மலையாளத்தில் இதுவே முதன்முறை..; ‘லூசிபர்’ வசூலை அலறவிட்ட 2018

மலையாளத்தில் இதுவே முதன்முறை..; ‘லூசிபர்’ வசூலை அலறவிட்ட 2018

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2018 பாக்கலையா.?

யோவ் 2018 பாத்துட்டு தான்யா 2023க்கு வந்திருக்கோம்..

அட 2023 ஆண்டுல 2018 ஒரு படம் வந்திருக்கு.. மலையாள படம் சூப்பர் படமாச்சே பாத்தீங்களா.?

அட அத பாக்காம இருப்போமா.. ஆல்ரெடி பார்த்தாச்சு.. படம் செம.. இப்படி நிறைய பேர் சொல்றது நாம கேட்டிருப்போம்.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மலையாளத் திரைப்படம் 2018.

இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெரும் வெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் நடிக்கு நோபின் பால் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வெளியாகி 11 நாட்கள் ஆகும் நிலையில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

இதற்கு முன்னதாக மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் தான் 12 நாட்களில் (குறைந்த நாட்களில்) ரூ.100 கோடி வசூலை அள்ளி அதிவேக சாதனை படைத்திருந்தது.

இதன்மூலம் மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘2018’ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Malayalam film 2018 beats Lucifer box office records

நவீன ராமாயணத்தில் ராமபிரானாக பிரபாஸ்.; அசத்தும் ஆதிபுருஷ் முன்னோட்டம்

நவீன ராமாயணத்தில் ராமபிரானாக பிரபாஸ்.; அசத்தும் ஆதிபுருஷ் முன்னோட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி, விசேடமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதனை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருக்கிறார். இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக இப்படத்தின் முன்னோட்டம் எழுபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது.

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம், இராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காணும் போது, பக்தி உணர்வும், ஆன்மீக உணர்வும் கிளர்ந்தெழுகிறது.

பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றுவதால், இந்த பிரம்மாண்டமான படைப்பு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

அதிலும் ‘பாகுபலி’ மூலம் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நடிகர் பிரபாஸ் ஸ்ரீராமபிரானாக தோன்றி நடித்திருப்பது பார்வையாளர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வசீகரமிக்க கதைக்கு நம்பகத் தன்மையுடன் கூடிய பிரம்மாண்டத்தை இணைத்து.. இந்திய வரலாற்றில் மறக்க இயலாத ஒரு அத்தியாயத்தை ‘ஆதி புருஷ்’ படைத்திருக்கிறது. முன்னோட்டத்தில் ‘அற வாழ்க்கை’ குறித்து ராமபிரானாக நடித்திருக்கும் பிரபாஸ் பேசும் வசனங்கள், தமிழ் ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ‘ஆதி புருஷ்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தை டி சீரீஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யுவி கிரியேசன்ஸின் பிரமோத்- வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Prabhas as lord Ram in the modern Ramayana.; Awesome Adipurush trailer

வாந்தி எடுத்த நடிகர் சாந்தனு.; நினைத்ததை சாதித்த விக்ரம் சுகுமாரன்

வாந்தி எடுத்த நடிகர் சாந்தனு.; நினைத்ததை சாதித்த விக்ரம் சுகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவுல முதன்முதலாக ஒரு படம் இயக்குகின்ற இயக்குனர்கள் எல்லோருமே ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வர வேண்டும் என்று கடுமையாக உழைப்பதுண்டு.

ஏனென்றால் அறிமுக இயக்குனர்கள் அனைவருக்கும் அந்த முதல் படம் தான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற படமாக திருப்புமுனையாக அவர்களது வாழ்க்கையில் அமையும்.

அப்படி தன் முதல் படமான *மதயானை கூட்டம்* படத்திலேயே மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இயக்குனர் *விக்ரம் சுகுமாரன்* தனது இரண்டாம் படைப்பான *இராவண கோட்டம்* திரைப்படத்தை எப்படி எடுத்து இருப்பார் இதோ உதாரணம் சில படப்பிடிப்பு நிகழ்வுகள்.

பொதுவாக மாதங்கள் பன்னிரண்டில் அக்னி நட்சத்திரம் வரும் மாதமான மே மாதம் தலைநகரமான சென்னையிலும் சரி அவரவர் சொந்த ஊரிலும் சரி ஒரு இருபதிலுருந்து இருபைதைந்து நாள் கடுமையான வெயில் தாக்கத்தை சந்திக்க வேண்டும்.

ஒரு சிலர் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கோடை விடுமுறைக்கு சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல் சென்று அந்த வெயிலில் இருந்து தப்பித்து விடுவார்கள்

ஆனால் இவர்கள் செய்யும் வேலை வெயிலில் இருந்து தப்பித்து விடுவது அல்ல.

