பொய்யாக ஒரு நிஜத்தை காட்டி மாட்டிக் கொண்ட ‘மாஃபியா’ டீம்

Mafia movie in trouble by showing photos of Real incident கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்த மாஃபியா படம் கடந்த 2020 பிப்ரவரி மாதம் வெளியானது.

இப்படத்தின் மேக்கிங் பாராட்டும்படி இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் போதை மருந்து கடத்தல் செய்பவருடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறி சிலரின் போட்டோக்களை காட்டியிருப்பார்கள்.

இந்த காட்சியே இப்போது இவர்களை ஒரு பிரச்சினையில் மாட்ட வைத்துள்ளது.

உண்மையில் கனடா நாட்டில் நடந்த புரூஸ் ஆர்தர் என்ற தொடர் கொலையாளியால் கொல்லப்பட்டவர்களின் போட்டோக்கள் அவை என தெரிய வந்துள்ளது.

5 பேரின் புகைப்படங்கள் காட்டப்பட்டது.

அதில் ஒருவரின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் போட்டோவை பயன்படுத்தியுள்ளனர். இது பொறுப்பற்ற செயல் என்று கூறி கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அந்தக் காட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அந்த காட்சியில் உள்ள போட்டோக்கள் மறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த போட்டோ உள்நோக்கமில்லாமல் ஏதேச்சையாக பயன்படுத்தப்பட்டதாக லைகா தெரிவித்துள்ளது.

Mafia movie in trouble by showing photos of Real incident

Overall Rating : Not available

Related News

இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள்…
...Read More
அருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு…
...Read More

Latest Post