STR 39..; சூட்டிங் புறப்படும் சிம்பு..ரசிகர்கள் ஹாப்பி

சுசீந்திரன் இயக்கத்தில் STR 39..; சூட்டிங் புறப்படும் சிம்பு..ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR 39வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்பட சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

அதற்குள் ஒரு மாத படப்பிடிப்பில் கிராமத்து கதை ஒன்றில் நடிக்கிறாராம் சிம்பு.

இப்படத்தை சுசீந்திரன் இயக்கவுள்ளார் என்ற செய்திகளை நாம் பார்த்தோம்.

இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்புவின் 39-வது படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாகவும், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்த வாரம் திண்டுக்கலில் தொடங்க உள்ளது.

2021ல் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார் சிம்பு.

சிம்பு சூட்டிங் போனால் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் தானே…

Actor Simbu next with suseenthiran film go on floors

எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்..; விஜய்சேதுபதி ரசிகர்களின் ‘அரசியல்’ போஸ்டர்

எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்..; விஜய்சேதுபதி ரசிகர்களின் ‘அரசியல்’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசினிமா ஹீரோக்கள் கொஞ்சம் பிரபலமானால் அதுவும் கொஞ்சம் அரசியல் பேசிவிட்டால் அவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பது வாடிக்கையாகிவிட்டது.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் இது போன்ற போஸ்டர்களை அடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி ரசிகர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ‘எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்’ என்று போஸ்டர் அடித்துள்ளனர்.

மேலும், அதில் ‘மக்களில் ஒருவனே, மக்களுக்கான ஒருவனே, எங்கள் மக்கள் செல்வனே! விரைவில் வருக’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vijay Sethupathi fans stick political poster in Kallakurichi district

More Articles
Follows