மம்மூட்டி-வரலட்சுமி இணைந்த “பேராசிரியர் சாணக்யன்” ட்ரைலர் இன்று ரிலீஸ்

Mammoottys Perasiriyar Chanakyan trailer will be released 24th September 5pmஅஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்மூட்டி, உன்னி முகுந்தன், முகேஷ், வரலட்சுமி, மஹிமா நம்பியார், பூனம் பஜ்வா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர் பீஸ்.

தீபக் தேவ் இசையமைத்திருந்த இப்படத்தை சி. எச். முகம்மது தயாரித்திருந்தார்.

வினோத் இளம்பள்ளி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜான்குட்டி எடிட்டிங் செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இப்படம் கேரளாவில் ரிலீஸானது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை விரைவில் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் சி. எச். முகம்மது.

தமிழில் இப்படத்தை “பேராசிரியர் சாணக்யன்” என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

மம்மூட்டி பேராசிரியராகவும், வரலட்சுமி போலீஸ் அதிகாரியாகவும், மஹிமா நம்பியார் மாணவியாகவும் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.

மம்மூட்டிக்கும் வரலட்சுமிக்கு நடக்கும் மோதல் காட்சிகள் படத்தின் ஹைலைட்ஸ்.

விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

எனவே இப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியிடவுள்ளனர்.
தமிழ் பதிப்புக்கான வசனத்தை பிரபாகர் எழுதியுள்ளார்.

படத்தில் 5 பாடல்கள் மற்றும் 5 அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளதாம்.

ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா, பீட்டர் ஹெயின் உள்ளிட்ட 5 சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் வடிவமைத்துள்ளனர்.

அதுபோல் 5 பாடல்களையும் 5 நடன இயக்குனர்கள் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 கோடியில் தயாரிக்கப்பட்ட உலகமெங்கும் இப்படம் 35 கோடிவரை தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர்.

அந்த கல்லூரி மாணவர்களுக்கு மற்ற நபர்களால் ஏற்படும் பிரச்சினைகளை பேராசிரியர் எப்படி முறியடிக்கிறார்? என்பது படத்தின் கதை.

மலையாளத்தை போல தமிழிலும் இப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது படக்குழு.

Mammoottys Perasiriyar Chanakyan trailer will be released 24th September 5pm

Overall Rating : Not available

Related News

Latest Post