புகை பழக்கத்தால் பிரிந்த 2K லவ்வர்ஸ் பற்றி சொல்லும் ‘ஒசர காதல்’

புகை பழக்கத்தால் பிரிந்த 2K லவ்வர்ஸ் பற்றி சொல்லும் ‘ஒசர காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக ஆல்பம் பாடல் என்ற தனி பாடல்களுக்கு மக்கள் தரும் வரவேற்பு மிகவும் ஆச்சிரியப்படுத்திக்கிறது.

அந்த வரிசையில் “ஒசர காதல்” என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது.

தற்போது இளம் ஜோடிகளாக வளம் வரும் 2k கிட்ஸ் என்பவர்களுக்குக்காகவே பிரதியேகமாக இந்த பாடல் உருவாக்க பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் எத்தனையோ உண்டு அதில் மிக முக்கியமான ஒன்று புகை பழக்கம்.

இதனால் பிரியும் ஜோடிகள், இறுதியில் காதலை கை விட்டாரா? புகை பழக்கத்தை கை விட்டாரா? என்பது பாடல் முடிவு, முக்கியமான இந்த கருத்தை பேசும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஜாலியாகவும் துள்ளல் இசையோடும் நடனத்தோடும் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாயகனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் பிராசாந்தாக கலக்கிய வசந்த் மற்றும் நாயகியாக பிகில் திரைப்படத்தில் மின்னொளி ஆக கலக்கிய ஆதிரை சௌந்தர்ராஜன் நடித்துள்ளனர்.

கிங் PICTURES இந்த பாடலை தயாரிக்க , இதனை இயக்கியிருக்கிறார் ஹரி பிரகாஷ் , இவர் இதற்கு முன் 80க்கும் மேற்பட்ட குறும் படம் வெப்சீரிஸ் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது,.

( R2BROS ) ராஜா ரவி வர்மா மற்றும் ரவி ராஜ் சக்ரவர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர்,

இவர்கள் இருவரும் 50 க்கும் மேற்பட்ட தனி பாடல்களை இசை அமைத்துள்ளனர்.

ஒளிப்பதிவு சதீஸ்.MS இவர் பலூன் , கோப்ரா போன்ற படங்களில் ஒளிப்பதிவு குழுவில் பணியாற்றியுள்ளார், எடிட்டிங் அஜய் மனோஜ் இவர் பிரபல எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர், கோகுல்,ஹரி,ரவி என்ற மூவரும் பாடலை எழுதியுள்ளனர்.

ஆகாஷ் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார், “என் கணவே” பாடலின் வெற்றியை தொடர்ந்து “ஒசர காதல்” பாடலை தயாரித்து இருக்கிறார் கிங் pictures கௌரி சங்கர், மிகவும் துள்ளலாக இந்த பாடல் வந்துள்ளதால் தீபாவளி அன்று வெளியிட்டு தீபாவளி கொண்டாட்டத்துடம் இதையும் சேர்த்து கொண்டாடலாம் என்று சிரிப்புடன் கூறுகின்றனர் பாடல் குழுவினர்.

King pictures have launched their 2nd single “Osara Kadhal”

JUST IN திரைவானின் சூரியன் ரஜினி உலக விருதுகளை பெற வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்

JUST IN திரைவானின் சூரியன் ரஜினி உலக விருதுகளை பெற வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசினார்.

“அப்போது குருநாதர் கே பாலசந்தர், அண்ணன் சத்யநாராயணன், நண்பர் ராஜ்பகதூர் ஆகியோரை நினைவு கூர்ந்தார். மேலும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில்

பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தன் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்…

திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth (ரஜினிகாந்த்) அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

MK Stalin wishes to Super Star Rajinikanth

தமிழ் கலாச்சார உடையணிந்து தேசிய விருது பெற்ற பார்த்திபன் தனுஷ் விஜய்சேதுபதி

தமிழ் கலாச்சார உடையணிந்து தேசிய விருது பெற்ற பார்த்திபன் தனுஷ் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2021 அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

தமிழ் சினிமா சார்பாக தேசிய விருது பெற்ற கலைஞர்கள்…

சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி. இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோர்..

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது 2வது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருந்தார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்க்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.. இது அவருக்கு முதல் விருது.

ஜூரி சிறப்பு விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் ஹவுஸ்புல் உள்ளிட்ட படங்களுக்காக தேசிய விருதை ஏற்கெனவே பெற்றுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பார்த்திபன், தனுஷ், விஜய்சேதுபதி ஆகியோர் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி சட்டை அணிந்து வந்து விருது பெற்றனர்.

Dhanush Vijay Sethupathi Parthiban wear traditional attire in National film awards

விருது பெற்ற ரஜினி தனுஷ் விஜய்சேதுபதி இமான் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு நாசர் வாழ்த்து

விருது பெற்ற ரஜினி தனுஷ் விஜய்சேதுபதி இமான் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு நாசர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள்.

அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான, தாதா சாகேப் பால்கே விருதினை அவர் பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

அவரது கலைப்பயணம் மேலும் தொடர
அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் இன்று தேசிய விருது பெற்ற கலைஞர்களான…

சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி. இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோருக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி!

அன்புடன்,
நாசர், நடிகர்,
அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பு

Actor Nasser wishes to National award film winners

JUST IN தமிழ் மக்கள் இல்லேன்னா நானில்லை.; தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி பேச்சு

JUST IN தமிழ் மக்கள் இல்லேன்னா நானில்லை.; தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம்.

இந்தியாவின் கௌரமிக்க இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி.

இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி.

இந்த விருதை எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர்.

கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பஸ் டிரைவர் என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன்.

நான் கண்டக்டராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என் நடிப்புத் திறனை பார்த்து திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.

எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன்.

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.”

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Super Star Rajinikanth speech at National Film Awards

ஜெயிலுக்கே விடுதலை கொடுத்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா

ஜெயிலுக்கே விடுதலை கொடுத்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு குற்றவாளி ஜெயிலில் இருந்து விடுதலை (ரிலீஸ்) ஆவதை பார்த்திருக்கோம். ஆனால் ஒரு ஜெயிலே ரிலீஸ் ஆகவுள்ளதை அறிந்திருக்கிறீர்களா.?

ஆம் நீண்ட மாதங்களாக பல்வேறு காரணங்களாக கிடப்பில் போடப்பட்ட ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

அதன் விவரம் வருமாறு..

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’.

இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’.

இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார்,’பசங்க’ பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன்ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர்.

நடனக் காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர். ஜிவிபிரகாஷ் குமாரின் இசையில் கபிலன், சிநேகன் , கருணாகரன், தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய ‘காத்தோடு காத்தானேன்…’ பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டுகோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது. 

இந்த நிலையில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.

விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gv Prakashs Jail movie will be released by Studio Green

More Articles
Follows