அந்த வெயிலின் தாக்கத்தையும் அதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பையும் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் காட்சியாக காண்பிப்பது ஒன்று மட்டுமே இவர்களது குறிக்கோள்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் *இராவண கோட்டம்* படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருமே படத்தின் இறுதி காட்சி இவ்வளவு கஷ்டப்பட்டு படமாக்கி இருக்காங்களே எங்க எடுத்திருப்பாங்க, எப்படி எடுத்திருப்பாங்க அப்படின்னு ஆவலா இருப்பீங்க.

அக்னி நட்சத்திர வெயிலில் ராமநாதபுரம் முழுவதும் மண்கள் கருப்பு நிறமாகவும் மணலில் இருக்கும் சிறு சிறு கற்கள் கூட கால் வைத்தால் காலில் காயமாகிவிடும் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் ராமநாதபுரத்தில் தான் அந்த இறுதிக் காட்சி கஷ்டப்பட்டு படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் போது துணை நடிகர்களுக்கு ஏதாவது உடல் ரீதியான கோளாறு ஆகிவிட்டாலே படபிடிப்பு பாதியில் நின்று விடும்.

அல்லது படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக பத பதைத்து விடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஹீரோவான சாந்தனு அவர்களுக்கு அந்த வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் வாந்தியும் லேசான மயக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்படி உடல் ரீதியான தொந்தரவுகளை அனுபவித்துக் கொண்டு சாந்தனு சிறிது நேரத்திலேயே தன்னை தயார் படுத்தி கொண்டு சிரமத்தை பார்க்காமல் நடித்துக் கொடுத்தது மிகவும் பெருமையாக இருந்தது என்று இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்தார்.

படபிடிப்பில் இருந்த செல்வம் என்கிறவர் கூட படப்பிடிப்பின் போது திடீரென அந்த அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் தாங்காமல் சிறிது நேரம் மயக்கம் அடைந்து விட்டார் நாங்கள் என்னவோ ஏதோ என்று நினைத்து ஓடி பார்க்கையில் சிறிது நேரத்தில் முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் மனிதர் எழுந்து விட்டார் அப்பதான் எங்களுக்கு உயிரே வந்தது.

*வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைத்தது வாழ்க்கையில் என்றுமே நிலைக்காது*

இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ, பொருந்தாதோ எங்களின் பட குழுவினர்களுக்கும் பொருந்தும்.

ஏனென்றால் என்னுடைய இயக்கத்தில் கஷ்டப்பட்ட அனைவரும் ரசிகர்கள் தந்த வெற்றியின் மூலம் பலனும், பயனும் அடைந்து விட்டோம்.

தமிழ் ரசிகர்கள் தந்த இந்த உற்சாக வெற்றி என்னுடைய அடுத்த படைப்பிற்கான ஊக்கமாகவே கருதுகிறேன்.

நிச்சயமாக என்னுடைய அடுத்த படைப்பு இதே போல் பரபரப்பான வெற்றி படமாக அமையும் என்பதில் துளி அளவு சந்தேகம் இல்லை.

என்றென்றும் உங்கள் அன்பில் எதிர்பார்ப்பில்…

– விக்ரம் சுகுமாரன்

Director Vikram Sukumaran talks about shathanu dedication in Raavana Kottam

‘பாரதி கண்ணமா’ சீரியல் நடிகை விஜயலட்சுமி காலமானார்

‘பாரதி கண்ணமா’ சீரியல் நடிகை விஜயலட்சுமி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1976-ம் ஆண்டு வெளியான ‘ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.

1980-களில் நடிகர்கள் ரஜினி, கமல் படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சின்னத்திரைத் தொடர்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்களில் நடித்து கவனம் பெற்றார் விஜயலட்சுமி.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அதனால் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

அண்மையில், பாத்ரூமுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் தான் வீடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அவருக்கு வயது 70.

மேலும், இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

bharathi kannamma serial actrees vijayalakshmi passed away

மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கலாய்க்கும் யோகி பாபு

மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கலாய்க்கும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.

இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.

‘பிச்சைக்காரன் 2’, மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள்.

இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸினீக் பீக் தற்போது வெளியாகி உள்ளது. அதில் யோகி பாபு மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் அக்காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pichaikkaran 2 official Sneak Peek

Yogi Babu is mocking Modi’s Digital India

உலகையே எதிர்ப்பார்க்க வைத்த ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி

உலகையே எதிர்ப்பார்க்க வைத்த ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’.

இப்படம் இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது.

அந்த அளவுக்கு அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைந்திருந்தன.

ரூ.1,000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படம் உலக அளவில் கடந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது.

உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படம் உலகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில், ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ படம் ஜூன் 7ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மேலும், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெகட் பிரிவில் விருது வழங்கப்பட்டது.

ஜோ லிட்டேரி, ரிச்சர்ட் பனேகம், எரிக் செயிண்டன், டேனியல் பேரட் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் - தி வே ஆப் வாட்டர்

avatar – The Way of Water releasing on june 7 in ott

More Articles
Follows