பார்த்திபன் வீட்டில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை; வேலைக்காரி திருடினாரா.?

actor parthibanஇயக்குநரும், நடிகருமான பார்த்திபன், சென்னை திருவான்மியூர் உள்ள மேற்கு காமராஜர் நகரில் வசித்து வருகிறார்.

வீட்டின் ஒரு பகுதியையே அலுவலகமாக பயன்படுத்தி வரும் அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு லாக்கரில் இருந்த சுமார் 60 சவரன் நகைகள் திருடு போயிருப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், திருவான்மியூர் காவல் நிலையத்தில் இன்று மீண்டும் புகார் அளித்துள்ளார் அவர்.

வீட்டின் மற்றொரு அறையில் இருந்த நகைகளும் தற்போது திருடு போயிருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கெனவே மாயமான நகைகளுடன் சேர்த்து, மொத்தம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடு போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

வீட்டுப் பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நடிகர் பார்த்திபன் வீட்டில் வேலைபார்க்கும் பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Overall Rating : Not available

Latest Post