ஐசரி கணேஷின் 100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி.; டைரக்டர் & ஹீரோயின் அப்டேட்.!

ஐசரி கணேஷின் 100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி.; டைரக்டர் & ஹீரோயின் அப்டேட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ‘தீ வாரியர்’ என்ற படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் பரிட்சயமானார்.

இதன் பின்னர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘வணங்கான்’ படத்தில் நாயகியாக கீர்த்தி நடித்து வந்தார்.

ஆனால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதால் கீர்த்தியும் விலகினார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி ஷெட்டி.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க மிஷ்கினின் உதவியாளர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க உள்ளார்.

இந்த படம் மிக பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.

Heorine and Director update for Jayam Ravis mega budget film

டவுளத்தான அறிவிப்பு.; ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட அப்டேட்

டவுளத்தான அறிவிப்பு.; ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக கிராமத்து மண் மனம் மாறாமல் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முத்தையா.

குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் என மண்ணின் பெருமைகளை மற்றும் பெண்ணின் பெருமைகளை தவறாமல் இவரது படங்கள் பேசி வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

பெரும்பாலும் சிட்டி பையனாக.. ரொமான்டிக் பாயாக நாம் பார்த்து ரசித்த ஆர்யா-வை இந்தப் படத்தில் முழுக்க முழுக்க கிராமத்துக் காளையாக காட்டியிருக்கிறார் முத்தையா.

ஆர்யாவின் 34வது படமாக இது உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் தான் ஆர்யா நடித்த இந்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வெளியானது.

இதில் நாயகியாக ‘வெந்து தணிந்தது காடு’ பட புகழ் சித்தி இத்னானி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது.

இந்த நிலையில் நாளை ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் தொடர்பாக டவுளத்தான அறிவிப்புக்காக காத்திருங்கள் என தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Await for our Dowlathana Announcement from tomorrow

#KatharBashaEndraMuthuramalingam
#KEMTheMovie

@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @jungleemusicSTH @ActionAnlarasu @Kirubakaran_AKR @ertviji @venkatraj11989 @veeramani_art @iamSandy_Off @shobimaster @AlwaysJani #BabaBaskar #Sheriff @dancersatz @teamaimpr

Kathar Basha Endra Muthuramalingam announcement tomorrow

லோகேஷை கௌரவப்படுத்தி நெல்சனை அசிங்கப்படுத்திய விகடன்.; ரஜினி அட்வைஸ்

லோகேஷை கௌரவப்படுத்தி நெல்சனை அசிங்கப்படுத்திய விகடன்.; ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோலமாவு கோகிலா’ & ‘டாக்டர்’ என இரு வெற்றி படங்களை கொடுத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார் நெல்சன்.

விஜய் நடித்திருந்த இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தன்னுடைய ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சன்க்கு வழங்கினார் ரஜினிகாந்த்.

எனவே ‘பீஸ்ட்’ தோல்வியால் நெல்சனுக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது என ஒரு சிலர் கூறி வந்தனர். ஆனாலும் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து அந்த படத்தை கொடுத்தார் ரஜினிகாந்த்.

மறுபக்கம் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அதிரடியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் சமீபத்தில் விகடன் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது காரிலிருந்து இறங்கும் லோகேஷை மேடை வரை பவுன்சர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.

ஆனால் நெல்சன் வரும்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அவராகவே சென்று மேடையருகே அமர்ந்தார்.

இந்த சம்பவம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சினிமாவில் ஒரு தோல்வி கொடுத்து விட்டால் அவருக்கு திறமை இல்லையா.? எப்போதும் வெற்றிக்கு மட்டும் தான் மரியாதையா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ரஜினிகாந்த் நெல்சனுக்கு அட்வைஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

“கண்ணா இதுபோல பல அவமானங்களை நான் கடந்து இருக்கிறேன்.. அதை எல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன்.

எனவே நீங்கள் அதை பெரிது படுத்தாமல் உங்கள் திறமை மீதும் தொழில் மீதும் கவனம் செலுத்துங்கள். ‘ஜெயிலர்’ படத்தை மிக வெற்றி படமாக கொடுங்கள்” என அட்வைஸ் செய்தாராம் ரஜினி.

இதனால் நெகிழ்ந்து போனாராம் நெல்சன்.

Rajinikanth’s advice to director nelson

அன்றைய ‘விடுதலை’ பட நாயகன் ரஜினி இன்றைய ‘விடுதலை’ படத்திற்கு பாராட்டு

அன்றைய ‘விடுதலை’ பட நாயகன் ரஜினி இன்றைய ‘விடுதலை’ படத்திற்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு ‘விடுதலை’ படம் உருவானது.

இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி கௌதம் மேனன், ராஜுவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் வேளையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி படக்குழுவினரை அழைத்து பேசியுள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் விடுதலைப் படம் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதில்..

“விடுதலை இதுவரை தமிழ் திரையுலகம் பாத்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!

சூரியின் நடிப்பு – பிரமிப்பு
இளையராஜா- இசையில் என்றும் ராஜா
வெற்றி மாறன் – தமிழ் திரையுலகின் பெருமை தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இரண்டாவது பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

1986 ஏப்ரல் 11 தேதி கே விஜயன் இயக்கத்தில் ‘விடுதலை’ படம் வெளியானது. இதில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அன்றைய ‘விடுதலை’ படத்தின் நாயகன் ரஜினி இன்றைய ‘விடுதலை’ படத்தை பாராட்டி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Rajinikanth praises Vetri maaran’s viduthlai

மாலையும் கழுத்துமாக.. பிரபல நடிகருடன் நெருக்கமாகிய கீர்த்தி சுரேஷ்

மாலையும் கழுத்துமாக.. பிரபல நடிகருடன் நெருக்கமாகிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் ‘தசரா’.

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மாமன்னன்’, ’சைரன்’, ’ரகு தாத்தா’ மற்றும் ’ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தெலுங்கில் நானி உடன் இணைந்து நடித்த ’தசரா’ படம் சமீபத்தில் வெளியாகி ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

தமிழ் – தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘தசரா’ பட வெற்றியை நானி – கீர்த்தி சுரேஷ் உஉள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

அது குறித்த புகைப்படங்களை கீர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரே மாலையில் நானி மற்றும் கீர்த்தி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

நானி - கீர்த்தி சுரேஷ்

Keerthy Sureshs recent photo goes viral

ஹாட்ரிக் வெற்றிக்காக 3வது முறையாக இணையும் விஷால் – ஹரி கூட்டணி

ஹாட்ரிக் வெற்றிக்காக 3வது முறையாக இணையும் விஷால் – ஹரி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான டைரக்டர் என்றால் அவர் ஹரி.

அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷால்.

இவர்கள் இருவரும் இணைந்த படம் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’.

இந்த இரு படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தன.

இந்த நிலையில் ஹரி – விஷால் இருவரும் விரைவில் ஒரு புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில்தான் ஹரி மற்றும் அவரது மனைவி பீரித்தா இணைந்து குட் லக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

இன்று அவர்களின் நிறுவனத்திற்கு வருகை தந்தார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

Director hari teamsup with vishal for 3rd time

More Articles
Follows